03-12-2006, 01:14 AM
ThamilMahan Wrote:நாரதர்,
நீரே இதை வாசித்தபின் தான் இங்கே பிரதிபண்ணியிருப்பீர் என நினைக்கிறேன். ஜீவன் அவர்கள் முறிந்த பனை எனும் நூலை ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிட உதவி செய்தவரேயன்றி வேறெதுவும் செய்யவில்லை. அவர் புத்தகத்தை எழுதவுமில்லை அதன் உள்ளடக்கத்திற்கு அவர் பொறுப்பாளியும் இல்லை. ஒரு தமிழன் எழுதிய புத்தகம் ஹாவார்ட்டில் வெளிவந்தால் அது எல்லாருக்கும் பெருமைதானே என்ற வகையில் தான் செயல்பட்டார். நீர் அந்தநேரத்தில் ஒரு அறிஞராக இருந்து நீர் எழுதிய புத்தகம் ஹாவார்ட்டில் வெளிவர அவரது உதவியை நாடியிருந்தால் இதே உதவியைத்தான் செய்திருப்பார்.
ஹாவார்ட் உலகிலேயே top ten பல்கலைகளில் ஒன்று என்பது எல்லாரும் அறிந்தது. அந்தப் பல்கலையிலேயே விரிவுரையாளராயிருக்குமளவுக்கு கல்வித்தகமை கொண்டவர் அவர். இன்றுகூட அவர் நினைத்தால் ஹாவாட்டுக்கு திரும்பச் சென்று ராஜபோக வாழ்க்கை நடத்தமுடியும் (ஹாவார்ட் பல்கலை விரிவுரையாளரொருவருக்கு கிடைக்கும் ஆகக்குறைந்த சம்பளமே 250,000 டொலர் அதாவது இலங்கை காசுக்கு 250 லச்சம் ரூபாய்கள்). ஆனால் இவையெல்லாவற்றையும் விட்டு தன்னை உருவாக்கிய நாட்டிலே சேவையாற்றவேண்டுமென்ற எண்ணம் கொண்டவர் அவர். இதுவரை அவருக்கு தனது சொந்த நிலத்தில் சேவையாற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை(பேராதனையில் தான் கிடைத்தது). சம்பந்தப்பட்டவர்கள் தலையசைத்தால் இதை அவர் ஒரு அரிய வாய்ப்பாகவே கருதி தன்னாலியன்ற சேவையாற்றுவார்.
இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் நிதர்சனம் மேற்படி கட்டுரையை "who is this fool" என்ற தலைப்பின் கீழ் பிரசுரித்துள்ளது. ஜீவனை "fool" என்று அழைக்குமளவிற்கு இந்தக் கட்டுரையாசிரியரிடம் என்ன கல்வித்தகமை இருக்கிறது என அறிய விரும்புகிறேன் (நிச்சயமாக இந்தக்கட்டுரையாளர் ஒரு குறைகுடம் என்பது தெளிவாகிறது)
உமது கூல் விசுவாசம் எவ்வளவு மடத்தனமானது என்பது மேலே நீர் எழுதியதில் இருந்து நன்கு புலனாகிறது.
முறிந்தபனை கார்வார்ட் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்படவும் இல்லை,கூல் உலகப் பிரசித்தமான கார்வார்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பிக்கவும் இல்லை.
அவர் படிப்பித்தது கார்வி மட் கொல்லேஜ் என்னும் ஒரு கல்லூரியில்.இவரை விட தமது துறையில் சிறந்து விளங்கும் பல தமிழர்கள் வன்னியில் சேவை ஆற்றி வருகின்றனர்.ஜூட் கூறிய வன்னி டெக் ,பலரது கூட்டு முயற்சியால் உருவானது.அதன் பாடத்திட்டங்கள் பல புகழ் பூத்த அமெரிக்க பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பலரால் வகுக்கப் பட்டவை.கூலை விட செயற்திறன் உள்ள பலரால் வழி நடத்தப் படுவது வன்னி ரெக், அதனாலேயே இரண்டு வருடங்களிலயே யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தை விட அதன் பாடத்திட்டம் சிறந்து விளங்குகிறது.இங்கு அனுமதி பெற பெருமளவினாலான யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்களும் விண்ணப்பித்தனர்.

