03-12-2006, 12:42 AM
தமிழ்மகன் , இனியவள் சொல்வது போல புலம்பெயர்ந்து இயந்திர வாழ்க்கை வாழும் பெண்கம் ஒரு வித மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். இதுவே பொஸ்ட்போர்ற்றூன் டிப்பிறஸன் என்னும் மனவியாதியாக நாளடைவில் மாறுகிறது. இந்த மனவியாதி உள்ள பெண்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரிவதில்லையாம். அவர்களுக்கு கோபம் சந்தேகம் இப்படி கனவிதமான மன அழுத்தங்கள் ஏற்படுகின்றது. இவ் வியாதிகளுக்கு உட்பட்ட சில பெண்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்கள் ஒரு நேரம் நோர்மலாக கதைப்பார்கள். ஒரு நேரம் பெரிய சத்தம் போட்டு பக்கதில நிக்கிறவர்களை எல்லாம் பேசுவார்கள். பின்பு அவர்கள் நோர்மலா இருக்கும் போது ஏன் என்னை பேசினீர்கள் என்று கேட்டால். பேசினானா என்று திருப்ப என்னையே கேட்டார்கள். ம்ம் இதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் இனியவள் சொன்ன மாதிரி ஒரு தாய் கர்ப்பம் அடைந்து இருக்கும் போது அவருடன் அவரது உறவினரும் கணவனும் கூடையளவு நேரத்தை செலவு செய்ய வேண்டும். அவருடன் அன்பாக பழக வேண்டும். குழந்தை பிறந்த பின்பும் கூடியளவு கவனம் எடுக்க வேண்டும். இனியவள் கூறியது போல் இங்கு எல்லோரும் குடும்பம் என்று வந்தவுடன் தான் உண்ண உறங்க நேரமில்லாது டபுள் ரிபுள் வேலை என்று செய்கிறார்கள். அவர்கள் அவ்வாறு இல்லாது ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவர்களது குடும்பத்தினருடனும் செலவழித்தார்கள் ஆயின் இவ்வாறான பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம். அத்துடன் அவர்கள் இவ்வாறு திட்டமிட்டு குடும்பம் நடத்துவார்களாயின் அது அவர்களது குழந்தியையின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கும் சிறந்ததாக அமையும்.
<b> .. .. !!</b>

