03-11-2006, 10:32 PM
<b>டிஸ்கவரி விண்வெளி ஓடத்திலிருந்து 16 ரப்பர்நுரைத் துண்டுகள் விழுந்தன </b>
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வெடித்துச் சிதறிய கொலம்பியா விண்வெளி ஓடத்திலிருந்து நுரை ரப்பர்கள் (ஃபோம்) பிதுங்கி வெளியேறியதைப் போலவே இந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்ட டிஸ்கவரி விண்வெளி ஓடத்திலும் நிகழ்ந்திருக்கிறது.
நாசா தனது வலைதளத்தில் இத் தகவலை இப்போது விவரமாகத் தெரிவித்திருக்கிறது.
அதிலிருந்து 16 நுரை ரப்பர் துகள்கள் வெளிப்பட்டுள்ளன. இது விண்வெளி ஓடத்தை வடிவமைத்த பொறியாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொலம்பியாவுக்கு நேரிட்ட கதி பிற விண்வெளி ஓடங்களுக்கு நேரிடக்கூடாது என்ற எண்ணத்துடன் மற்ற விண்வெளி ஓடங்களில் இக்குறையை நீக்க தனிக்கவனம் செலுத்தப்பட்டது. அப்படியிருந்தும் இத்தனைத் துண்டுகள் வெளிப்பட்டிருப்பது குறித்து அமெரிக்காவின் உயர் விண்வெளி ஆய்வு அமைப்பான "நாசா கவலை கொண்டிருக்கிறது.
கொலம்பியாவில் எரிபொருள் சேமிப்பு தொட்டியைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த நுரை ரப்பர்கள் வெளியேறியதால் அது சுடேறி வெடித்தது; உயிரைக்குடிக்கும் விஷ வாயுக்கள் வெளியேறி விண்கலத்தில் புகுந்தன. இதனால் கொலம்பியா வெடித்துச் சிதறியது. அதில் இருந்த 7 பேரும் உயிரிழந்துவிட்டனர்.
ஆனால் டிஸ்கவரி விண்வெளி ஓடத்தை விண்ணில் சோதித்த விண்வெளி வீரர்கள் அது நல்ல நிலையிலேயே இருப்பதாகப் பின்னர் தெரிவித்தனர். அதில் இருந்தவர்கள் பத்திரமாக பூமிக்கும் திரும்பிவிட்டனர்.
வரும் மே மாதம் மீண்டும் ஒரு விண்வெளி ஓடத்தை விண்ணில் அனுப்ப நாசா தயாராகி வருகிறது.
இந்த நுரை ரப்பர் விவகாரம்தான் அதற்கு இப்போது பூதாகாரமாகத் தெரிகிறது.
dinamani.com

<b> .. .. !!</b>