03-11-2006, 08:49 PM
narathar Wrote:இவர்களில் பேராசிரியர் குமாரவடிவேலினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவானது யாழ். பல்கலைக்கழத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு சிபார்சு செய்தது.
எனினும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சிபார்சினை நிராகரித்தே ஜனாதிபதி பேராசிரியர் இரத்தின ஜீவன்ஹூலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய துணைவேந்தராக நியமித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்குகிறார்கள் இல்லை இனத்துவேசம் காட்டுகிறார்கள் என்று முன்னாள் துணைவேந்தர் மோகனதாசும் அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கூட ஹூல் வேண்டாம். தமிழ் மக்களுக்கும் யாழ். பல்கலைக்கழகத்துக்கும் ஹூல் கூடாது என்று முடிவெடுக்கிறது. மானிய ஆணைக்குழுவுக்கு நிதர்சனம் ஒரு நன்றிக்கடிதம் எழுதலாமே?
narathar Wrote:துணைவேந்தராக ஹூலை நியமித்ததன் மூலம் ஏற்படவுள்ள விளைவுக்கு ஜனாதிபதியே பொறுப்பு
ஈழவேந்தன் எம்.பி. தெரிவிப்பு
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரத்தின ஜீவன் ஹூல் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் குடாநாட்டில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுமென சுட்டிக் காட்டியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஈழவேந்தன், இதனை ஜனாதிபதியால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.
ஈழவேந்தன் ஐயா மட்டுமா இதைச்சொன்னார்? கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பினாட்டுவகை இதை 2000ம் ஆண்டே சொல்லிவிட்டார். ஹூலின் வேலையை நீடிக்க மறுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ஹூல் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்பதால் அவருக்கு வேலையை நீடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இதோ கீழே ஆங்கிலத்தில்.
Recently the Vice Chancellor of the Colombo University, Prof. Pinnaduwage, refused an extension of service to Prof. Jeevan Hoole on the grounds he is a "security risk".
Media & the Tamil Struggle UTHR(J) - a mouthpiece of Sri Lankan government, V.Thangavelu
Canada, 11 August 2000, http://www.tamilnation.org/media/tamil/thangavelu2.htm
ஹூல் எவ்வளவு பேருக்கு எதிரி பாருங்கள்.
ஆக எனது ஆலோசனை ஹூல் யாழ்ப்பாணம் போவது ஆபத்து. முட்டள்கள் அதிகமான பிரதேசம். யார் யாரை மண்டையில் போடுகிறார்கள் என்று தெரியாமலே மாறி மாறி போடும் இடம்..
ஹூல் அவர்களே!!
அதற்குள் நீங்கள் அச்சேற்றிய உடைந்த பனையை எழுதிய இராஜினிக்கு நடந்ததை மறந்துவிடாதீர்கள்.
உண்மையில் யாழ். பல்கலைக்கழகம், பல்கலைக்கழகமாக இயங்கிய வரலாறே இல்லை. நல்ல கண்டுபிடிப்புகளோ ஆய்வுகளோ அங்கே நடப்பதில்லை.
நீங்கள் போக வேண்டிய இடம் வன்னி தொழில்நுட்பக்கல்லு}ரி. சிறப்பாக நடத்துகிறார்கள். இன்னுமொரு MIT யை உருவாக்க ஒத்துழைத்த பெருமை உங்களை சாரும். இந்த முட்டாள்களுக்கு உங்கள் நாட்டுப்பற்றை விளங்கப்படுத்தி மினக்கடாமல் வன்னியில் போய் விளங்கப்படுத்துங்கள். புூரணபாதுகாப்புடன் கேட்டதெல்லாம் தருவார்கள். தாராளமாக கட்டி எழுப்புங்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழகத்தை.
அதே வேளை இந்த மனிதஉரிமை, அது, இது என்று யாராவது அறிக்கை எழுதிவிட கேட்டால், தாராளமாக ஆசை தீர எழுதுங்கள். ஆனால் யாருக்கும் தெரியாமல் பத்திரமாக தமிழ்ச்செல்வனிடம் மட்டும் கொடுத்து விடுங்கள். கொப்பி கூட வைத்திருக்காதீர்கள். மீறினால் பாம்பு கடிக்கும். வன்னிக்காட்டில் பாம்புகள் அதிகம். மறக்காதீர்கள்.
''
'' [.423]
'' [.423]

