Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன்
#2
ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன் (பாகம் 2)

பாகம் 1 இல் அமெரிக்கா ஈழத்தில் தலையிடுவதற்கு இருக்கின்ற காரணங்கள் குறித்து என்னுடைய கணிப்பை எழுதியிருந்தேன். ஒன்றை குறிப்பிட வேண்டும். அமெரிக்க என்று குறிப்பிடுவது அமெரிக்காவையும் அது சார்ந்த மேற்குலக நாடுகளையும் ஆகும். தனியே அமெரிக்காவை மட்டும் அன்று.

அமெரிக்காவிற்கும் மற்றைய மேற்குலக நாடுகளுக்கும் தற்போதைய அச்சுறத்தல்கள் ஆக விளங்கும் சீனஇ இந்திய நாடுகளின் வளர்ச்சிஇ இஸ்லாமிய தீவிரவாத்தின் வளர்ச்சி போன்றவற்றை கட்டுப்படுத்தவதற்கும் கண்காணிப்பதற்கும் ஏற்ற ஒரு அலுவலகமாகஇ தளமாக இலங்கைத்தீவை இந்த நாடுகள் கருதுகின்றன. பூகோளரீதியாக அதற்கு ஏற்ற இடத்தில் இலங்கை அமைந்திருக்கின்றது. ஆகவே எவ்வகையிலாவது ஈழத்திற்குள் நுளைவதே அமெரிக்காவின் நோக்கம். ஆனால் இந்த நோக்கத்திற்கு தடையாக விடுதலைப்புலிகளும் அவர்களுது தனியரசுக்கான போராட்டமும் இருப்பதாக அமெரிக்கா நினைக்கின்றது. அமெரிக்காவின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்றால் விடுதலைப்புலிகள் பலவீனப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு இலங்கையின் ஐக்கியம் உறுதியாக பேணப்பட வேண்டும். இதை நோக்கியே அமெரிக்கா காய்களை நகர்த்தி வருகின்றது. நீடித்த பேச்சுவார்த்தைகள் மூலம் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்த முடியும் என்று அமெரிக்கா நம்புகின்றது. இந்த வழி அமெரிக்காவிற்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காது போனால் அமெரிக்கா இராணுவரீதியில் ஈழத்தில் தலையிடும். இலங்கை இராணுவத்திற்கு முற்று முழுதான உதவிகள் வழங்குவதன் மூலமோ அல்லது நேரடியாக அமெரிக்க இராணுவத்தினரை அனுப்புவதன் மூலமோ அமெரிக்கா தலையிடும். ஆகவே ஈழப் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடும் என்று வாதிடுவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.

ஆனால்இ எப்படி அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டிற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றதோஇ அதே போன்று தலையிடாமல் இருப்பதற்கும் வலுவான காரணங்கள் உண்டு. அமெரிக்காவால் ஒரு அந்நிய நாட்டிற்குள் இலகுவாக தன்னுடைய படைகளை அனுப்ப முடியாது. அவ்வாறு செய்வதாயின் தன்னுடைய மக்களை அதற்கு தயாராக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு நாட்டுக்குள் தங்களின் இராணுவத்தை அனுப்பி பலி கொடுப்பதை அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியான காரணங்கள் முன்வைக்கப்பட வேண்டும். அந்த நாட்டைப் பற்றியும்இ அந்த நாடு அமெரிக்காவிற்கு எந்த வகையில் அச்சுறுத்தலானது என்பது பற்றியும் மீண்டும் மீண்டும் பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். இவைகளை விட அமெரிக்காவின் செனட் சபையின் அங்கீகாரமும் தேவைப்படும். ஆப்கானிஸ்தானின் தலிபான்களை அழிக்கின்ற திட்டம் அமெரிக்காவிற்கு ஏற்கனவே இருந்த பொழுதும் செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பிறகே அது சாத்தியமானது. ஈராக் மீதான படையெடுப்பும் நீண்ட கால பரப்புரைகள் மூலம் அமெரிக்க மக்களை ஏற்றுக் கொள்ள செய்த பின்பே நடைபெற்றது. தற்பொழுது ஈரானின் முறை. ஈரான் மீதான படையெடுப்பிற்கு ஆதரவான மனநிலை அமெரிக்க மக்களிடம் தோன்றி விட்டதாக நம்பப்படும் பொழுது அது நடைபெற்றே தீரும்.

ஆனால் தமிழீழத்தில் அமெரிக்கா தலையிடுவதை அமெரிக்க மக்கள் அனுமதிக்கப் போவதில்லை. விடுதலைப்புலிகள் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் ஆனாவர்கள் என்று அமெரிக்க மக்களிடம் காட்டுவதற்கு எந்தவிதமான காரணங்களும் இல்லை. ஆயினும் தற்போது உள்ள நிலையில் இன்னும் ஒன்றையும் கவனத்தில் எடுக்க வேண்டும். விடுதலைப்புலிகளை விட பலமானவர்கள் என்று கருதப்பட்ட தலிபான்களை அமெரிக்கா வெற்றி கண்டது. ஹிட்லருக்கு தண்ணி காட்டிய சேர்பியாவை பணிய வைத்தது. சதாம்ஹ{சேனின் படைகளை தோற்கடித்தது. அமெரிக்க மக்களை பொறுத்தவரை விடுதலைப்புலிகள் காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் ஒரு சிறிய கெரில்லா இயக்கம். ஆகவே ஈழத்தில் அமெரிக்கா தலையிடுமானால்இ விடுதலைப்புலிகளை அமெரிக்கா இராணுவம் இலகுவில் அடக்கி விடும் என்ற நம்பிக்கையில் அமெரிக்க மக்கள் ஆரம்பத்தில் அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் விடுதலைப்புலிகளைப் பற்றி தெருவில் நிற்கும் அமெரிக்கனுக்கு தெரியாது விட்டாலும்இ அமெரிக்காவின் வெளிநாட்டுஇ இராணுவ விவகாரங்களை கவனிக்கும் துறையினருக்கு தமிழீழத்தில் தலையிட்டால் என்ன நடக்கும் என்று நன்றாகவே தெரியும்.

அமெரிக்கா தமிழீழத்தில் தலையிட்டால் என்ன நடக்கும்? பலர் நினைப்பது போன்று அமெரிக்க இராணுவம் ஒன்றும் வெல்லப்பட முடியாத இராணுவம் அல்ல. 2003 இல் நடந்த ஈராக் யுத்தத்தையே எடுத்துக் கொள்வோம். சில வாரங்களில் முடிந்துவிடும் என்று நம்பப்பட்ட ஈராக் மீதான படையெடுப்பு சில மாதங்களாக நீண்டது. முக்கியமாக அமெரிக்க இராணுவத்தின் முதலாவது இலக்காக இருந்த பஸ்ரா நகரம் மாதக் கணக்கில் அமெரிக்க படையினரை தாக்குப் பிடித்தது. நஸாரியா நகர் அமெரிக்க படைகளை திணறடித்தது. ஈராக் சில இராணுவரீதியான தவறுகளை விடாது இருந்திருந்தால் பக்தாத் இலகுவில் வீழ்ச்சி அடைந்திருக்காது. ஆனால் சதாம் ஒரு முக்கியமான தவறை செய்தார். வெற்றிகரமான தற்காப்பு யுத்தம் தந்த நம்பிக்கையில் ஒரு வலிந்த தாக்குதலை நடத்த முனைந்தார். மார்ச் மாதத்தின் கடைசி நாட்களில்இ வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்திருக்கஇ தன்னுடைய ஆயிரக்கணக்கான டாங்கிகளையும்இ சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரையும் அமெரிக்க படையினருக்கு எதிராக ஏவினார். கரு மேகங்கள் இருந்த போதிலும் அமெரிக்காவின் தொழில் நுட்பம் ஈராக்கிய படையினரை காட்டிக் கொடுத்தது. விளைவுஇ அந்த பலம் பொருந்திய படையணி முற்றாக அழிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை செய்யாது தன்னுடைய படைகளை சதாம் காத்து வைத்திருந்தால்இ பக்தாத் நகர் அமெரிக்காவிற்கு நல்லதொடு பாடத்தை புகட்டியிருக்கும்.

ஆயினும் தற்பொழுது ஈராக்கிய மக்கள் அமெரிக்காவிற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாடம் புகட்டியபடியே உள்ளார்கள். அங்கே தினமும் அமெரிக்க படையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பல ஈராக்கிய மக்கள் தற்கொலைப்படைகளாக மாறி அமெரிக்க படையினரை சிதறடித்து வருகிறார்கள். அமெரிக்கப் படையினரால் இந்த தற்கொலைத் தாக்குதல்களை சமாளிக்க முடியாது விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

இப்பொழுது ஈழத்திற்கு வருவோம். தமிழீழத்திற்குள் அமெரிக்கப் படைகள் நுளைந்தால் பல பஸ்ரா நகரங்களை சந்திக்க வேண்டி வரும் என்று அமெரிக்க இராணுவ வல்லுனர்களுக்கு தெரியும் அதுவும் ஒரு தரைச் சண்டையில் எதிரிக்கு எவ்விதமான இழப்பை விடுதலைப்புலிகள் ஏற்படுத்துவார்கள் என்பது அந்த வல்லுனர்களுக்கு நன்றாகவே தெரியும். அத்துடன் மிக முக்கியமானது விடுதலைப்புலிகளின் கரும்புலி அணிகள். ஈராக்கில் நடக்கின்ற தற்கொலைத் தாக்குதல்கள் நெறிப்படுத்தப்பட்டவை அல்ல. தாக்குதலில் ஈடுபடுபவர்களும் அதற்கென நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும் அல்ல. இவர்களையே அமெரிக்காவால் சமாளிக்க முடியவில்லை. ஆனால் தமிழீழத்தில் தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடக் கூடியதும்இ நன்கு போரிடக் கூடியதுமான கரும்புலிகள் அணியை அமெரிக்கப் படையினரால் எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? கட்டுநாயக்கா விமானத் தளத்தில் நான்காயிரம் படையினரோடு ஒரு சில கரும்புலிகள் மோதி விமானங்களை சிதறடித்த நிகழ்வை அமெரிக்கா அறிந்திருக்காமல் இருக்காது.

அகவே அமெரிக்கா ஈழத்தில் தலையிடுமானால்இ இது போன்ற இழப்புக்கள் ஏற்படும் பொழுதுஇ அது வரை அமைதியாக இருந்த அமெரிக்கன் வீதியில் இறங்குவான். ஈராக்கில் அமெரிக்கா இராணுவம் பலியாவதை இஸ்லாமிய தீவிரவாதம் பற்றிய அச்சம் காரணமாக அமெரிக்கர்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் அமெரிக்க பாதுகாப்போடு சம்பந்தப்படாத ஈழத்தில் எந்த ஒரு அமெரிக்க படையினனும் பலியாவதை அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே அமெரிக்கா ஈழத்தில் தலையிட்டாலும்இ பின்பு அவமானத்தோடு வெளியேற வேண்டி வரும்.

இவை எல்லாவற்றையும் கணிக்கும் அமெரிக்கா ஒரு போதும் இராணுவரீதியாக தமிழீழத்தில் தலையிடாது. தேவைப்பட்டால் இலங்கை இராணுவத்திற்கு ஆயுதஇ தொழில்நுட்ப உதவிளை வழங்குமே தவிரஇ தன்னுடைய படைகளை அனுப்பாது. இதை இன்னொரு விதமாக நோக்குவதாயின் விடுதலைப்புலிகள் தமிழீழத்தை மட்டும் அல்லஇ அந்த பிராந்தியத்தையே அமெரிக்காவிடம் இருந்து காத்து வருகிறார்கள் என்றும் கொள்ளலாம்

ஆனால் அமெரிக்கா தமிழீழத்தில் கால் பதிக்க வேண்டும் என்று ஜெயதேவன் போன்றோர் வலியுறுத்தி வருகிறார்கள். அதற்காக சில வேலைத் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார்கள். இவர்களின் உண்மையான நோக்கம் என்ன? பதவி ஆசையில் தமிழீழத்தை காட்டிக் கொடுக்கத் துணிந்து நிற்கும் இந்தக் கும்பல்களின் எண்ணம் நிறைவேறுமா?

(பாகம் 3 இல் நிறைவு பெறும்)



-வி.சபேசன் (06.03.06)
சுட்டது:http://www.webeelam.com/EealmIranUsaJeya%202.htm
vasan
Reply


Messages In This Thread
[No subject] - by Vasan - 03-11-2006, 06:14 PM
[No subject] - by Vasan - 03-11-2006, 06:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)