03-11-2006, 06:12 PM
ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன் (பாகம் 1)
தலைப்பை பார்த்தால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது மாதிரி தெரியும். ஆனால் உண்மையில் சில முடிச்சுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.
விடயம் வெகு சுலபம். ஈழத்தில் அமெரிக்கா இராணுவரீதியாக தலையிடுமா? அதை ஈரான் விவாகாரம் தடுத்து நிறுத்துமா? அமெரிக்கா தலையிட்டால் ஈழத்தில் உள்ள தமிழ் மாநிலத்திற்கு ஜெயதேவன் இடைக்கால முதலமைச்சராக வருவாரா? கேள்விகள் இவ்வளவுதான். இனி பதில்களைப் பார்ப்போம்
விடுதலைப்புலிகள் போரை ஆரம்பித்தால், அமெரிக்கா உடனடியாக தன்னுடைய படைகளை அனுப்பி விடுதலைப்புலிகளை அடக்கும் என்று பல சிங்களவர்களும் சில தமிழர்களும் நம்புகின்றார்கள். ஆனால் அமெரிக்காவிற்கு இலங்கைத்தீவில் தலையிடுவதற்கு அவசியமான காரணங்கள் இருக்கின்றதா என்று இவர்களிடம் கேட்டால், சொல்லுகின்ற பதில்கள் திருப்தியாக இல்லை.
அமெரிக்காவும் பல வருடங்களாகவே ஈழப்பிரச்சனையில் தலையிட்டபடி இருக்கின்றது. ஆரம்பத்தில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஆயுத உதவிகளும் பயிற்சிகளும் வழங்கி யுத்தத்தில் மறைமுகமாக பங்கெடுத்த அமெரிக்கா, பின்பு பேச்சுவார்த்தையில் தன்னுடைய மிக நெருங்கிய நட்பு நாடான ஜப்பான் மூலமும், இணைத் தலைமை நாடுகளில் ஒன்று என்னும் பெயரில் நேரடியாகவும் பங்கெடுத்து வருகின்றது. ஆனால் இலங்கையில் அமெரிக்காவிற்கு தேவையானது அப்படி என்னதான் இருக்கின்றது? சிலர் பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றது என்று சிறுபிள்ளைத்தனமாக கூறுவார்கள். ஆனால் இலங்கையில் அமெரிக்கா சுரண்டுவதற்கு பாரிய வளங்கள் எதுவும் இல்லை. பாரிய முதலீடுகள் செய்வதற்கு மனித வளமும் இல்லை. ஆயினும் அமெரிக்கா மூக்கை நுளைத்தபடிதான் இருக்கின்றது. இதற்கு காரணம் எதுவென்று எப்படித்தான் தலையை பிய்த்துக்கொண்டு சிந்தித்தாலும், புவியியல்ரீதியான காரணங்களை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
"உலக அரசியலை அறிவதற்கு உலக வரைபடத்தை பார்" என்று யாரோ ஒரு அறிஞன் சொன்னதாக ஞாபகம். உலக வரைபடத்தை பார்ப்பதற்கு முன்பு இன்று அமெரிக்காவிற்கு உள்ள சவால்கள் எதுவென்று பார்ப்போம். பனிப் போர் முடிவுற்ற பிறகு அமெரிக்காவின் எதிரிகள் மாறிவிட்டார்கள். தற்பொழுது அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தலாக கருதுவது இரண்டு விடயங்களை. ஒன்று, அமெரிக்க எதிர்ப்பின் அடிப்படையில் உலகில் பரவி வரும் இஸ்லாமிய தீவிரவாதம். மற்றுது பொருளாதார வல்லரசுகளாக உருவெடுத்து வருகின்ற சீன, இந்திய நாடுகள்.
இதில் அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாதத்தை தன்னுடைய படைபலம் கொண்டு நசுக்க முற்படுகிறது. எங்கெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதம் உள்ளதோ, அங்கெல்லாம் தன்னுடைய இராணுவத்தை அனுப்பி ஆக்கிரமித்து வருகின்றது. முதலில் ஆப்கானிஸ்தான், பின்பு ஈராக் என்று வந்து தற்பொழுது ஈரானுக்கு குறி வைத்துள்ளது. அமெரிக்கா தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கும் சாட்டில் காலனித்துத்தின் புதிய வடிவம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இனி வரைபடத்தை பார்ப்போம்.
அல் கைதா செயற்படும் நாடுகள்
மற்றைய இஸ்லாமிய தீவிரவாதிகள் செயற்படும் நாடுகள்
தற்பொழுது ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் நடுவில் அணுவல்லரசாகும் முனைப்புக் கொண்ட நாடாகிய ஈரான் அமைந்துள்ளது. ஈரானுடைய அமைவிடமும் சரி, அது அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக வரும் செய்திகளும் சரி, அமெரிக்காவை பொறுத்தவரை மிகப் பெரிய அச்சுறுத்தலே. ஈரான் இராணுவரீதியாக வளர்ச்சி பெறும் பட்சத்தில், அது ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படையினருக்கும், அமெரிக்காவின் செல்லப்பிராணியாகிய இஸ்ரேலுக்கும் மிகப் பெரும் ஆபத்தாக முடியும். அந்த வகையில் அமெரிக்கா ஈரான் மீது வெகுவிரைவில் போர் தொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஈரானை அமெரிக்கா ஆக்கிரமிக்கும் பட்சத்தில் தரைவழியாக இணைந்திருக்கும் தொடர் நாடுகளாகிய ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
இவ்வாறு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா பலமாக காலூன்றினால், அது உண்மையில் சீனாவினதும் இந்தியவினதும்; எல்லையில் அல்லது மிக அண்மையில் அமெரிக்கா தன்னுடைய படைகளுடன் நிலைகொண்டிருப்பதாக பொருள்படும். அத்துடன் பாகிஸ்தானுக்குள்ளும்; அமெரிக்கா நுளைகின்ற சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை. ஒஸாமா பின்லேடனும் மற்றைய தீவிரவாத தலைவர்களும் பாகிஸ்தானுக்குள் மறைந்திருப்பதாக அமெரிக்கா அடிக்கடி கூறுவதையும் நினைவில் கொள்க.
தற்பொழுது இராணுவ வல்லரசுக்களின் காலம் மாறி பொருளாதார வல்லரசுகளின் ஆதிக்கத்திற்குள் உலகம் சென்று கொண்டு இருக்கின்றது. இராணுவ வலமையோடு பொருளாதாரத்திலும் சீனா நாலு கால் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. தற்பொழுது பொருளாதாரத்தில் ஆறாம் இடத்தில் இருக்கும் சீனா வெகு விரைவில் நான்காம் இடத்திற்கு வந்து விடும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். இப்படியே போனால் சீனா உலகின் முதன்மை நாடாகி விடும். இதை தடுப்பது அமெரிக்காவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. ஏற்கனவே சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பசுபிக் சமுத்திரம் அமெரிக்க கடற்டையின் ஆளுகையில் உள்ளது. தற்பொழுது சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள நாடுகளையும் ஆக்கிரமித்து வருகின்றது. அந்த வகையில் அமெரிக்காவிற்கு நீண்டகால நோக்கில் சீனாவை கண்காணிப்பதோடு சீனாவிற்குள் பல குழப்பங்களை ஏற்படுத்துவதும் இலகுவாக இருக்கும்.
இதே போன்று இந்தியாவின் வட பகுதியில் நெருக்கமாக காலூன்றும் அமெரிக்கா, தெற்கில் இலங்கையில் தன்னுடைய தளத்தை அமைத்துக் கொள்ள முயற்சிக்கும். ஆனால் இலங்கையில் அமெரிக்கா தன்னுடைய தளங்களை அமைக்க விரும்புவதற்கு இன்னும் ஒரு முக்கிய காரணம் உண்டு.
தற்பொழுது மீண்டும் வரைபடத்தை பாருங்கள். அமெரிக்கா இன்று நிலைகொண்டுள்ள நாடுகளைச் சுற்றி இஸ்லாமிய நாடுகளே உள்ளன. உண்மையில் அமெரிக்கா வெடிகுண்டுகளின் மத்தியிலேயே குந்தியிருக்கின்றது. முகமதுநபிகள் பற்றிய கேலிச்சித்திரத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் கிளர்ச்சி நடைபெற்றுது போன்று, அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ள இஸ்லாமிய நாடுகளிலும் ஒரு வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் அனைத்து மக்களும் அமெரிக்கப் படைகளிற்கு எதிராக கிளர்ந்தௌ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே எவ்வாறான நிலைகளயும் சமாளிக்கும் வண்ணம் அமெரிக்காவிற்கு ஒரு பின்தளம் தேவை. அதுவும் இஸ்லாமிய மக்கள் இல்லாது அல்லது மிகக் குறைவாக வாழுகின்ற ஒரு நாட்டிலே அந்த தளம் அமைய வேண்டும் என்பதே அமெரிக்காவின் எண்ணம். அதுவே பாதுகாப்பானதும் கூட. தற்பொழுது இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவிற்கு டியோ கர்சியா தீவில் ஒரு தளம் உண்டு. ஆனால் அது ஈராக், ஈரான் போன்ற நாடுகளிற்கு மிகத் தொலைவில் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் இலங்கைத்தீவு அமெரிக்காவிற்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கின்றது.
ஆகவே ஈழத்திலும் அமெரிக்கா காலூன்றுமா? இதை வைத்து ஜெயதேவன் போன்றவர்கள் காணும் கனவு என்ன?
பாகம் 2இல் தொடரும்
-வி.சபேசன் (01.03.06)
சுட்டது: http://www.webeelam.com/EealmIranUsaJeya.htm

vasan