03-11-2006, 02:35 PM
துணைவேந்தராக ஹூலை நியமித்ததன் மூலம் ஏற்படவுள்ள விளைவுக்கு ஜனாதிபதியே பொறுப்பு
ஈழவேந்தன் எம்.பி. தெரிவிப்பு
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரத்தின ஜீவன் ஹூல் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் குடாநாட்டில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுமென சுட்டிக் காட்டியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஈழவேந்தன், இதனை ஜனாதிபதியால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ஈழவேந்தன் எம்.பி. மேலும் கூறியதாவது;
இராணுவ நெருக்கடிகள், அடாவடித்தனங்கள் காரணமாக யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மிகவும் கொதிப்படைந்த நிலையிலுள்ள உள்ள வேளையில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் தமிழ் மக்களாலும் கல்விச் சமூகத்தாலும் வெறுத்தொதுக்கப்படும் ஹூல், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்கள், பேராசிரியர்கள், கல்விமான்கள், ஒட்டு மொத்த தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஹூலை நியமித்ததன் மூலம் பாரிய தவறிழைத்துள்ளார். இதன் மூலம் ஏற்படப் போகும் விரும்பத்தகாத விளைவுகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.
http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm