03-11-2006, 01:07 PM
வணக்கம்...
இணைய ஊடகத்தால் புலம்பெயர் வாழ் இளையோர் நன்மை அடைகிறார்களா? சீரழிகிறார்களா? என்கிற பட்மன்ற விவாதத்தில் - நன்மையடைகிறார்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் மகிழ்ச்சி. சிறப்பான தமது கருத்தாடல்களின் மூலம் தீர்ப்பை நமது பக்கமாகத் திருப்பிய அனைத்து அணித் தோழர்களுக்கும் எனது நன்றிகள் + பாராட்டுக்கள். அதேபோல் எதிரணியினரின் உற்சாகமானதும், சிறப்பானதுமான கருத்தாடல்கள் தான் எம்மை வெற்றி நோக்கி உந்தித்தள்ளியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அந்தவகையில் எதிரணித் தோழர்களுக்கும் பாராட்டுக்கள் + நன்றிகள்.
இந்தப் பட்டிமன்றத்தை ஒருங்கமைத்து ஒழுங்கமைத்து சிறப்பாக முன்னெடுத்துச்சென்ற தோழி இரசிகைக்கும் எமதணி சார்பில் நன்றிகள். மற்றும் பட்டிமன்றத்துக்கு நடுவர்களாக இணைந்து செயலாற்றிய செல்வமுத்து ஐயா அவர்களுக்கும், தோழி தமிழினிக்கும் வாழ்த்துக்கள் + நன்றிகள்.
பட்டிமன்றம் கொஞ்சம் இழுபட்டுப் போயிருந்தாலும் கூட சுவாரசியமாகவே இருந்தது. இந்த இணையப் பட்டிமன்றத்தில் இருந்து பல அனுபவப்பாடங்களைக் கற்றிருக்கிறோம். எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் ஆக்கபூர்வமான பட்டிமன்றங்கள் நிகழவேண்டும்.