03-11-2006, 12:43 PM
ThamilMahan Wrote:narathar Wrote:உண்மையில் யாழ். பல்கலைக்கழக பேரவையின் தவறான முடிவே இதற்குக் காரணம். இப்பேரவைதான் ஹூலையும் தெரிவு செய்தது. இப்பேரவைக்கும் அரசே உறுப்பினர்களை நியமித்து உயர் கல்வியை அரசியல் மயமாக்கியது. யாழ். பல்கலைக்கழக சொத்துகளை சுரண்டும் அதிகாரிகளைக் காப்பாற்றியதும் இப்பேரவைதான்.[/size]
1. ஐயா ஒரு பல்கலைக்கழகத்தின் credibility அங்கு கற்பிக்கும் ஆசிரிய பீடத்தின் கல்வித்தகமைகள் மற்றும் ஆராய்ச்சியில் அவர்களுக்குரிய ஈடுபாடுகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறதேயன்றி, உம்போன்றவர்களின் சான்றிதழை வைத்தல்ல. அவர்களது முடிவைத் 'தவறு' எனக்கூறவேண்டுமாயின் நீர் (அல்லது இந்தக்கட்டுரையை வரைந்தவர்) அவர்களில் ஒருவராக இருப்பதுடன் மட்டுமன்றி சக ஆசிரியர்களிடம் தனது நிலப்பாட்டுக்கு போதிய ஆதரவு கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
2. உலகில் எந்தவொரு நாட்டிலும் மாணவர் விருப்பத்திற்கு அமைய உபவேந்தர்கள் நியமிக்கப்படுவதில்லை மாறாக கல்வித்தகமைக்கு ஏற்பவே நியமிக்கப்படுகிறார்கள். காரணம் மாணவர்கள் இன்றைக்குப் படித்துவிட்டு நாளை வெளியேறுபவர்கள். ஆனால் ஆசிரியர்களும் துணைவேந்தரும் கழகத்தின் கல்வித்தரத்தை நீண்ட நாட்களுக்கு கட்டிக்காக்க வேண்டியவர்கள். இங்கே மாணவர்களின் கூச்சல் எங்கும் எடுபடாது.
நடந்தவற்றை கூட்டிக்கழித்துப் பார்த்தால் என்னால் யூகிக்க முடிவது: பல்கலக்கழகப் பேரவை வாக்கெடுப்பு மூலம் மூவரைத் தெரிவு செய்தது. அந்த மூவரில் சிறந்தவர் என சனாதிபதிபதியால் முடிவுசெய்யப்படும் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் \"Simple as that\" ஜனாதிபதியின் சொந்த விருப்பு வெறுப்புகள் தெரிவில் ஆதிக்கம் செலுத்தமுடியுமென்றாலும், அது அந்த மூவரில் யாரைத் நியமிப்பது என்பதாயிருக்குமேதவிர, நான்காவது நபர் ஒருவரை நியமிப்பதாக இருக்க முடியாது. அந்த மூவரில் ஒருவராக இருக்கும் ஆளுமையும், கல்வித்தகமையும் இதர ஆசிரியர்களின் ஆதரவும் ஹூலுக்கு இருந்திருக்கிறது என்பதுதான் மறைக்கமுடியாத உண்மை.
ஒரு பல்கலைக் கழகத்தின் வெற்றி அல்லது 'க்ரடிபிலிடி' என்பது உம் போன்றவரின் கண்மூடித் தனமான தனி நபர் வழிபாட்டால் நிறை வேறப் போவதில்லை.ஒரு பல்கலைக் கழகம் என்பது அது சார்ந்த மக்களிற்கு என்ன செய்தது அந்த மக்கட் சமூகத்தவரின் பிரச்சினைகளைத் தீர்த்ததா?அது இருக்கும் பிரதேசத்தில் அபிவிரித்தி சார்ந்து என்ன விதமான தாக்கத்தை ஏற்படுதியது,அது சார்ந்த சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுதியது என்பதைக் கொண்டே தீர்மானிக்கப் படுகிறது.
இவை எவையுமே யாழ்ப் பல்கலைக் கழகத்தினால் நிறைவேற்ற முடியாத செயற்பாடுகள்.காரணம் என்ன?
யார் யாழ்ப் பல்கலைக் கழகத்தின் செயற்பாடுகளை, நோக்கங்களை,துணை வேந்தரின் செயற்பாடுகளை வரயறுகின்றனர்?யார் யாழ்ப் பல்கலைக் கழகத்திற்கான நிதியை வழங்கு கின்றனர்?மொத்த தேசிய வருமானத்தில் இலங்கையில் எவ்வளவு நிதி உயர்கல்விக்காக ஒதுக்கப் படுகிறது?எவ்வளவு நிதி யுத்ததிற்கும், இராணுவத்திற்கும் ஒதுக்கப் படுகிறது? இராணுவ அடக்கு முறையும்,இராணுவத்தின் நிர்வாகம் மீதான் தலையீடு,சிறிலங்கா அரசாங்கத்தின் அரசியல் ரீதியான நியமனங்கள்?குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரயின் கீழ் எத்தினை பேர் யாழ்ப் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு நியமனம் பெற்றனர் ? இவை போன்ற கேள்விகளுக்கு விடை ஒன்றே.சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தின் ஆளுகக்குட்பட்ட எந்த நிறுவனமும், அந்த அரசாங்க்கத்தின் பேரின வாத செயற்பட்டுக்கு உட்பட்டே இயங்க முடியும் என்ற யதார்த்தம் தெளிவாகும்.இவற்றை மீறி எந்த ஒரு தனி நபராலும் செயற்பட முடியாது.
இதற்கான தீர்வு தான் என்ன.இராணுவம் யாழ்க் குடா நாட்டில் இருந்து வெளியேறல்,சிரிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடில் இருந்து யாழ்ப் பல்கலைக் கழகம் விடு பட்டு தமிழரின் ஆளுக்கக்குள் அது வருதல்.இவயே யாழ்ப் பல்கலைக் கழகம் அது சார்ந்த சமூகத்தின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பைச் செய்யக் கூடிய நிலயைத் தோற்றுவிக்கும்.இது எமது தேசிய விடுதலைப் போரின் வெற்றியாலயே சாத்தியப் படும்.இதனால் தான் யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் இன்று
போராடத் துணிந்துள்ளனர்.பல்கலைக் கழக மாணவர் சங்கமும்,பல்கலைக் கழக ஊழியர் சங்கமும் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆளுகக்கு உட்பட்டவய் அல்ல.அதனாலேயே அவை தமிழ் மக்களின் குரலாக ஒலிக் கின்றன.ஆனால் யாழ்ப் பல்கலைக் கழக நிர்வாகம் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆளுக்கைக்கு உட்பட்டது.அது அரசினால் திட்ட மிட்டு உருவாக்கப் பட்டது.இதில் டக்ளசின் பங்கு முக்கியமானது.இதை யாழ் இடம்பெயர்வின் பின்னர் திட்டமிட்ட ரீதியில் சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றியது.அதன் இறுதிக் கட்டமே ஜீவன் கூலின் நியமனம்.
யதார்த்த நிலமைகள் இவ்வாறு இருக்க, இவற்றை மறுதலித்து நீர் எவ்வாறு ஜீவன் கூலினால் யாழ்ப் பல்கலைக் கழகம் மாற்றம் பெறும், என்று எதன் அடிப்படையில் பரிந்துரைக்கிறீர்? அதற்கான இவரின் விசேட தகைமைகள் தான் என்ன?இந்த கருத்தாடலில் நீர் பலவற்றை ஆதாரம் எதுவுமற்று எல்லாம் தெரிந்தவர் போன்று அறுதியிட்டுக் கூறி வருகிறீர், உமக்கு ஜீவன் கூலைத் தனிப்படத் தெரியுமா? அல்லது மகிந்த அவரின் தகைமைகள் பற்றி உமக்கு தனிப்பட விளக்கினாரா? தெரிந்தால் எமக்கும் தெரியப் படுத்தலாமே? நாம் அதன் அடிப்படயில் எமது எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லவா?

