03-11-2006, 12:10 PM
யாழ்.பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட உருவாக்கம், அரசின் இனவாதப் போக்கால் பயனற்றுவிட்டது - துணைவேந்தர் மோகனதாஸ்
ஜ சனிக்கிழமைஇ 11 மார்ச் 2006 ஸ
யாழ். பல்கலைகழகத்தில் பொறியியல் பீடத்தை இயக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனவாதப் போக்கினால் பயனற்றுப் போய்விட்டதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து எதிர்வரும் 15ம் நாளுடன் ஒய்வு பெறவுள்ள பேராசிரியர், தன் பதவிக்காலத்தில் பல்கலைகழக அபிவிருத்திக்காக மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் மாநாட்டில் துணைவேந்தர் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: தமிழ் மாணவர்களுக்கா தமிழர் பிரதேசத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் முதன்மையான பல்கலைக் கழகமாகவும் தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டம் கலை கலாச்சாரம் பண்பாடு என்பவற்றுடன் பின்னிப் பிணைந்து செயற்படும் உயர்கல்வி நிறுவனமாகவும் யாழ். பல்கலைக் கழகம் உள்ளது. ஏனைய பல்கலைக் கழகங்கள் போலன்றி அனைத்து விதமான செயற்பாடுகளிலும் தனித்துவமானதான செயற்படும் பல்கலைகழகமாக யாழ். பல்கலைக் கழகம் இருந்தாலும் அபிவிருத்தி நடவடிக்கைகள், மாணவத்தெரிவு போன்ற சில விடயங்களில் அரசையும் அரச கட்டுமானங்களையும் நம்பியிருக்க வேண்டிய நிலை எமது பல்கலைக் கழகத்திற்கு உள்ளது.
அந்த வகையில் யாழ். பல்கலை கழகத்தில் கலைப்பீடம், வணிகபீடம், முகாமைத்துவபீடம் விஞ்ஞான பீடம் என்பன இயங்குகின்றபோதும் பொறியல்துறைக்கு தெரிவாகும் மாணவர்கள் தமது தமிழ் பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தமது பட்ட மேற்படிப்புக்களை தொடர்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் யாழ் .பல்கலை கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்றை இயக்குவதற்கான அனுமதியை சிறிலங்கா அரசிடம் நாம் கோரியிருந்தோம். அது மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டிப்பகுதியில் யாழ். பல்கலை கழகத்தின் பொறியியல் பீட வளாகத்தையும் ஆரம்பிக்க திட்டமிட்டு அதுபற்றிய விடயங்களை அரசிடம் சமர்ப்பித்தோம். ஆனால் தமிழர் தாயகப்பகுதியில் பொறியியல் பீடம் இயக்கப்படுவதை அதனால் தமிழ் மாணவர்கள் தென்னிலங்கை பல்கலைகழகங்களை செல்லாமலே பொறியியல் பட்டத்தை பெறுவதையும் பொறுத்துக்கொள்ள முடியாத அரசாங்கம் யாழ். பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை இயக்குவதற்கு அனுமதி வழங்காது இழுத்தடித்து வருகின்றது என்றும் அவர் மேலும் கவலை தெரிவித்தார்.
http://www.nitharsanam.com/?art=15815