03-11-2006, 10:29 AM
இலங்கையில் உயர்கல்வி நிர்வாகம் அரசியல் மயமாகிவிட்டதையே யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் காட்டுகிறது
பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விசனம்
இலங்கையில் உயர்கல்வி நிர்வாகம், திருத்தவே முடியாத அளவிற்கு அரசியலாக்கப்பட்டுவிட்டதன் மற்றொரு அம்சம்தான் யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனமென யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹூல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நியமனம், பல்கலைக்கழகச் சட்டத்திற்கு அமைவானது எனவும் பல்கலைக்கழகம் தெரிவு செய்த மூவரில் எவரையும் ஜனாதிபதி நியமிக்க முடியுமெனவும் சிலர் கூறக்கூடும்.
தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் இவ்வாறான நியமனங்களை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்வார்கள் எனவும் அவர்கள் கூறக்கூடும்.
ஆனால், இலங்கை அரசியலமைப்பையும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்களையும் நீண்ட காலமாக கசப்புணர்வுடன் நோக்குகின்ற ஒரு மக்கள் குழுமத்தின் மத்தியில் அச்சட்ட திட்டங்களின் துணையுடன் இவ்வாறான நியமனங்களைத் திணிக்க முயல்வது விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஜெனீவாவில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் இதயசுத்தியுடன் அணுகப் போவதில்லை என்பதற்கு இச் செயல் ஒரு எடுத்துக்காட்டாகும்.
யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் நியமனத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் புகுந்துவிட்டது. அந்த வகையில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் துணைவேந்தருக்கான பெயர்களை சிபாரிசு செய்யும் போது நியாயமாக, சமூகப் பற்றுடன் நடந்து கொள்வார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் கடந்த ஒரு தசாப்த காலமாக கொழும்பு அதிகார அரசியல் வாதிகளின் விருப்பப்படியே நடைபெறுகிறது. இதனால் பல்கலைக்கழக உயர் கல்வியின் தரம் வீழ்ச்சியடைந்து வருவதை பெரும்பாலான தமிழ் மக்கள் உணரவில்லை.
இத்தகைய அரசியல் மயமாக்கலின் விளைவுகளை பல்கலைக்கழக சமூகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் சமூகமே விரைவில் அனுபவிக்க நேரிடும். இத்தருணத்திலாவது கல்வியில் பற்றுள்ள மக்கள் அனைவரும் விழித்தெழ வேண்டியது அவசியமாகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm