03-11-2006, 07:40 AM
ThamilMahan Wrote:Saanakyan Wrote:þùÅÇ× þÕóÐõ þÅ÷ ¡ú Àø¸¨Ä 㾨Šš즸ÎôÀ¢ø (¦ºÉü) ¦ÅýÈÐ «¾¢ºÂõ ¾¡ý!
எனக்கென்றால் அது அதிசயமாகப்படவில்லை ஏனென்றால் ஹூல் என்ற last name உடைய இவரது சகோதரர் செய்பவற்றிற்கு இவர் எப்படிப் பொறுப்பாக முடியும்? இந்தவிடயம் கல்விச்சமூகத்தில் பலருக்குத்தெரியும். அதுமட்டுமல்லாமல் ஜீவன் கூலின் திறமை பலர் அறிந்த விடயம்.
அப்படியானால் ஏன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பறிக்கை விடுகிறார்கள் :roll:
_______
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழ் மாணவர்களின் விருப்பதற்கு மாறானதாகவே அரசு தலைவர் செயற்பட்டிருக்கின்றார். நாம் இந்த நியமனத்தினை முழுமை யாக நிராகரிக்கின்றோமென யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
புதிய துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூலை நியமித்தமை தொடர்பாக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசியர் ரட்ணஜீவன் ஹ_லை தமிழ் மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாகவும், தமிழ்ச் சமகத்தின் எதிர்பார்ப்புக்கு மாறானதாகவும் சிறீ லங்கா அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவு செய்துள்ளதாக அறிகின்றோம்.
சிறீ லங்கா அரசு தலைவரின் இந்த முடிவானது முற்றிலும் ஒரு அங்கமான தமிழினத்தின் மாபெரும் சொத்தான கல்விச்சொத்தை அழிக்கும் நோக்கத்துடன் எடுத்த முடிவாகவே நாம் கருதுகின்றோம்.
எனவே ஒருபோதும் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக காய்நகர்த்தலினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ள நவரட்ணம் ஹ_லை நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதை தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றோம்.
எமது விருப்புக்கு மாறாக இதனை மீறி அவர் துணைவேந்தராக வருவதனூடாக எமது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினையும், எமது கல்வியச்செயற்பாடுகளையும் சீர்குலைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
நீண்டகால நோக்கில் தமிழ் மக்களின் கல்விச்சொத்தினை அழித்து, தமிழ் மக்களின் பண்பாட்டினை சீரளித்து பரிவுகளை எற்படுத்தும் நோக்கிலேயே துணைவேந்தர் தெரிவு இடம் பெற்றுள்ளமையினால் இதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
எனவே எமது இந்த வேண்டுகோளினை உதாசினம் செய்யவேண்டாம் எனக்கேட்டுக் கொள்வதுடன் இது தொடர்பாக ஏற்கனவே எம்மால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு மாறாக அரசு தலைவரின் தெரிவு அமைந்திருப்பதானது அவரது சமாதானத்தின் பற்றுதியினை கேள்விக் குறியாக்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.sankathi.com/index.php?option=c...cce1725e3f364ab
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

