03-11-2006, 06:14 AM
narathar Wrote:உண்மையில் யாழ். பல்கலைக்கழக பேரவையின் தவறான முடிவே இதற்குக் காரணம். இப்பேரவைதான் ஹூலையும் தெரிவு செய்தது. இப்பேரவைக்கும் அரசே உறுப்பினர்களை நியமித்து உயர் கல்வியை அரசியல் மயமாக்கியது. யாழ். பல்கலைக்கழக சொத்துகளை சுரண்டும் அதிகாரிகளைக் காப்பாற்றியதும் இப்பேரவைதான்.[/size]
1. ஐயா ஒரு பல்கலைக்கழகத்தின் credibility அங்கு கற்பிக்கும் ஆசிரிய பீடத்தின் கல்வித்தகமைகள் மற்றும் ஆராய்ச்சியில் அவர்களுக்குரிய ஈடுபாடுகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறதேயன்றி, உம்போன்றவர்களின் சான்றிதழை வைத்தல்ல. அவர்களது முடிவைத் 'தவறு' எனக்கூறவேண்டுமாயின் நீர் (அல்லது இந்தக்கட்டுரையை வரைந்தவர்) அவர்களில் ஒருவராக இருப்பதுடன் மட்டுமன்றி சக ஆசிரியர்களிடம் தனது நிலப்பாட்டுக்கு போதிய ஆதரவு கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
2. உலகில் எந்தவொரு நாட்டிலும் மாணவர் விருப்பத்திற்கு அமைய உபவேந்தர்கள் நியமிக்கப்படுவதில்லை மாறாக கல்வித்தகமைக்கு ஏற்பவே நியமிக்கப்படுகிறார்கள். காரணம் மாணவர்கள் இன்றைக்குப் படித்துவிட்டு நாளை வெளியேறுபவர்கள். ஆனால் ஆசிரியர்களும் துணைவேந்தரும் கழகத்தின் கல்வித்தரத்தை நீண்ட நாட்களுக்கு கட்டிக்காக்க வேண்டியவர்கள். இங்கே மாணவர்களின் கூச்சல் எங்கும் எடுபடாது.
நடந்தவற்றை கூட்டிக்கழித்துப் பார்த்தால் என்னால் யூகிக்க முடிவது: பல்கலக்கழகப் பேரவை வாக்கெடுப்பு மூலம் மூவரைத் தெரிவு செய்தது. அந்த மூவரில் சிறந்தவர் என சனாதிபதிபதியால் முடிவுசெய்யப்படும் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் "Simple as that" ஜனாதிபதியின் சொந்த விருப்பு வெறுப்புகள் தெரிவில் ஆதிக்கம் செலுத்தமுடியுமென்றாலும், அது அந்த மூவரில் யாரைத் நியமிப்பது என்பதாயிருக்குமேதவிர, நான்காவது நபர் ஒருவரை நியமிப்பதாக இருக்க முடியாது. அந்த மூவரில் ஒருவராக இருக்கும் ஆளுமையும், கல்வித்தகமையும் இதர ஆசிரியர்களின் ஆதரவும் ஹூலுக்கு இருந்திருக்கிறது என்பதுதான் மறைக்கமுடியாத உண்மை.
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

