02-06-2004, 11:01 AM
இதனைத்தான் நாம் அன்று தொட்டு வலியுறுத்தி வருகிறோம் B.B.C பல்லின பலமொழி பேசும் மக்கள் வாழும் இலங்கையில் ஒரு பொது மொழி ஒன்று அவசியமாகிறது.இப்போதைக்கு உலகில் ஆங்கிலத்தின் இராச்சியமாக இருப்பதால் அதனை ஏற்றுக்கொள்வோம் நாளைக்கே சீன மொழி பொதுமொழியாகலாம் அன்று அதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இவ்வாறான் நிலை வரும் போது எமது மொழி அழிந்துவிடுவதற்கு சாத்தியக்கூறு அதிகம் அதனால் தான் சொல்கிறோம் எமது மொழியை இன்னும் அதிகளவு ஆர்வத்துடன் கற்க வேண்டும் தாய்மொழிக்கல்வியை கட்டாயமாக்கினால் கூட நன்று,எமது இளையவர்களிடம் தாய்மொழி மீதான பற்று இன்னும் அதிகமாக வேண்டும் அதனை செய்யும் பொறுப்பு எம்மிடம் தான் உள்ளது
புலத்தில் இருந்து கொண்டு எம்மால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்கலாம் இன்று ஈழத்து இலக்கியங்களிலே முக்கிய இடம் வகிப்பவை புலம் பெயர்ந்தோர் இலக்கியம் இப்படி அழகு தமிழில் புத்தகம் வெளியிடுபவர்களையும் எழுத்தாளர்களையும்,கவிதாசிரியர்களையும் ஊக்குவிக்கவேண்டும் வெறுமனே காசுக்காக கதையெழுதும் இந்திய எழுத்து வியாபாரிகளை விடுத்து எமது தேசத்தின் உணர்வை எழுத்தில் பொறிக்கும் எம்மவர்களை ஊக்குவிக்க வேண்டும் இப்படி செய்தால் உலகமட்டத்தில் எம்மொழி சிறப்புறும்
இதே கருத்துக்களத்தில் அண்ணன் ஒருவர் புலத்திலிருந்து குறும்படங்களை தயாரித்து வெளியிடுபவர் தனது படங்களுக்கு வெளிநாட்டு கலை கலாச்சார ஊடகங்களில் கிடைத்த மதிப்பு எம்மவர் மத்தியில் கிடைக்கவில்லயே என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் அதனை எத்தனை பேர் செவிமடுத்தோம்