03-10-2006, 08:24 PM
உயர் கல்வி நிர்வாகம் அரசியல்மயமானதன் வெளிப்பாடே ஹூலின் உபவேந்தர் நியமனம்
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கடும் அதிருப்தி
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதோ அல்லது அரசின் சட்டத்தையோ வடக்கு , கிழக்கு மக்கள் ஏற்காத போது, எவ்வாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இரத்தின ஜீவன் ஹூலை தமிழ்மக்கள் ஏற்பார்களென யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி. கலாராஜ் கேள்வியெழுப்பினார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது, உயர் கல்வி நிர்வாகத்தை அரசியலாக்கியுள்ளமை குறித்து யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது தனது கடும் அதிருப்த்தியை தெரிவித்துக் கொள்கிறது. நீண்டநாட்களாக இவ்விடயம் கச்சிதமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.
யாழ். பல்கலைக்கழகமானது தமிழ் மக்களின் பிரதான சொத்தாகும். இதனை ஷ்ரீலங்கா அரசு சிதைப்பதை தமிழ் சமூகம் ஒரு போதும் அனுமதிக்காது. அரசு குறுக்கு வழிகளில் நியமனங்களை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்ற முற்படுவது குறித்து இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் அக்கறை செலுத்த வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.
சட்டத்தின் படிதான் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக ஹூல் நியமிக்கப்பட்டுள்ளாரென விதண்டாவாதம் புரிவதையும் ஏற்கமுடியாது.
உண்மையான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட ஆர்வம் கொண்டிருக்குமாயின், இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கக் கூடாது.
யாழ். பல்கலைக்கழக துணை வேந்தராக ஹூல் நியமிக்கப்பட்டமையானது ஒரு தனிநபர் பிரச்சினையல்ல. அது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் விடுக்கப்பட்ட சவாலாகும். உண்மையில் யாழ். பல்கலைக்கழக பேரவையின் தவறான முடிவே இதற்குக் காரணம். இப்பேரவைதான் ஹூலையும் தெரிவு செய்தது. இப்பேரவைக்கும் அரசே உறுப்பினர்களை நியமித்து உயர் கல்வியை அரசியல் மயமாக்கியது. யாழ். பல்கலைக்கழக சொத்துகளை சுரண்டும் அதிகாரிகளைக் காப்பாற்றியதும் இப்பேரவைதான்.
1997 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே யாழ். பல்கலைக்கழகத்தை அரசியலாக்குகின்ற பணியை அரசு மேற்கொண்டது.
எதிர்வரும் ஜெனீவா பேச்சுவார்த்தையில் அரசு இதய சுத்தியுடனும், விசுவாசத்துடனும் பங்கெடுக்க விரும்பினால் இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக செயற்பாடுகளில் ஈடுபடுவதை உடன் கைவிடவேண்டும்.
இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரின் நியமனம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி, அவர்களின் அபிப்பிராயமும் பெறப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென்றார்.
http://www.thinakural.com/New%20web%20site...Important-6.htm