03-10-2006, 08:20 PM
யாழ். பல்கலைக்கழக புதிய உபவேந்தராக இரத்தின ஜீவன் ஹூல் ஜனாதிபதியால் நியமனம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரத்தின ஜீவன் ஹூல் (53 வயது) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட இலத்திரனியல் பேராசிரியரான இவர் யாழ். பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் பேராசிரியர்களான எஸ்.கந்தசாமி மற்றும் ஆர்.குமாரவடிவேல், இரத்தின ஜீவன் ஹூல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களில் பேராசிரியர் குமாரவடிவேலினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவானது யாழ். பல்கலைக்கழத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு சிபார்சு செய்தது.
எனினும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சிபார்சினை நிராகரித்தே ஜனாதிபதி பேராசிரியர் இரத்தின ஜீவன்ஹூலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய துணைவேந்தராக நியமித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரான பேராசிரியர் மோகனதாஸின் பதவிக் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. பல்கலைக்கழக துணைவேந்தரொருவரின் பதவிக்காலம் மூன்று வருடங்களாகும். யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் முதலாவது துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.வித்தியானந்தன் ஆவார். பல்கலைக்கழகத்தின் இரண்டாவது, மூன்றாவது துணைவேந்தர்களாக முறையே பேராசிரியர்களான ஏ.துரைராஜா, கே.குணரட்ணம் ஆகியோர் கடமையாற்றினார்கள்.
பல்கலைக்கழத்தின் நான்காவது துணைவேந்தராக பேராசிரியர் பீ.பாலசுந்தரம்பிள்ளை நியமிக்கப்பட்டார். இவர் மாத்திரமே 6 வருடங்கள் துணைவேந்தராகக் கடமையாற்றினார். இதையடுத்து, பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் யாழ். பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது துணைவேந்தராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவால் நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சிபார்சினை நிராகரித்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரத்தின ஜீவன் ஹூல் நியமிக்கப்பட்டமைக்கு யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
http://www.thinakural.com/New%20web%20site...10/news-1-1.htm