03-10-2006, 07:06 PM
kurukaalapoovan Wrote:யூட், நீர் யாருக்கு பதில் எழுதியிருந்தாலும் கிறீஸ்தவப் பெயரால் எதிர்ப்புக்களை சந்திக்கிறாரோ என்று முதலில் இந்தப் பகுதியில் புலம்பியது நீர் நான் அல்ல. விடையத்திற்குள் மதவெறியை புகுத்தும் எண்ணம் உமக்குத்தான் இருக்கு போலுள்ளது எனக்கு அல்ல.
ஹூல் தனது மூதாதயர்கள் பற்றியும், தன்னைப்பற்றியும், எழுதிய புத்தகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்ற இந்து சமயம் பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்களை துக்கிப்பிடித்து ஹூல் இந்துக்களுக்கு எதிரானவர் என்று காட்ட முயன்றவர் நீர் தான். உமது மதவெறியை அம்பலப்படுத்தியதே நான் செய்தது.
kurukaalapoovan Wrote:சிறிதரன் சூத்திரதாரி கூல் சகோதரர்கள் வெறும் விரல் சூப்பிகள் என்றால் தமது பெயர் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று மறுப்பறிக்கை விடவேண்டியது தானே <b>ஒரு முறையாவது</b>, என் மொளனமாக இருக்கிறார்கள்?
மறுப்பறிக்கையை 2002 இலேயே விட்டுவிட்டார் ஹூல். கூகிளில் கூட தேடிப்பார்க்காமல் தெரியாத விடயம் பற்றி மதவெறியால் எழுதுவது நீர்.
S. Ratnajeevan H. Hoole, \"Hoole Denies Authoring UTHR (J) Report\", Sunday Leader, Letters Page, Aug. 4, 2002
இந்த UTHR(J) இணைப்பில் இராஜன் ஹூலும் சிறிதரனும் கூட்டாக ஜீவன் ஹூலுக்கும் UTHR(J) க்கும் சம்பந்தம் இல்லை என்று மறுத்திருக்கிறார்கள்.
http://www.uthr.org/clippings.htm
kurukaalapoovan Wrote:முறிந்த பனைமரம் என்ற புத்தகத்தை வாசித்துக்கும் பொழுது அதன் எழுத்தாளர்கள் அனைவரும் UTHR(J)அங்கத்தவர்கள் என்று தான் இனங் காட்டிக் கொள்கிறார்கள். சோமசுந்தரம் எங்கு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்? இல்லை benefit of the doubt இக்கு விட்டிருக்கிறாரோ?......
http://www.uthr.org/history.htm
UTHR(J) இன் வரலாற்றுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறீர் படித்துப்பார்க்காலே கொடுத்திருக்கிறீர், என்று உமது அறியாமை காட்டி நிற்கிறது.
80களின் பிற்பகுதியில் ஜே.வி.பி.யை அழிக்கிறோம் என்று சிறிலங்கா இராணுவம் சிங்கள மாணவர்களை கொன்றொழிப்பதை பொறுக்க முடியாத சிறிலங்கா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சேர்ந்து இந்த அமைப்பை (UTHR) ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் எல்லா பேராசிரியர்களுமே இதன் அங்கத்தவர்கள். யாழ்ப்பாண பிரிவு UTHR(J) தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை, தாய் அமைப்பு உரியவிதத்தில் பகிரங்கப்படுத்தவில்லை என்று கூறி பிரிந்து செயற்பட ஆரம்பித்தது. UTHR(J) இந்திய இராணுவத்தின் அடாவடித்தனத்தை முன்னின்று அம்பலப்படுத்தியது. இராஜினி கொல்லப்பட்டபின், அந்த பழி விடுதலைப்புலிகளின் மீது போடப்ப்ட்ட பின், இந்த அமைப்பு விடுதலைப்புலிகளின் மனித உரிமைமீறல்களையும் அறிவிக்க ஆரம்பித்தது. ஜீவன் ஹூல் முன்னர் போல தனது பல்கலைக்கழக இணையவலை வசதிகள் மூலம் இந்த அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். 2002ல் தனக்கும் UTHR(J) க்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தார்.
இந்த அமைப்பில் பெரும்பாலும் எல்லா பேராசிரியர்களுமே சம்பந்தப்பட்டிருந்தனர். ஒரு கட்டத்தில் சிறிதரன் UTHR(J) யை கைப்பற்றிய பிறகு யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் துரைராஜா இந்த அமைப்புக்கும் தமது பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை விட்டிருந்தார். இந்த அறிக்கையை பற்றி நெடுமாறன் ஐயா கனடாவில் சுரேஷ் மாணிக்கவாசகருக்கு எதரான வழக்கில் குறிப்பிட்ட போது நீதிபதி அவரை பொய் சொல்கிறார் என்றார். நான் நெடுமாறன் ஐயாவுக்கு இந்த அறிக்கையை எடுத்து கொடுத்து நீதிமன்றில் நிருபிக்க வைத்தேன். இதே போல் UTHR(J) அறிக்கையை காட்டி ஜேர்மனியில் எனது உறவினரின் அகதி கோரிக்கையை நிராகரிக்க நீதிபதி முயன்ற போது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் அமைப்பு UTHR(J) வின் அறிக்கைகள் உண்மைத்தன்மை குறைந்தவை என்று குறிப்பிட்டிருந்த ஐ.நா. அறிக்கையை சமர்ப்பிந்து வழக்கு வெல்ல வைத்தேன்.
ஆகவே இதனோடு முன்னொருகாலத்தில் சம்பந்தப்பட்ட எல்லாரும் தமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை விடக்கோருவதும், அந்தநாள் தொடர்புக்காக இன்று அவர்களை ஒரு நியாயமான பதவிக்கு பொறுப்பேற்க விடாமல் தடுப்பதும் பாமரர்களின் பிற்போக்கான முட்டாள்தனமே அன்றி வேறெதும் அல்ல.
''
'' [.423]
'' [.423]

