03-10-2006, 06:22 PM
பல்கலைக்கழக வாசல்படியை மிதிக்க ஹூலுக்கு இடமளிக்க போவதில்லை யாழ். பல்கலைக்கழக மாணவர்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அவரின் அதிகாரத்தைப் பயன்படுத்திஇ யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள இரத்தின ஜீவன்ஹூலை பல்கலைக்கழக வாசல்படியை மிதிக்க விடமாட்டோமென அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் சூளுரைத்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்திற்கான புதிய துணைவேந்தராக இரத்தின ஜீவன் ஹூல் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை செய்திகள் வெளியாகியதை அடுத்துஇ அவசரமாக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நேற்று கூடிய மாணவர்களே இவ்வாறு சூளுரைத்துள்ளனர்.
இது பற்றி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.விஜயரூபன் கூறுகையில்இ
பேராசிரியர் ஹூல் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதை நாம் ஒரு போதும் ஏற்கப் போவதில்லை. இதற்கப்பால் யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் அவரை பல்கலைக்கழக வாசல்படிகளை மிதிக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
மாணவர்களாகிய எமது எதிர்ப்பையும் மீறி அவர் இராணுவஇ பொலிஸ் பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்திற்குள் நுழையலாமென கனவு காணுவாராயின்இ அது பகல் கனவாகவேயமையும். அவரினால் முடியுமாயின்இ யாழ். பல்கலைக்கழக வாசற் படிகளை மிதித்துப்பார்க்கட்டும். அப்போது நாம் எமது பலம் என்ன? நாம் யார்? என்பதையெல்லாம் புரிய வைக்க காத்திருக்கிறோம். யாழ். பல்கலைக்கழகத்தினுள் எவரும் அத்து மீறி நுழைந்ததாக இதுவரை வரலாறு எதுவும் இல்லையென்றும் அவர் கூறினார்.
லங்காசிறி