03-10-2006, 11:45 AM
ThamilMahan Wrote:நாரதர்
நீங்கள் விவாத்திற்குரிய விடயங்களை அதாவது அவரது எழுத்துமூலம் வெளிக்கொணர்ந்த விடயங்களை வைத்து அவர் 'ஒற்றன்' என்பதற்கான எந்த ஆதாரமும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அவரது விவாதத்தை அவர் வெளிக்கொணர்வது அவரது சுதந்திரம். அதை மறுத்து உங்களது விவாததினை வெளியிடுவது உங்கள் சுதந்தரம். இது ஒரு "academic quality". இதன் காரணமாக அவர் ஒற்றன் ஆகிவிட முடியாது. ஒற்றன் என்பதற்கான அர்த்தம் என்னவென்று விளங்கப்படுத்தத் தேவையில்லை என்று. நினைக்கிறேன்.
வணக்கம் மகான்,
நான் நிதர்சனம் எழுதிய ஒற்றன் என்னும் சொற்பத்தைப் பற்றி எனது கருத்தைத் தெரிவிக்கவில்லை, அதற்குப் பதிலாக நீங்கள் ஜீவன் கூலை நல்லவர்,வல்லவர் தேசிய விடுதலைப் போருக்கு எதிரானவர் இல்லை என்று எதுவித ஆதாரமும் இன்றி புகழ்ந்து தள்ளியத்தயே சுட்டிக் காட்டியே பல வினாக்களைத் தொடுத்திருந்தேன்.அவை எதுவுக்குமே நீங்களோ அன்றி ஜூடோ பதில் அழிக்கவில்லை.அதை விடுத்து அவர் ஒரு கிரிஸ்தவர் அதனால் தான் அவர் எதிர்க்கப் படிகிறார் என்று நிறுவ முற்படுகிறீர்கள்.
இங்கே இடப்பட்ட ஆதாரங்களை மறுதலிக்காமல் இப்போது அவர் தேசிய விடுதலைக்கு எதிராகச் செயற்பட்டது அவர் உரிமை என்று வாதாடுகீறீர்கள்.இவருக்கும் ராமராஜன்,கதிர்காமர், நீலன் திருச்செல்வம் போன்றோருக்கும் எதுவித வேறுபாடும் கிடையாது.
இவர்கள் பேரினவாத அரசாங்கத்தை அண்டிப் பிழைப்பவர்கள்.இவர்கள் சகல தளங்களிலும் எதிர்க்கப் பட வேண்டியவர்கள்.
தேசிய இன விடுதலைப் போரே இன்று எமக்கு முக்கியமானது யாழ்ப் பல்கலைக் கழகம் அல்ல.யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் தேசிய விடுதலைப் போரின் முன்னணி போராட்ட சக்திகள்.இதை முடக்கும் நோக்குடனே தேசிய விடுதலைப் போருக்கு எதிர் நிலை அரசியலை நடாத்தும் இவர் மகிந்தவினால் நியமிக்கப் பட்டுள்ளார்.இது ஒரு எதிர் அரசியல் நடவடிக்கயே ஒழிய,இந்தப் பதவி இவரின் திறமைக்காகவோ அன்றி யாழ்ப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்காகவோ கொடுக்கப் படவில்லை.
மேலும் இலங்கைப் பல்கலைக் கழகங்களின் இழி நிலைக்கு பல்வேறு காரணக்கங்கள் உண்டு அது ஒரு தனி மனிதனின் ஆளுமை சார்ந்த விடயம் இல்லை.சிரிலங்கா அரசாங்கத்தின்,அதன் சிங்கள மயமான நிர்வாக இயந்திரத்தின் பாகுபாடான செயற்பாடுகள்.சிறிலங்காவின் அரசாங்கத்தில் உள்ள ஊழல்,இலன்ச்ச நிர்வாகச் சீர்கேடுகள் ,அரசியல் தலை ஈடுகள் எனப் பல.
இவற்றுற்கெல்லாம் தீர்வாக அமையப் போவது எமது தேசிய விடுதலையும்,அதன் பால் பெறப்படும் எமது தேசிய நிறுவனங்களுமே.இதன் அடிப்படைகள் ஏற்கனவே இடப்பட்டு வருகின்றன.இவற்றை விடுத்து எதிரியின் அடிவருடிகளுக்கு அவர்கள் எனது சமயத்தவன் என்பதை ஒன்றே காரணமாகக் கொண்டு வாதாடுவது,தேசிய இனவிடுதலைப் போரைப் புறந்தள்ளி சமய வெறியய் முன் நிறுத்துவதாகவே அமையும்.

