03-10-2006, 11:11 AM
ஆண்- பெண் சமவுரிமை காண்போம்
சொ. அமிர்தலிங்கம்
(நேற்றைய தொடர்ச்சி)
அரசியலில் பெண்கள்
இலங்கை நாட்டின் சனத்தொகையில் 53 சதவீதமானவர்கள் பெண்கள். எனினும், மிகக் குறைவானவர்களே அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். இன்று இலங்கையில் 88.6 சதவீதத்தினர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். பல்கலைக்கழகங்களில் கல்வி கற்போரில் 49 சதவீதமானவர்கள் பெண்கள். மனித மேம்பாட்டு வரிசைக் கிரமத்தில் சர்வதேச ரீதியாக 81 ஆம் இடத்தை வகிக்கிறது இலங்கை. யாழ். குடாநாட்டில் உயர்கல்வி பெறும் பெண்கள் 59 சதவீதமாவார்கள். ஆண்கள் 19 சதவீதமே உயர்கல்வி பெறுகிறார்கள். இலங்கையில் பெண்கள் அரசியல் உரிமைகள், அதிகாரங்கள் அற்றவர்களாகவே உள்ளனர். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் என்னும் அத்தியாயத்தில் உறுப்புரை 12 (2) கூறுவதாவது "இனம் மதம், மொழி,சாதி, பால், அரசியற்கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுக்குள் எந்தவொரு காரணமாகவும் எந்தப்பிரசைக்கும் ஓரம் காட்டக்கூடாது" என்கிறது. இதன்மூலம் பெண்களுக்கு அரசியலில் பங்கு பற்றும் சம வாய்ப்பு உண்டு. இலங்கையில் வாக்காளர்களிலும் 50 சதவீதத்தினர் பெண்கள். ஆனால், பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 4.8 சதவீதமாகவும், மாகாண சபைகளில் 3.4 சதவீதமாகவும், மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளில் 1.97 சதவீதமாகவும் காணப்படுகிறது. கட்சிகளில் பெண்களுக்கு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு சட்ட ரீதியாகச் செய்வதன் மூலம் பெண்கள் பங்களிப்பைக் கூட்ட வாய்ப்புண்டு. பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கும் அதிகளவு பெண்களை தெரிவு செய்வதாயின் அரசியலமைப்பு, பாராளுமன்ற தேர்தல் சட்டம் மற்றும் மாகாண சபைகள் (திருத்தப்பட்ட சட்டம்) 1988 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்கம் ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் 13 சதவீதத்தினர் உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிக்கின்றனர். பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைப் பார்ப்பின் பங்களாதேஷ் 1.5 சதவீதத்தையும், இந்தியா 8.8 சதவீதத்தையும், பாகிஸ்தான் 21.6 சதவீதத்தையும் கொண்டுள்ளன. எனவே இலங்கையில் 1931 ஆம் ஆண்டு வாக்குரிமைச்சட்டம் மூலம் அரசியலில் வாக்களிக்கும் உரிமை பெற்ற பெண்கள் இன்னும் சரியான முறையில் அரசியல் பிரதிநிதித்துவம் பெறவில்லை. ஆசியாவில் பெண்கள் பிரதிநிதித்துவத்தில் இலங்கை 14 ஆம் இடத்திலும், சர்வதேச ரீதியில் 73 ஆம் இடத்திலும் காணப்படுகிறது. 1960 ஆம் ஆண்டு உலகில் முதலாவது பெண் பிரதமராக திருமதி ஷ்ரீமாவோ பண்டாரநாயக்காவை உருவாக்கிய இலங்கை, 1994 ஆம் ஆண்டு முதல் பெண் ஜனாதிபதியாக திருமதி சந்திரிகா குமாரதுங்கவை உருவாக்கிய இலங்கை இன்னும் பெண்கள் பிரதிநிதித்துவத்தில் பின்தங்கியுள்ளமை கவலைக்கிடமான விடயமாகும்.
எனவே அரசானது பெண்களின் பிரதிநிதித்துவம் போதாமையை மனதிற்கொண்டு பாராளுமன்றத்தில் பிரேரித்து பிரதிநிதித்துவத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழிப்புணர்ச்சித் திட்டங்கள்
இன்று இலங்கையில் யுத்த சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆண்களைப் பறிகொடுத்து விதவைகளான பலர் வாழ்கிறார்கள். இவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். மேலும், வேலை செய்யும் பெண்களுக்கு வீட்டுச்சுமை, வேலைச்சுமை என்பன சேர்ந்து மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆண்களும் வீட்டுச்சுமையில் பகிர்ந்து செயலாற்றுவது நல்லது. மேலும் பெண்கள் வேலைக்குச் செல்லும் போது வீட்டில் தனியாக விடப்பட்ட பெண்பிள்ளைகள் தந்தை, சகோதரர்களால் பாரிய தொல்லைக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களுமுண்டு. தங்கை, சகோதரன் மதுபோதைக்குட்பட்டு நிதானம் இழப்பதாலும், தாய் வெளிநாட்டில் வேலை செய்தாலும் இப்படியான தனிமையான சந்தர்ப்பங்கள் இந்த நிகழ்வுகளுக்கு வழியமைக்கிறது. எனவே, விழிப்புணர்ச்சித்திட்டங்களை ஏற்படுத்தி மது பாவனையைக் குறைக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளையிட்டும், அவர்களின் முக்கியத்தையும் குறித்து விழிப்புணர்ச்சித்திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இப்படியான பாலியல் வன்முறைக்குள்ளாகியோர் மீது கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். 1998 இல் 1,096 பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நடைபெற்றுள்ளன. இதில் 291 சம்பவங்கள் வீட்டுக்குள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம் நாட்டிலும் வீட்டிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையெனில், அவர்கள் எங்கு செல்வார்கள்? எனவே, விழிப்புணர்ச்சித்திட்டங்கள் மூலம் அவர்களுக்கு வன்முறைகள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளும் முறைகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், 1998 ஆம் ஆண்டு ஏற்பட்ட 129 கொலைகளில் 65 சதவீதமானவை கணவன்மாரால் மதுபாவனையின் காரணமாக ஏற்பட்டவையாகும். எனவே, துன்பப்படும் பெண்களை பாதுகாப்பதும், அவர்களுடைய உரிமைகளினை பெற்றுக் கொடுப்பதும் சமுதாயத்தின் தலையாய கடமையாகும். வெளிநாடுகளில் வேலை செய்யும் பல பெண்மணிகள் கூட துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். வேலை நீக்கம், ஊதியம் வழங்காமை, குறைந்த ஊழியம் வழங்குதல், பாலியல் துன்புறுத்தல், சித்திரவதை, அடி, உதை, சூடு, விபசாரம் எனப் பல விதத்தில் உடல், உள பலவந்தந்துக்குள்ளாகியுள்ளனர். இதை தூதரங்களுக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் செய்வதறியாது விரக்தியின் விளிம்பில் நாடு திரும்ப முனைகின்றனர். எனவே, இதற்கான சட்ட நடைமுறைகளை அந்தந்த நாடுகள் சரி வர அமுல் நடத்த வேண்டும். எமது நாட்டுத் தூதரகங்களும் இதற்காக அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். இலங்கையின் அந்நியச் செலாவணியில் 65 சதவீதத்தை பெற்றுக் கொடுத்து பொருளாதாரத்தில் வளம் சேர்ப்பவர்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அப் பெண்களின் சுகவாழ்விற்கு தேசிய ரீதியான பங்களிப்பு அவசியம். அவர்களது கூடிய வேலை நேரம், கூடிய உழைப்பு, கல்வி, சுகாதாரம், குடும்பநலன் என்பவற்றில் முன்னேற்றமடைய உதவ வேண்டும். 1910 ஆம் ஆண்டு இரண்டாவது சமூக ஜனநாயக மகாநாட்டில் பங்கு பற்றிய ஜெர்மன் ஜனநாயக கட்சித் தலைவர் திருமதி கிளோராவெட்சின் அம்மையார் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்த வேண்டுமென்று பிரேரித்தார். இது ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்கப்பட்டு வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கம் மகளிருக்குரிய அந்தஸ்தையும் உரிமைகளையும் வழங்குவதேயாகும். பெண்களின் அடிமை நிலையைப் போக்க, சமூகநலன் பேண, குடும்ப நலன், குழந்தை நலன் பாதுகாக்க, குறைந்த ஊழியம் பெறுவதைத் தடுக்க, சுரண்டலைப் போக்க, உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்க, குறைந்த வேலை நேரம் வழங்க, கலை ,கலாசார, அரசியல் விடயங்களில் பங்குபற்ற, தொழில்துறைகளில் ஈடுபட, திறமையை காண்பிக்க ஏற்ற சந்தர்ப்பங்களை உருவாக்க இந்தச் சர்வதேச தினங்கள் வருடாவருடம் இடமளிக்கின்றன.
(தொடரும்)
http://www.thinakural.com/New%20web%20site...0/Article-3.htm