03-10-2006, 10:01 AM
ஆனையிறவு முகாம் இருந்த பகுதியில் போராளி குடும்பங்களுக்கு வீடமைப்பு
அரச படையினரிடமிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஆனையிறவு இராணுவ முகாமைக் கைப்பற்றிய நீண்ட நாட்களுக்குப் பின்னர் தற்போது அந்த முகாம் பகுதிகளில் புலிகள் அமைப்பு குடியிருப்பு வீடுகளை அமைக்கத் தொடங்கியுள்ளதாகவும், இந்த குடியிருப்பு மனைகள் புலிகள் இயக்கப் போராளிகளின் குடும்பங்கள் குடியிருப்பதற்காகவே அமைக்கப்பட்டு வருகின்றன எனவும் இராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
புலிகள் இயக்க தலைமைத்துவம் இந்த வீடமைப்பு பணிகளை ஜெர்மனியைச் சேர்ந்த ஜீ.ரி.இசட் நிறுவனத்தின் உதவியுடனேயே மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய தரப்பு சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி கூறியுள்ளார். மேலும், இவ்வாறு புலிகள் அமைப்பு அவசரமாக முன்னைய ஆனையிறவு இராணுவ முகாம் பகுதியில் மக்கள் குடியிருப்புகளை அமைத்து வருவதற்குக் காரணம் அரச பாதுகாப்புத் துறையினர் ஆனையிறவு பகுதிகளை மீண்டும் புலிகளிடமிருந்து கைப்பற்றுவதற்கான இராணுவ நடவடிக்கையை எடுக்கக்கூடும் என்ற சந்தேகமே எனவும், இதனாலேயே இறந்துபோன புலிகள் இயக்க பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்காக புலிகள் அமைப்பு வீடமைப்புத் திட்டத்தை அமைப்பதன் மூலம் அப்பகுதிகளைத் தம்வசம் பாதுகாத்துக் கொள்ள முயல்வதாகவும் குறித்த சிரேஷ்ட பாதுகாப்புத்துறை உத்தியோகத்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பெரும்பரப்பளவிலான ஆனையிறவு இராணுவ முகாம்களை கடந்த 1996 ஆம் ஆண்டில் புலிகள் இயக்கம் கைப்பற்றியிருந்தது. இவ்வாறு அரசாங்கத்தின் இராணுவ முகாம்கள் இருந்த இடத்தில் இறந்த பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்காக வீடமைக்கும் கட்டாய பணிகளில் ஜெர்மனியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அடிப்படையான உதவிகளை வழங்குவது சட்ட விரோதமானதாகும். மேலும், இவ்வாறு ஆனையிறவு பிரதேசத்தில் அரச பாதுகாப்புப் படையினரின் முகாம் அமைந்திருந்து பின்னர் புலிகள் இயக்கத்தினரால் அழிக்கப்பட்ட பிராந்தியத்தில் வீடமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பது பற்றி மேற்படி ஜேர்மனி நிறுவன பாதுகாப்புத் துறை அதிகாரிளுக்கு முன்னறிவிப்பைக் கூட தெரிவிக்கவில்லையென குறித்த சிரேஷ்ட பாதுகாப்புத்துறை உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.
-திவயின : 08.03.2006-
நன்றி தினக்குரல்