03-09-2006, 06:45 PM
பேராசிரியர கூல்க்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு!
எழுதியவர் Editor
Sunday, 04 July 2004
--------------------------------------------------------------------------------
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஒருவர் நேற்று யாழ். பல் கலைக்கழகத்துக்குச் சென்றபோது மாணவர்கள் அவருக்குத் தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பல்கலைக்கழக மானிய ஆணைக் குழு உறுப்பினரான பேராசிரியர் சாமுவேல் ரட்ணஜீவன் றொபேர்ட் கூல் என்பவருக்கே மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரி யர் அழகையா துரைராஜா ஞாபகார்த்த நினைவுப் பேருரை கைலாசபதிகலை யரங்கில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகங் களின் மானிய ஆணைக்குழு உறுப் பினரான பேராசிரியர் சாமுவேல் ரட்ண ஜீவன் றொபேர்ட் கூலும் கலந்து கொண்டார்.
இவர் கொழும்பில் இருந்துகொண்டு யாழ். பல்கலைக்கழகத்தின் மனித உரிமைக்கான ஆசிரியர் குழு என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழ்த் தேசியத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் கருத் துக்களை வெளியிட்டுவருகிறார் - என்று மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
பல்கலைக்கழகத்தின் உள்ளே யும் வெளியேயும் பதாகைகளைக் கட்டித் தொங்கவிட்டு மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மாணவர்களால் தொங்கவிடப் பட்ட பதாகைகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்களில் சில வருமாறு:-
மாமனிதர் நினைவுப் பேருரையில் துரோகியை அனுமதியோம்!
கூல்! கொழும்பில் எம் தேசத்தை விற்பவனே. உடனே வெளி யேறு!
கூல் நீ ஒரு தேசத்துரோகி. உனக்கு இங்கு இடமில்லை.
கூல், மானமிழந்து வாழ்பவனே. உன்னை மன்னிக்கமாட்டோம்.
கூல் தமிழர் மானத்தை விற்பவனே. எம் மண்ணிற்கு ஏன் வந் தாய்?
இதேவேளை -
மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் துரைராஜா வின் நினைவுப் பேருரை நிகழ்ச்சி அமைதியாக நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
நினைவுப் பேருரையை மொரட்டுவப் பல்கலைக்கழகத் துணைவேந் தரும் அறிவு விருத்தி தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் செயலாளருமான பேரா சிரியர் தயானந்த எஸ்.விஜயசேகரா நிகழ்த்தினர்.
யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ம.சிவசூரிய மற்றும், யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி, பேராசிரியர் ப.கோபலகிருண ஐயர் உட்பட பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவர் கள் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். .
Uthayan
http://sooriyan.com/index.php?option=conte...ar=2004&month=7