03-08-2006, 02:42 PM
தமிழக அரசியல்: தமிழகத்திலிருந்து நாக இளங்கோவன்!
வைகோவின் அரசியல் - தமிழ்ப்பயிரல்ல!
- நாக.இளங்கோவன் -
அரசியல் கோணல் ஒன்றை வைகோ நடத்தி, பெரிய வரலாற்றுச் செயல் புரிந்துவிட்டதாக எண்ணி செம்மாந்த நடை ஒன்றை போட்டுக் காண்பித்திருக்கிறார் இன்று. பார்ப்பவர்கள், கேட்பவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள் என்ற எண்ணம் வேறு இவரின் மமதையை அதிகரித்திருக்கிறது. இந்தக் கோணல் நாடகம் ஒன்றும் இவருக்குப் புதிதல்ல. இவரின் கோமாளித் தனத்தின் மூன்றாம் பாகம் இது.
வைகோவின் சிறப்பு என்றால், சற்று வேகமாக செயல்படக் கூடியவர் என்றும், தமிழர் நலனுக்காகக் குரல் கொடுப்பவர் என்றும் பேசப்பட்டவர்/பேசப்படுபவர். சிலருக்கு இவர் செய்கைகளில் அய்யம் ஏற்பட்டபோதிலும், தமிழர் நலன்கள் சிலவற்றில் நிலைத்த நிலைப்பாடு கொண்டவர் என்ற எண்ணத்தால், எத்தனைக் கோமாளித்தனம் செய்தாலும், பரவாயில்லை தமிழர் எனும்போது குரல் கொடுக்கிறாரே என்று எண்ணத்தோன்றி தமிழ் நலம், உலகார்ந்த தமிழ் மக்கள் நலம் என்ற கண்ணோட்டத்தில் இவரை நற்றமிழர் பலரும் மதிப்பதுண்டு.
ஆயினும், மீண்டும் மீண்டும் தான் ஒரு பயிரல்ல, நிரந்தரக் களையே! என்று நிறுவுகிறாரோ என்று அய்யுறத் தோன்றுகிறது.
1996/97ல் பா.ச.கவுடன் கூட்டணி வைத்த முதல் திராவிட இயக்கம் இவரின் இயக்கம். சரி, யார்தான் இதைச் செய்யவில்லை, எல்லா கட்சியினரும் பா.ச.கவை சுவைத்து வெளிவந்தவர்கள்தானே என்று விட்டுவிடலாம். ஆயினும்,. இவரின் வண்ணச் சுவரொட்டிகளில், கொள்கைப் பிரச்சாரமாக, இவருக்கு இடத்திலே அண்ணாத்துரையையும், வலத்திலே வாச்பாயியையும் அச்சடித்துக் கொள்கை பரப்பினாரே, அதை மன்னிக்கவேயில்லை திராவிடத்தையும் அண்ணாவையும் போற்றியவர்கள். அதை அவர் அரசியல் சுவரொட்டிகளாக இல்லாமல், கொள்கை முழக்கமாக செய்து இருந்தார். இது இவரின் கோமாளித்தனத்தின் முதல் பாகம்.
அடுத்ததாக, 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தமிழகக் கட்சிகள் அனைத்தும் தமிழன்னை செயலலிதாவுடன் அணிவகுத்து நிற்க, கருணாநிதியுடன் கூன் விழுந்த கட்சி, குருட்டுக் கட்சி, செவிட்டுக் கட்சி என்று பல கட்சிகள் கூட்டணி போட்டு நின்றன.
அப்போது இவருக்கு ஒதுக்கப் பட்ட 22 இடங்களில், 3 இடங்கள் இவர் கேட்ட இடங்கள் இல்லை என்ற ஒரு நொண்டிச் சாக்கை சொல்லிவிட்டு கூட்டணியில் இருந்து விலகி விட்டார். அ.தி.மு.கவிற்கும் அப்போது இவரை சேர்த்துக் கொண்டால், போதிய இடங்கள் ஒதுக்க முடியாது என்ற நிலையில் அவர்களும் கைவிட்டு வேறு பல வழிகளில் இவருக்கு உதவியதாக வதந்திகள் உலவின.
கருணாநிதி மீது வசை பாடி விட்டு, இவரின் பிரச்சினையை கருணாநிதி மேல் திருப்பிவிட்டுவிட்டு உலகத்தமிழர்களின் முன்னால் குளிர் காய்ந்து கொண்டிருந்தார் வைகோ.
கருணாநிதியைப் பிடிக்காத இந்திய மற்றும் உலகவாழ் தமிழரும், கருணாநிதிக்கு சங்கடம் என்றால் அது பரவாயில்லை என்று, வைகோவின் வறட்டு மற்றும் தமிழர்-வஞ்சனைப் போக்குக்கு ஒத்தடம் கொடுத்தனர் என்பதும் உண்மை.
அப்போதும் அவருக்குத் தன்னலம் முக்கியமாக இருந்தது. தமிழர் நலம் அல்ல!
செயலலிதா வராமல், கருணாநிதி வந்துவிட்டால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மற்றும் உலக வாழ் தமிழர்கள் எல்லோருக்கும் பெரும் நலம் விளைந்து தமிழ் இந்தத் தரணியை ஆண்டு விடும் என்று சொல்ல வரவில்லை.
தமிழர்களுக்கு எதிரே நிற்பது யார்? என்ற கேள்விக்கு எத்தனை விடைகள் எழுத முடியும் ஒரு நல்ல தமிழனால் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தானும் தோற்று, திமுகவும் கவுரவமாகத் தோற்க முடியாமல் செய்து, மீண்டும் செயலலிதா ஆட்சியைப் பிடித்து அரசோச்ச வழி அமைத்து, தமிழகத்தை குறிப்பாக "தமிழை", "தமிழ்/தமிழர்" என்ற சொல்லை உச்சரிக்க முடியாமல் செயலலிதா செய்ததற்கு வழி அமைத்துக் கொடுத்ததில் இவருக்கு நிச்சயம் பங்கு உண்டு!
தான் கொடுத்த சந்தில் புகுந்த செயலலிதா, சகட்டு மேனிக்கு காவல்துறையினரை வைத்து ஆடிய ஆட்டத்தில் தானும் சிக்கி, தடுமாறி, நிலை குலைந்து, புலம்பி, பிதற்றி, ஏறத்தாழ பித்துப் பிடித்த நிலையில் விடுபட்டதை உலகமேப் பார்த்து வருந்தியது.
வைகோ மேல் பிடிப்பில்லாதவர்கள் கூட, திமுக உட்பட மாற்றுக் கட்சியினர் கூட அவர் கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறை அடைக்கப் பட்டதற்காக வருந்தினார்கள். காரணம் அவர் கைது செய்யப் பட்டதற்கு சொல்லப் பட்டக் காரணம் அப்படி.
தமிழ் தமிழர் என்ற இரு சொற்களையும் தமிழகத்தில் உச்சரிக்க முடியாத அவல நிலையை ஏற்படுத்தியதற்கு செயலலிதாவும், பா.ச.கவும் முழுக் காரணம் என்பதை அனைவரும் அறிவர்.
சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் தமிழகச் சாலைகளிலே நடந்து, ஓடி, கலிங்கப் பட்டியில் மண்வெட்டி பொதுப்பணி ஆற்றியதெல்லாம் ஊரை ஏமாற்றுவதற்கு என்று எல்லாரோலும் எண்ணப்படும் அளவிற்கு அவரின் கூட்டணி மாற்றம் அமைந்துள்ளது.
நேற்றுவரை கோபாலபுரத்தில் பல்லைக் காட்டியவர் இன்று போயசு தோட்டத்தில் கோலம் போட மீண்டும் சென்றிருப்பது இவரின் அரசியல் கோமாளித்தனத்தின் மூன்றாம் பாகம்.
இந்தப் புரட்சிப் பூச்சி என்ன சாதிக்கப் போகிறது என்று பார்ப்பது நல்லது.
மீண்டும் ஒரு வேளை செயலலிதா மாபெரும் வெற்றி பெற்று அவரோடு இணைந்த வைகோவும் மாபெரும் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைவார்களே ஆயின், வைகோவுக்கு எதிர்க்கட்சி வரிசை கிடைக்கும்.
இந்த வெற்றியில் மயங்கிப் போய் அதிக பக்கமாக 35 பேரைக் கொண்ட இவரின் வரிசை என்ன சாதித்து விடப் போகிறது?
தமிழ் என்று பேசி விட முடியுமா எதிரே செயலலிதாவை முதல்வராக வைத்துக் கொண்டு? இவர் கட்சியினர்தான் பேசி விட முடியுமா? விடுதலைப் புலிகளை அன்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று இவரால் பேச முடியுமா? சும்மா வெற்று கூச்சல் இட்டுக் கொண்டு திரியும் இவரால் ஏதாவது பயன் இதுவரை இருந்ததா என்று ஒன்றும் புரியவில்லை. வெறும் சல சலப்பு. (உண்மையிலேயே ஈழத்தமிழருக்கு இவர் உதவ முனைவாராகின், இவரின் தமிழ் ஒழுக்கக் கேட்டால், ஈழத்தமிழரின் நலன் கூட இவர் போன்ற தமிழக அரசியல் வாதிகளால் மாசு படக் கூடும்.)
அப்படிப் பேசினால், செயலலிதாவும் அவரின் சோப்படையினரும் இவரை சும்மா விடுவார்களா? தினமும் சட்ட மன்றத்தில் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே எறியப்படுவார்களே தவிர வேறொன்றும் இல்லை.
ஏற்கனவே நெடுஞ்செழியன், திருநாவுக்கரசர், இராமச்சந்திரன் போன்ற பல தமிழர்களின் மதியற்ற அரசியலால், தன்னை வளர்த்துக் கொண்ட செயலலிதாவிற்குத் தொடர்ந்து தம்மைக் காணிக்கையாக்குவது பல தமிழர்களின்வாடிக்கை. அந்த முறைமையைத் தவறாமல் செய்து, மீண்டும் ஒரு அய்ந்து ஆண்டுகளுக்கு தமிழ் தமிழர் என்ற ஓசை கேட்டு விடாமல், மேலும் மேலும் தமிழகத் தமிழர்களை கோழைகளாக்குவதற்கும், தான் மட்டும் பம்மாத்து அரசியல் செய்வதற்காக இவர் இந்த நிலையைத் திட்டமிட்டு
எடுத்துள்ளார் வைகோ என்றால் அதை மறுப்பது கடினம்.
ஒரு வேளை திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட்டால், இவரின் நிலை என்ன?
ஏதோ தவறுகள் சில செய்தாலும், தமிழ் என்ற காரணத்தில் பிழைத்துக் கொண்டிருந்த வைகோவிற்கு அந்த மரியாதையையும் தமிழ் கூறு நல்லுலகம் இனி செய்யாது. மானம் இழந்து மதி கெட்ட இப்போக்கினால் வைகோ இனி ஒரு புயலல்ல; பல பூச்சிகள் போல் இவரும் ஒரு பூச்சி.
இதை எழுதுவது, திமுக மேல் இருக்கும் பிரியத்தாலோ, அதிமுக மேல் இருக்கும் வெறுப்பினாலோ அல்ல. தமிழ், தமிழர் நலம் என்ற பார்வையில் எழுந்த அய்யங்களே காரணம்.
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ் உள்ளங்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன உலகம் முழுதும். இவர்களுக்கு, தமிழுக்குக் கேடு வரும்போது, தமிழர் நலம் இங்கேயும் எங்கேயும் நசியும் போது உள்ளம் கசியும், உணர்ச்சி பெருகும்.
அந்த வகையில், பொடா சட்டத்தின் கீழ் இவரும் அவர் கட்சியினர் ஒன்பது பேரும் அடைக்கப் பட்டபோது அதன் காரணம் என்ன சொல்லப் பட்டது?
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதுதானே. ஒரு புறம் அது குற்றமா அல்லவா என்ற வாதங்கள் தொடர, சட்டம் கூட ஆதரவாக சனநாயக முறையில் பேசுவது தவறல்ல என்றுதான் சொல்லி அவரை வெளிவரச் செய்தது.
இவர் மட்டுமல்ல இவர் கட்சியினரின் 9 பேர் பிடிபட்டார்கள். இவரைப் போலதான் இவர் கட்சியினரும் மதி இழந்து கிடக்கிறார்கள்.
இவர்களை மட்டும் பிடித்தால் போதாது என்று நெடுமாறனையும் சுபவீயையும் சாகுல் அமீதையும் கைது செய்து சிறையில் அடைத்தது செயலலிதா அரசு.
சாகுல் அமீது, நெடுமாறன் கூட்டத்திற்கு அரங்கு அமைத்துக் கொடுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக பொடாவில் போடப்பட்டார். அவரின் தொழில் நசிந்து, வணிகம் கெட்டு இலக்கக் கணக்கில் இழப்பு ஏற்பட்டு சிந்தி மங்கி இன்று இருப்பது வைகோவிற்கு மறந்து விட்டதா?
இவராவது பரவாயில்லை, சிறை விட்டு வந்ததும் எல்லா மேடைகளிலும் பேசிக் கொண்டு திரிகிறார். சாக்கடை அரசியலையும் இவரால் பண்ன முடிகிறது.
நெடுமாறனுக்கு சட்டம் இட்ட விலங்கு இன்னும் அறுபட வில்லை. அவர் வெளியே இருந்தாலும், அவரால் எந்த மேடையிலும் பேச முடியாது என்று வாய்ப்பூட்டு போட்டிருக்கிறது சட்டம்.
இன்றைக்கும் மேடைகளில் பேச முடியாமல் அல்லாடுகிறாரே பழ.நெடுமாறன் அவர் வைகோவின் கண்களில் படவில்லையா?
நாளை அவர்களோடு சேர்ந்து ஒரே மேடையில் நிற்க நிச்சயம் வெட்கப் படமாட்டார் வைகோ. ஆனால், பழ.நெடுமாறன் நிச்சயம் வெட்கப் படுவார்.
திமுகவில் இருந்து வெளியேற்றப் பட்டபோது சொல்லப் பட்ட காரணங்கள் எல்லோருக்கும் அய்யத்தைக் கொடுத்தது. ஆனால், இன்று திமுக எடுத்த நிலை சரிதான் - இப்படிப் பட்டவரை எப்படி சமாளித்திருக்க முடியும் என்ற எண்ணத்தையே எல்லாருக்கும் கொடுக்கிறது.
திமுக ஆட்சியில் இருந்த 89/90 ஆம் ஆண்டில், கள்ளத்தோனியில் ஈழத்திற்கு சென்று வந்தார் இந்தப் புரட்சிப் புயல். அப்போது அது சில அறிவாளிகளுக்குக் கூட புரட்சியாகத் தோன்றியது. அன்றும் கருணாநிதி இவரைக் காப்பாற்றிதான் விட்டார் என்று சொல்ல வேண்டும். இதே வேறொருவராக இருந்திருந்தால் சட்டம் என்பதன் முன் அவர் நிற்க வைக்கப் பட்டிருப்பார். இவரின் நடவடிக்கைகளைப் பார்ப்பவர்களுக்கு இப்பொழுது இவர் ஒரு தான்தோன்றித் தனமுள்ள ஆள் என்பதாகத் தோன்றும்.
2002/3/4 ல் பொடா என்ற கொடுஞ்சிறையில் காப்பாற்றி விட்டதும் திமுக. திமுகவின் முயற்சியில்லாமல் பொடா ஒன்றும் அசைந்திருக்காது இந்தியாவில்.
சரவலில் திமுகவால் பிழைப்பதும் பின்னர் திமுகவை காலை வாரி விடுவதும் இவரின் பழக்கம்.
சன் தொலைக்காட்சியில் இவரைக் காட்டாமல் புறக்கணிப்பு செய்தது எனக்குக் கூட ஞாயமாகப் படவில்லை. ஆனால், ஒரு வேளை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் அதனால் கிடைத்திருக்கக் கூடிய புகழையும் இன்று போயசு தோட்டத்திற்கு மேலும் ஒரு 5/6 இடத்திற்காக தாரை வார்த்திருப்பார். அந்த வகையில் சன் தொலைக்காட்சி செய்த தவறைக்கூட ஞாயப்படுத்தி, கருணாநிதியும் கருணாநிதியின் குடும்பத்தினரும் இவரின் துரோகக்குணங்களையும் சிறு மதிகளையும் நன்கே உணர்ந்திருக்கின்றனர் என்ற எண்ணத்தையல்லவாஎல்லோரிடமும் இன்று விதைத்திருக்கிறார்.
இவர் பக்கத்தில் என்ன ஞாயம் இருக்கிறது?
திமுக வெற்றி பெற்றால்,
1) இசுடாலின் முதல்வர் ஆகலாம் - அதை விடக் கூடாது என்ற எண்ணமா? செயலலிதா முதல்வராகலாம் ஆனால் கருணாநிதிக்குப் பின்னால் இசுடாலின் வரக்கூடாது என்ற எண்ணத்தில் என்ன ஞாயம் இருக்கிறது. இசுடாலின் மிகச்சிறந்த முதல்வர் தகுதி பெற்றவர் என்று சொல்லவில்லை. ஆனால், செயலலிதாவை விட எந்த வகையில் இசுடாலின் குறைந்து போகிறார் என்பதைத்தான் இந்தத் தமிழ்நாட்டில் புரிந்து கொள்ள இயலவில்லை.
2) தமிழ்நாட்டில் மூப்பனாரின் மகன் தலைவராகலாம், ப.சிதம்பரத்தின் மகன் தலைவராகலாம், இராமதாசின் மகன் தலைவராகலாம், இன்று முளைத்த விசயகாந்த்தின் குடும்பம் அரசியல் செய்யலாம், தேசிய அளவில் இந்திரா அம்மையாரின் குடும்பம் ஆளலாம், ஆந்திரத்தில் இராமாராவின் மருமான் அரசியல் செய்யலாம் - ஆனால் கருணாநிதியின் மகன் மட்டும் வருவதில் ஏன் அவ்வளவு காழ்ப்புணர்ச்சி?
3) திமுகவிடம் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கேட்ட கேட்கக் கூடிய சனநாயக முறையை இதே அதிமுகவுடன் இவர்களால் கேட்க முடிந்ததா? திருமாவளவனும், வைகோவும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கவேண்டியதுதானே?
4) போனதேர்தலில் அவர் ஒத்துக் கொண்ட இடம் 22. இப்போது அவருக்குக் கொடுக்கப் பட்ட இடமும் 22. இந்தத் தேர்தலில் கருணாநிதியோடு அரை டசன் கட்சிகள் இருக்கின்றன. எல்லோரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் திமுக மட்டும் தியாகம் செய்தால் போதுமா என்று திமுககாரர்கள் கேட்பதில் ஞாயம் இருக்கத்தானே செய்கிறது. கருணாநிதி என்றால் இளப்பம் - கூட்டணி ஆட்சி கேட்கலாம் - இல்லாவிடில் தமிழ் நாடு சீரழியும் செயல் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இதே செயலலிதாவுடன் கூட்டணி என்றால், பாமக, பேராயம், பொதுவுடமை, இசுலாமியர் கட்சி என்று எல்லாமே முதுகை வளைவதும் கொடுத்ததை வாங்கிக் கொண்டு போவதும்,
கருணாநிதியிடம் முறைப்பதும் தமிழகம் கண்டு வரும் வியப்புகள்தான்.
திமுகவுடன் 13 இடங்கள் குறைவாக வென்று விட்டால் இவரின் சாதனைகளில் என்ன குறைந்து விடப் போகிறது. குறைந்த பக்கம் சட்ட மன்ற நாகரிகமும், சனநாயகமும்,
பண்பாடும் கொஞ்சம் மேம்படவாவது செய்திருக்கும்.
அனைத்துக்கும் வேட்டு வைக்க கிளம்பி விட்டார் வைகோ. இது திமுகவிற்கு எதிராக இவர் எடுத்த விவேக அரசியல் அல்ல.
தமிழ்பால் அன்பு கொண்ட அனைவர்க்கு எதிராக அவர்களின் எண்ணத்திற்கு மாறாகக் களையாகப் பரவி விட அவர் எடுத்த முடிவு.
அதிமுகவிற்கே ஆதரவு என்று அறிவித்திருக்கும் சோ மற்றும் சோ வின் படையினர் இப்பொழுது வைகோ என்கிற இந்தப் புளித்துப் போன சூரப்புலியிடன் கூட்டணி வைத்திருக்கும் செயலலிதாவிற்கு எப்படி ஆதரவளிப்பார்கள் என்று பார்ப்பது மட்டுமே பலர் காணக்கூடிய நகைச்சுவை காட்சி.
மற்றபடி இவரின் செயலால் மீண்டும் தமிழர்க்கு தலைகுனிவு. இவர் ஒரு நற்றமிழன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை தமிழ்மன்றில் இழந்துவிட்டார் வைகோ.
எது எப்படியோ!
குறைந்தது வைகோ இனியாவது தமிழ், தமிழர் என்ற பம்மாத்து அரசியல் செய்யாமல் இருந்தால் குறைந்தது தமிழ் பால் நேர்மையான அக்கறை உள்ளவர்கள்
தங்களை செருப்பால் அடித்துக் கொள்ளாமல் இருப்பர்.
புயல் என்று பெருமிதப்பட்டோர்க்கெல்லாம், புயல் எப்பொழுதும் அழிவையே தரும் என்று நிறுவியிருக்கிறார் வைகோ.
அன்புடன்
நாக.இளங்கோவன்
nelan@rediffmail.com
04-march-06
நன்றி: பதிவுகள்.கொம்

.