03-07-2006, 09:06 PM
<b>மத்திய ஆளும் கூட்டணியில் வைகோ நீடிப்பார்: காங்கிரஸ் அறிவிப்பு </b>
புதுடெல்லி, மார்ச்.7-: மத்திய கூட்டணியில் வைகோ நீடிப்பார் என்று, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி அறிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., விலகி அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினாலும், மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிப்போம் என்று அறிவித்து இருந்தார்.
ஆனால், அதற்கு மாறாக, மத்திய கூட்டணியில் வைகோ நீடிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த பிரச்சினை பற்றி காங்கிரஸ் கட்சி தனது நிலையை தெளிவுபடுத்தி உள்ளது.
நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்கக்கூடாது என்பது தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த கருத்து. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கருத்து அல்ல என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வைகோ அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருப்பது, மத்திய கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறி இருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். வைகோ விவகாரத்தில் நாங்கள் மனதை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
கூட்டணி அரசில் எப்போதும் மாநில கூட்டணிக்கும், மத்திய கூட்டணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மாநில அளவில் ம.தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிப்பதில் தவறு இல்லை. ம.தி.மு.க. தொடர்ந்து மத்திய கூட்டணியில் நீடிக்கலாம். கடந்த கால ஆட்சியிலும் இதுபோன்ற நிலைமைகள் ஏற்பட்டு உள்ளன.
இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.
நன்றி:விகடன்