03-06-2006, 08:47 PM
மதன் கூறியது போன்று கவுன்சிலிங் அமைப்பது அருமையான கருத்து, இந்த கவுன்சிலிங் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், கேள்விப்படும் நிலையில்தான் எமது சமூகம் இருக்கிறது, இந்த நாடுகளில் இருக்கிறது இந்தநாட்டு மொழியினர்தான் அதில் இருக்கிறார்கள், அதனால் எமது மக்கள் அது பற்றி அறியவோ அல்லது அதன் உதவியை நாடவோ முன் வருவதில்லை. காரணம் அது பற்றிய சரியான அறிமுகமின்மை, மற்றது மிகமுக்கியவிடயம் பாசை, இது எமது மக்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை அதிலும், வீட்டு பெண்களுக்கு மிகபெரிய பிரச்சினை, நான் அனைவரையும் கூறவில்லை, பெரும்பாலும். தமிழ் ஆட்களை வைத்து இந்த கவுன்சிலிங்கை ஆரம்பிக்க வேண்டும், அத்தோடு அதுபற்றிய விளக்கங்கள் அனைத்து மக்களுக்கும் போய்சேருமாறு அறிவிக்கப்படவேண்டும். அதுபற்றிய ஒரு தலைப்பினை யாழ்களத்தில் திறந்து, முதற்கட்டமாக அதன் சாதக பாதகங்களை ஆராயவேண்டும், இதுவே இதுபற்றிய ஒரு அறிமுகத்தை எமது மக்களுக்கு வழங்கும், கணவன் சரி இல்லை என்பதற்காகவும், குடும்பத்தில் ஏற்படும் தீர்கக்கூடிய பிரச்சினைகளுக்காகவும், பெற்று வளர்த்த அந்த பச்சை பாலகர்களை பெற்ற தாயே கொல்வது என்பதும், அவை இறப்பதை தாய் பார்பதும், எவ்வளவு கொடுமையானது, பிள்ளைக்கு ஒருதலையிடி காச்சல் வந்தாலே கண்விழித்து இரவு பகலாக பார்க்கும் தாய், அவர்களை கொல்ல துணிபது, கொடுமையானது, தானும் இறந்துவிடுவேன் என்று கொலைசெய்தாலும், அந்த நிமிடங்கள் எவ்வளவு அந்த தாய்க்கு கொடுமையானது, அதுவும் பிள்ளைகள் இறந்து தாய் வாழ்வது என்பது, மீளமுடியாததுன்பம், தனித்து வாழ எம்மின பெண்களுக்கு தைரியம் கொடுக்கவேண்டும், கணவன்மாரை திருந்துங்கள் என்று சொண்ணாலும், அனைவரும் திருந்துவார்களா? இதுநடைமுறைக்கு சாத்தியமற்றது, இதுக்கு ஒரேவழி கவுன்சிலிங் அமைத்து, எம் இன பெண்களுக்கு தைரியம் கொடுப்பதுதான் சிறந்த வழி, எமது ஊரைபோன்று பொருளாதாரத்துக்கு, இந்தநாடுகளில் கவலைப்படவேண்டியதில்லை, மனதைரியமும், வழிகாட்டலுமே இது போண்ற கொடுமைகளை நிறுத்தமுடியும், இது இருபாலருக்கும் பொருந்தும் ஆயினும், பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
.
.
.

