Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய
#92
ஏன் மாறினேன்?வைகோ சொல்வது இது தான்!
மார்ச் 05இ 2006

சென்னை:

திமுகவும், சன் டிவியும் மதிமுகவினரை தொடர்ந்து புறக்கணித்தும், அவமானப்படுத்தியும் வந்ததால் வேறு வழியின்றிஇ சுயமரியாதையைக் காக்க விலகல் முடிவை எடுக்க வேண்டியதாயிற்று என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பின் செய்தியாளர்களிடம் அணி மாற்றம் குறித்து மிக விளக்கமாகவே பேசினார் வைகோ.

அதன் சுருக்கத்தை நேற்று தந்தோம். அந்தப் பேட்டியின் முழு விவரம்:

திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றிருந்தது. ஜனவரி 26ம் தேதி கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினேன். அவரோடு தேர்தல் குறித்தும்இ கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதில்,

மதிமுக 35 மாவட்டங்களில் கட்சி அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறது. 35 மாவட்டங்களிலும் எங்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று விரும்புகிறோம்.

மாவட்டத்தில் ஒரு இடமாவது போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறோம் என்றேன்.

அதற்கு கலைஞர் அமைதியாக இருந்தார். பின்னர் நான் தொடர்ந்தேன். இதில்இ 5 மாவட்டங்கள் மாநகர மாவட்டங்களாக இருக்கிறது இதைத் தவிர்த்துப் பார்த்தால் 30 மாவட்டங்களில் நாங்கள் போட்டியிட விரும்புகிறோம்.

கடந்த 2 ஆண்டுகளில் நடைபயணம்இ பாசறை நிகழ்ச்சிகள்இ ஆய்வு நிகழ்ச்சிகள் என கட்சி அடிமட்டத் தொண்டர்கள் வரை நான் சந்தித்திருக்கிறேன்.

மக்களிடத்தில் கட்சி நல்ல வரவேற்பைப் பெற்று வளர்ந்திருக்கிறது. மக்கள் இயக்கமாக வளர்ந்திருக்கிறோம். எனவே குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறேன் என்றேன். அதற்கும் அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.

சில நிமிடம் கழித்து, உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன். எனவே 25 இடங்கள மதிமுகவுக்கு ஒதுக்குங்கள் என்றேன்.

உடனேஇ கலைஞர், ஒன்று அல்லது இரண்டு இடங்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்றார். அதற்கு நான், 234 தொகுதிகளிலும் கடுமையாக உழைக்கப் போகிறது மதிமுக. வாக்கு வங்கியும் வளர்ந்திருக்கிறது. அந்த ஒன்றிரண்டு தொகுதிகளை ஏன் குறைக்கிறீர்கள்? 25 தொகுதிகளையும் கொடுத்து விடுங்கள் என்றேன்.

அவருடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் நான் வாதத்தை எடுத்து வைத்தேன். சரி அப்படியே செய்யலாம் என்றார் அவரும்.

இதனை நமக்குள் வைத்துக் கொண்டு தொகுதிப் பங்கீடெல்லாம் நடைபெறும்போது வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்றார். நானும் வெளிப்படுத்த மாட்டேன் என்றேன். இதுதான் அன்று நடந்தது.

நான் நிறைந்த நம்பிக்கையோடு, அந்த சந்திப்புக்குப் பிறகுஇ 25 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள் என்று இருந்தேன். அதன் பிறகு 8ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

பிப்ரவரி 14ம் தேதி டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடந்த ஐக்கிய ¬ற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றேன். எந்த ஒரு நெருடலையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் துளிக் கூட எனக்கு இல்லை.

இந்த சந்தர்ப்பத்தில் நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு ஆட்சேபகரமானவை என்ற விதத்தில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலைஞர் ஒரு கருத்தைக் கூறினார் கூட்டணியில் நீடிக்கிறோமாஇ இல்லையா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார்.

இந்தப் பின்னணியில்இ 8ம் தேதி கூட்டம்இ 14ம் தேதி டெல்லியில் கூட்டணியில் இருப்பதாக பேட்டி, 17ம் தேதி இரவு நன்றி தெரிவித்துக் கூட்டத்தில் பேசுகிறேன், 18ம் தேதி கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்று நாங்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று சொன்னால், நாங்கள் இந்த கூட்டணியில் இல்லை என்ற எண்ணத்தை கலைஞர்தான் ¬தன் முதலில் ஏற்படுத்தினார்.

பிறகு மீண்டும்இ நாஞ்சில் சம்பத் குறித்து ஆற்காடு வீராசாமி அறிக்கை வெளியிட்டார். அதில்இ எங்கள் அவைத் தலைவர் எல்.கணேசன்இ தமிழ்நாட்டின் மூன்றாவது சக்தி மதிமுகதான் என்று கூறியதை பற்றி, அவர் பயன்படுத்திய வார்த்தை ஆட்சேபகரமானது என்றும். சம்பத் பயன்படுத்திய வார்த்தை ஆட்சேபகரமானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மதிமு¬க நாடகமாடுகிறது, பேரம் பேசுகிறது என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த அறிக்கைக்கு நான் பதில் தருவதற்கு முன் கலைஞரிடம் பேசினேன். எங்கள் பேச்சாளர்கள் பேசியது தவறுதான்இ அதைக் கண்டித்தது சரிதான். அதற்கு நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம்.

நாஞ்சில் சம்பத்திடம் விளக்கம் கேட்கிறேன். கட்சியையும்இ என்னையும் காயப்படுத்தும் விதத்தில் வீராசாமியின் அறிக்கை இருக்கிறதே, எங்களை நேரடியாக தாக்குகிற விதத்தில் இருக்கிறதே, எங்களுடைய தோழர்கள் எல்லாம் மிகுந்த மன வேதனைப்படுகிறார்களே என்றபோது பதிலுக்கு நீங்கள் வேண்டுமானால் கடுமையாக விமர்சித்து அறிக்கை கொடுங்கள் என்றார் கலைஞர்.

அப்படி ஒரு அறிக்கை கொடுத்தால், கூட்டணியில் திமுகவை அது புண்படுத்தும் என்று எங்கள் நிலையை மட்டும் விளக்கி பதில் அறிக்கை கொடுத்தேன். பின்னர் 22ம் தேதி கலைஞரை சந்தித்துப் பேசினேன்.

25 தொகுதிகளை தருவதாக சொன்னீர்கள், ஆனால் நீங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில்இ ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை வைகோ கேட்டார்இ ஒன்றிரண்டு குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொன்னேன் என்று கூறியிருக்கிறீர்களே என்று நான் கேட்டதற்கு, நான் 25 தொகுதிகள் தருவதாக சொல்லவில்லையே என்றார்.

நீங்கள் சொன்னீர்கள் என்று கூறியதற்குஇ நீங்கள் தப்பாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றார். நீங்கள் ஒன்றிரண்டு குறைத்துக் கொள்வதாக கூறியதற்கு அது எப்படி முடியும், 25 இடங்கள் கொடுக்க வேண்டும் என்றேன்.

அது கஷ்டம் 20 இடங்கள் கொடுக்கிறோம் என்று சொன்னார்.

இந்தச் சூழ்நிலையில் 27ம் தேதி கலைஞரிடம் நான் எப்போது பார்க்க வரலாம் என்று கேட்டேன். நாளை சொல்கிறேன் என்று சொன்னார். இரவு ஆற்காடு வீராசாமி போன் செய்து, நாளை காலை உங்களை பார்க்க வீட்டுக்கு வருகிறேன் என்றார்.

25 சீட் கொடுக்கிறேன் என்று சொன்னார்கள் என்றேன். அதற்கு வாய்ப்பில்லை என்றார் வீராசாமி. 21 சீட் தருகிறோம் என்றார். தலைவர் சொன்னதை மாற்றினால் எப்படி என்றேன். கடைசியாகஇ 23 சீட் கொடுத்தால் ஒத்துக் கொள்வீர்களா என்று கேட்டார்.

அதற்கு நான் கஷ்டம் என்றேன். சொன்னபடி கொடுத்தால் வருகிறோம்இ எப்போது கூப்பிட்டாலும் கையெழுத்துப் போட வருகிறேன் என்றேன். சரி என்று போய் விட்டார்.

கலைஞர் அழைப்பார் என்று நினைத்து மதுரை செல்வதற்காக எடுத்து வைத்திருந்த விமான டிக்கெட்டை ரத்து செய்து விட்டு வீட்டிலேயே இருந்தேன்.

3ம் தேதி காலை 8 மணிக்கு கலைஞரிடம் போனில் பேசினேன். உங்களிடமிருந்து அழைப்பு வரும் என்று 28ம் தேதி மாலையிலிருந்து 1ம் தேதி மாலை வரை காத்திருந்தேன். அழைப்பே வரவில்லையே என்றேன்.

வேலையாக இருந்தேன்இ செக் அப்புக்குப் போயிருந்தேன் என்றார். சரி என்று, ஏன் அண்ணே, 25 தொகுதிகள் கொடுத்தால்தான் என்ன அண்ணே என்றேன் கெஞ்சும் குரலில்.

அதற்கு வாய்ப்பே இல்லை என்றார். ஒன்றிரண்டு குறைத்துக் கொடுத்தால் உங்களுக்கு நாங்கள் என்ன தொல்லை கொடுக்கப் போகிறோமாஇ அல்லது வேறு ஏதாவது பேரம் பேசப் போகிறோமாஇ நீங்களே கொடுங்கள் என்றேன். 22க்கு மேல் வாய்ப்பே இல்லை என்றார்.

அப்போதுஇ 25 சொல்லவில்லை என்று சொல்கிறீர்கள். உங்களுடைய வாதப்படி ஒன்றிரண்டு இடங்களை குறைத்துக் கொண்டு தருகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்களே? அதன்படி ஒன்றிரண்டு குறைத்துக் கொண்டு கொடுங்கள் என்றேன்.

ஒன்றுஇ இரண்டு, மூன்று இடங்களைக் குறைத்துக் கொண்டு என்று சொன்னேன் என்று மூன்று இடங்களைச் சொன்னார். மூன்று என்ற சொல்லையே பயன்படுத்தவே இல்லையே என்று கேட்டதற்குஇ ஒன்றையும், இரண்டையும் கூட்டினால் மூன்றுதானே என்று கேட்டார்.

சொற் சிலம்பத்துக்கு நான் தயாரில்லை என்றேன். இரண்டு தொகுதிகளைக் குறைத்துக் கொண்டு 23 ஆக கொடுங்கள் என்றேன். கெஞ்சி மன்றாடி நிற்கிறேன். யோசனை செய்தாவது கொடுங்கள் என்றேன். சரி யோசிக்கிறேன், மாநாடு முடியட்டும் என்றார்.

நான் மாநாட்டுக்குச் செல்வதற்காக பேச்செல்லாம் தயாரிக்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் பொதுக்குழு கூட்டம் முடிந்து பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கிறார் கலைஞர். 22 தொகுதிகளை ஏற்றுக் கொண்டால். மதிமுக கூட்டணியில் தொடரலாம் என்கிறார்.

பாமகஇ காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளெல்லாம் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளன. அவர்களுக்கெல்லாம் கேட்ட இடங்களைக் கொடுத்து விடவில்லை. எல்லாக் கட்சிகளும் அதிக இடங்களைக் கேட்கிறது.

எங்களுக்கு மட்டும் ஒரு எண்ணிக்கையைச் சொல்லி இதை ஏற்றுக் கொண்டால்தான் கூட்டணியில் தொடரலாம் என்று எங்களை வித்தியாசமாக நடத்துகிற விதம் எல்லோருக்கும் மனதில் ஒரு வருத்தம்.

2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, எந்தக் கட்சி அதிக இடங்கள் தருகிறதோ, அவர்களுடன்தான் கூட்டணி என்று பாமக போன்ற கட்சிகள் கூறின. அப்போது திமுக கோப்படவில்லையே. அவர்களை சமாதானம் செய்து, கேட்ட இடங்களைத் தானே கொடுத்தார்கள். அம்மாதிரி கருத்து ஏதாவது நான் சொல்லியிருக்கிறேனா?

இதுதவிர பொதுக்குழுவில் அவர்கள் வெளியே போகட்டும், இருக்கத் தேவையில்லை என்ற விதத்தில் விமர்சனங்கள் கடுமையாக எங்கள் மீது செய்யப்பட்டன. இந் நிலையில், நாங்கள் கேட்கிற தொகுதிகளைக் கொடுப்பார்கள் என்ற உத்தரவாதம் இல்லை, கொடுத்தாலும் வெற்றி பெறுகிற தொகுதிகள் கிடைக்குமா என்பதும் சந்தேகம்.

மனப்பூர்வமாக வேலை செய்யக் கூடிய மன நிலை அங்கே உருவாக்கப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

லட்சோப லட்சம் தொண்டர்களின் தியாகத்தால் உருவானது மதிமுக. 2 சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்தபோதும் இந்தக் கட்சியைப் பாதுகாத்திருக்கிறோம்.

2 ஆண்டு காலம் மதிமுகவினரை திமுகவினர் நடத்திய விதம் மனக்காயத்தை ஏற்படுத்தியிருந்தது. இதை திமுக தலைவரிடமே சொல்லியிருக்கிறேன்.

அவர்கள் சார்ந்த டிவியில் (சன்டிவி) 2 ஆண்டுகளாக எங்களை முழுமையாக இருட்டடிப்பு செய்தார்கள். இதுவும் எங்களை வேதனைப்படுத்தியது. இதுகுறித்தும் கலைஞரிடம் கூறியிருக்கிறேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த கூட்டணியில் இனிமேலும் நீடிப்பது சுயமரியாதைக்கு இழுக்கு என்ற நிலையில்தான் இப்படிப்பட்ட முடிவை நாங்கள் மேற்கொள்ள நேர்ந்தது.

நாங்கள் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. 2001ல் எப்படி நடத்தப்பட்டோமோ, அவமானப்படுத்தப்பட்டோமோ அதே நிலைதான் இப்போதும். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் 62 நாட்கள் நான் பிரசாரம் செய்திருந்தேன். திமுகவுக்கு ஆதரவான அந்த டிவி, ஒரு நாள் கூட என்னுடைய பிரசாரத்தை காட்டியதில்லை.

அருப்புக்கோட்டையில் கலைஞருடன் நான் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவரை மட்டும் காட்டினார்கள், என்னைக் காட்டவில்லை. இது தேர்தல் பிரசாரத்தில் நடந்தது.

எங்கள் நடைப்பயணத்தைக் காட்டிய ஒரே காரணத்திற்காக ராஜ் டிவி பெரும் பாதிப்புக்குள்ளானது.

மூன்று வேளையும் எங்களுடைய செய்தியைக் காட்டினார்கள் என்பதால் ராஜ் டிவியின் லைசன்ஸ் பறிபோனது. இதுவும் மிகுந்த காயத்தை ஏற்படுத்தியது.

அதேபோல, அவர்கள் சார்ந்த டிவியில், சின்னப் பாப்பா பெரிய பாப்பா என்று ஒரு நாடகம். அதில் ஒரு காட்சியில், ஒருவன் பாதயாத்திரை போகிறான். கருப்புத் துண்டு போட்டுக் கொண்டு ஒரு ஆள் போகிறான். கொஞ்ச தூரம் போனதும் நடக்க முடியாமல் படுத்து விடுகிறான்.

நோய்வாய்ப்பட்டு விழுந்து விட்டான் என்கிறார்கள். இனி இவன் நடக்கவே முடியாதுஇ இவன் எங்கேயும் போக மு¬டியாதுஇ இவன் போய்ச் சேர வேண்டியஇடம் வேறு என்று கூறி நான்கு பேர் பாடையில் தூக்கிச் செல்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் எங்கள் தொண்டர்கள் இதைப் பார்த்து விட்டு கடுமையான ஆத்திரத்துக்கு ஆளானார்கள்.

கட்சியின் தொண்டர்களின் உணர்வுகளை மதித்து திமுக கூட்டணியைவிட்டு வெளியேறிஇ அதிமு¬கவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்ற முடிவுக்கு ஒரு மனதாக வந்தோம். இதுதான் கூட்டணி அமைத்ததன் பின்னணி.

தனித்து நாங்கள் ஏன் போட்டியிட வேண்டும்? 2 முறை நாங்கள் தனித்துப் போட்டியிட்டிருக்கிறோம். கடைசி நேரத்தில் பிடறியில் அடித்துத் தள்ளியதால்தான் கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். இந்த முறை அந்த தவறைச் செய்ய விரும்பவில்லை.

தேர்தல்களில் கொள்கைக் கூட்டணி என்பதே கிடையாதுஇ எல்லாம் தேர்தல் கூட்டணிதான். 98இ 99 நாடாளுமன்றத் தேர்தலில் என்ன நடந்தது? ஓராண்டுக்குள் கிளைடாஸ்கோப் மாதிரி கூட்டணி மாறியிருக்கிறது.

98ல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்ததுஇ 99ல் அதிமுக வெளியேறிய பின்னர்இ அதுவரை பண்டாரம்இ பரதேசி கட்சி உள்ளே நுழைய விட மாட்டோம் என்று பாஜக பற்றிக் கூறிய திமுகஇ அமைச்சரவையில் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் கூட்டணி வைத்தது.

முரசொலி மாறன் உடல் நலம் இல்லாமல் இருந்தபோதுஇ இலாகா இல்லாத மந்திரியாக இருந்தார். அவர் மறைந்து இறுதிச் சடங்குகள் நடந்தபோதுஇ வாஜ்பாய் வந்தார். வாஜ்பாய் வருகிற வரை கூட்டணியில் இருந்த திமுகஇ அவர் டெல்லி பக்கம் போனவுடன்இ காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லையா?

பாஜகஇ கம்யூனிஸ்டுகள் ஆதரவுடன் விபிசிங் ஆட்சி அமைக்கவில்லையா?கூட்டணி என்பது தேர்தலை மையமாகக் கொண்டு அமைகின்றது. அவரவர் கொள்கையை யாரும் விட்டு விட முடியாது.

அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு இப்போது எந்தவித வெறுப்பும் இல்லை. கடந்த ஒரு ஆண்டு காலத்தில்இ இந்த அரசில் அதற்கு மு¬ன்பு எடுக்கப்பட்ட முடிவுகள் பல திரும்பப் பெறப்பட்டுள்ளது. மதமாற்றத் தடைச் சட்டம்இ ஆடுஇ கோழி பலி தடைச் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களிடம் பறிக்கப்பட்ட சலுகைகள் திரும்பத் தரப்பட்டுள்ளது.

மழைஇ வெள்ள நிவாரணப் பணிகள்இ சுனாமி நிவாரணப் பணிகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நாங்கள் தொடருகிறோம். எப்படிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தருகிறதோஇ அதேபோல நாங்களும் மத்திய அரசுக்கு ஆதரவு தருகிறோம்.

புதுச்சேரியிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக குழு ஒன்றை அமைக்கிறோம். நான் தேர்தலில் போட்டியிடுவேனா என்பது குறித்து வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது தெரிய வரும்.

கூட்டணி மாறுவது குறித்து எனது தாயார் என்னை நிர்ப்பந்திக்கவில்லை. எது சரி என்று தோன்றுகிறதோஇ அதை செய் என்று கூறி விடடார். அரசியலில் அவர் எப்போதும் தலையிட்டதில்லை. மக்கள் அபிப்பிராயம் மாறாக இருக்கிறது என்றால் அதன்படி செய் என்று கூறி விட்டார். மகனுக்கு மன வருத்தம் வரக் கூடாது என்பதுதான் அவரது எண்ணம் என்றார் வைகோ.

http://thatstamil.oneindia.in/news/2006/03...3/05/vaiko.html
kaRuppi
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 01-22-2006, 12:25 PM
[No subject] - by Mathuran - 01-22-2006, 12:52 PM
[No subject] - by Vasampu - 01-22-2006, 12:55 PM
[No subject] - by cannon - 01-22-2006, 01:30 PM
[No subject] - by kurukaalapoovan - 01-22-2006, 02:28 PM
[No subject] - by kuruvikal - 01-22-2006, 02:43 PM
[No subject] - by தூயவன் - 01-22-2006, 03:13 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-22-2006, 03:25 PM
[No subject] - by nirmalan - 01-22-2006, 03:25 PM
[No subject] - by cannon - 01-22-2006, 03:26 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-22-2006, 03:31 PM
[No subject] - by தூயவன் - 01-22-2006, 03:37 PM
[No subject] - by Mathuran - 01-22-2006, 05:02 PM
[No subject] - by Mathan - 01-23-2006, 06:51 AM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 07:39 AM
[No subject] - by Mathan - 01-23-2006, 07:42 AM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 08:04 AM
[No subject] - by வர்ணன் - 01-23-2006, 08:06 AM
[No subject] - by MEERA - 01-23-2006, 08:49 PM
[No subject] - by தூயவன் - 01-24-2006, 05:40 AM
[No subject] - by தூயவன் - 01-24-2006, 05:41 AM
[No subject] - by வர்ணன் - 01-24-2006, 06:15 AM
[No subject] - by தூயவன் - 01-24-2006, 06:19 AM
[No subject] - by கந்தப்பு - 01-24-2006, 07:05 AM
[No subject] - by வர்ணன் - 01-24-2006, 07:08 AM
[No subject] - by Luckyluke - 01-24-2006, 08:16 AM
[No subject] - by வர்ணன் - 01-24-2006, 08:25 AM
[No subject] - by Luckyluke - 01-24-2006, 10:36 AM
[No subject] - by Vasampu - 01-24-2006, 01:59 PM
[No subject] - by Luckyluke - 01-24-2006, 03:08 PM
[No subject] - by Danklas - 01-24-2006, 03:24 PM
[No subject] - by MEERA - 01-24-2006, 08:38 PM
[No subject] - by kurukaalapoovan - 01-24-2006, 10:26 PM
[No subject] - by அகிலன் - 01-25-2006, 01:03 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 04:35 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 04:42 AM
[No subject] - by வர்ணன் - 01-25-2006, 04:56 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 04:58 AM
[No subject] - by வர்ணன் - 01-25-2006, 05:12 AM
[No subject] - by Luckyluke - 01-25-2006, 08:46 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 01:57 PM
[No subject] - by வினித் - 01-25-2006, 03:33 PM
[No subject] - by Thala - 01-28-2006, 12:51 AM
[No subject] - by அருவி - 01-28-2006, 02:41 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-01-2006, 01:19 PM
[No subject] - by sinnappu - 02-01-2006, 11:59 PM
[No subject] - by அகிலன் - 02-02-2006, 12:43 AM
[No subject] - by தூயவன் - 02-02-2006, 04:49 AM
[No subject] - by Birundan - 02-06-2006, 12:18 PM
[No subject] - by Nellaiyan - 02-09-2006, 03:07 PM
[No subject] - by Mathan - 02-09-2006, 07:38 PM
[No subject] - by Mathan - 02-13-2006, 08:40 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-18-2006, 08:45 PM
[No subject] - by Thala - 02-18-2006, 09:03 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-18-2006, 09:23 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:34 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:35 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:37 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:41 PM
[No subject] - by கறுப்பன் - 02-20-2006, 06:08 PM
[No subject] - by வடிவேலு - 02-20-2006, 06:44 PM
[No subject] - by Mathan - 02-20-2006, 07:12 PM
[No subject] - by AJeevan - 02-20-2006, 11:04 PM
[No subject] - by Luckyluke - 02-21-2006, 01:13 PM
[No subject] - by அகிலன் - 02-21-2006, 03:53 PM
[No subject] - by Mathan - 02-21-2006, 05:16 PM
[No subject] - by Mathan - 02-21-2006, 05:25 PM
[No subject] - by Mathuran - 03-04-2006, 08:21 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-04-2006, 10:13 AM
[No subject] - by வினித் - 03-04-2006, 10:18 AM
[No subject] - by Thala - 03-04-2006, 01:27 PM
[No subject] - by sinnakuddy - 03-04-2006, 06:47 PM
[No subject] - by AJeevan - 03-04-2006, 09:40 PM
[No subject] - by விது - 03-04-2006, 10:12 PM
[No subject] - by AJeevan - 03-04-2006, 10:40 PM
[No subject] - by eelapirean - 03-05-2006, 12:18 AM
[No subject] - by adithadi - 03-05-2006, 02:56 AM
[No subject] - by AJeevan - 03-05-2006, 04:21 PM
[No subject] - by tamilini - 03-05-2006, 06:41 PM
[No subject] - by மின்னல் - 03-05-2006, 08:18 PM
[No subject] - by AJeevan - 03-05-2006, 10:30 PM
[No subject] - by கறுப்பி - 03-06-2006, 07:45 AM
[No subject] - by AJeevan - 03-07-2006, 09:06 PM
[No subject] - by sinnakuddy - 03-07-2006, 10:19 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-07-2006, 11:39 PM
[No subject] - by மின்னல் - 03-08-2006, 06:35 AM
[No subject] - by கறுப்பி - 03-10-2006, 04:05 PM
[No subject] - by விது - 03-10-2006, 08:51 PM
[No subject] - by putthan - 03-11-2006, 02:47 PM
[No subject] - by Aravinthan - 03-15-2006, 03:17 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)