Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை தமிழர் ஒருவரின் உடல் உரிமைகோரப்படாமல் உள்ளது
#4
கட்டாரில் நடந்தது என்ன?

நாடு திரும்பும் கருணா ஆதரவாளர்கள் புலிகளுடன் மீண்டும் இணைவு!

"கருணா குழு உறுப்பினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல், கட்டாரில் சம்பவம்" என்ற தலைப்புடன் அண்மையில் வெளிவந்த சில சிங்களப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன. கருணா குழுவைச் சேர்ந்தவரான `குருவி' எனப்படுபவர் கட்டாரில் வைத்துக் குத்திக் கொல்லப்பட்டது தொடர்பாகவே சிங்கள ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டன. கருணா குழு தொடர்பான மோதல்கள் கடல் கடந்து கட்டார் வரையில் சென்றுவிட்டது. வேலை தேடி வெளிநாடு செல்பவர்கள் மத்தியிலும் மோதல்கள் உருவாகிவிட்டன என்ற ஒரு பீதியை ஏற்படுத்துவதாகவும், இந்தச் செய்திகள் அமைந்திருந்தன. இத்தாக்குதல் தொடர்பாக கட்டாரில் தொழில்புரியும் தமிழ் இளைஞர்கள் சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். தமது பிள்ளைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் கட்டாருக்கு அனுப்பி வைத்த பெற்றோர் மீண்டும் பீதியுடன் வாழும் நிலையை இந்தச் செய்திகள் உருவாகிவிட்டன.

கட்டாரில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்ற போதிலும் சிங்களப் பத்திரிகைகள் வழமைபோல செய்திகளைத் திரிபுபடுத்தி, தமது தேவைக்கேற்றவகையில் வெளியிட்டிருக்கின்றன என்பதை இது தொடர்பாக எமக்குக் கிடைத்துள்ள செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. திட்டமிட்ட முறையில் புனையப்பட்ட செய்திகளாகவே இவை உள்ளன. இந்த நிலையில், கட்டாரில் என்ன நடந்தது? அதன் பின்னணி என்ன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

மட்டக்களப்பில் கருணா பிரச்சினை உருவாகிய பின்னர் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து பெருந்தொகையான இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடி கட்டாருக்குச் சென்றார்கள் என்பது உண்மை. கருணாவுடன் இணைந்து செயற்பட்டுவந்த பலர் தமது எதிர்காலம் தொடர்பான அச்சத்துடன் கட்டாருக்குச் சென்றுள்ளார்கள். இவர்களது பெற்றோர் மட்டுநகரிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம் ஒன்றுக்கு சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா வரையில் செலுத்தி தமது பிள்ளைகளை பாதுகாப்பாக கட்டாருக்கு அனுப்பி வைத்தார்கள். இந்தக் காலகட்டத்தில் மட்டக்களப்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று அவசரமாக கட்டாரில் வேலைக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டிருந்தமை இவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது. நல்ல வேலை, நல்ல சம்பளம் என்ற எதிர்பார்ப்புடன் அவசரமாக இவர்கள் கட்டார் புறப்பட்ட போதிலும், அங்கு அவர்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது.

கட்டார் சென்ற இளைஞர்களுக்கு சுத்திகரிப்பு வேலைகளே காத்திருந்தன. விமான நிலையம், வைத்தியசாலைகள், தொழிற்சாலைகள் என்பவற்றில் மிகவும் கடினமான சுத்திகரிப்பு வேலைகளைச் செய்த இவர்களுக்கு ஊதியமும் ஒழுங்கான முறையில் வழங்கப்படவில்லை. வழங்கப்படும் ஊதியமும் மிகவும் குறைவானதாகவே இருந்தது. பல இளைஞர்களுக்கு மாதக் கணக்கில் வேதனம் வழங்கப்படவில்லை என்பதையும் அறிய முடிகின்றது. கடுமையான வேலை, குறைந்தளவு ஊதியம் என்பவற்றுடன் கடின வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து கொண்டிருந்த இவர்களுக்கு இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவும் முடியாத நிலையே காணப்பட்டது. அதேவேளையில், இவர்களில் பெரும்பாலானவர்கள் கருணாவுடன் இணைந்து இயங்கியவர்கள் என்ற முறையில், மீண்டும் மட்டக்களப்பு திரும்புவதற்கும் அஞ்சினார்கள்.

இது தொடர்பான தகவல்கள் விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த போது, கட்டாரில் பொறுப்பாளராகச் செயற்பட்ட மதனுக்கு முக்கிய வேலை ஒன்று ஒப்படைக்கப்பட்டது. கருணாவுடனிருந்த போராளிகளுக்கு நிலைமைகளை தெளிவுபடுத்திய மதன், அவர்களை மீண்டும் மட்டக்களப்புக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது முயற்சி பெருமளவுக்குப் பலனளித்தமையால், கருணாவுடன் செயற்பட்ட பலர் கட்டாரிலிருந்து நாடு திரும்பி விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட தொடங்கியுள்ளனர். பல நூற்றுக்கணக்கானவர்கள் இவ்வாறு திரும்பியுள்ளதாக மட்டக்களப்புச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

கருணாவின் காலத்தில் அம்பாறை மாவட்டத் தளபதியாகவிருந்த ஸ்ரான்லி மற்றும் கருணாவின் விசேட பாதுகாப்புப் படைக்குப் பொறுப்பாக இருந்த மணிவண்ணன் ஆகியோர் மதனைத் தொடர்ந்து கட்டாரில் இந்தப் பொறுப்பை முன்னெடுத்துள்ளார்கள். ஸ்ரான்லியின் தலைமையில் கடந்த நவம்பர் மாதம் கட்டாரில் மாவீரர் தினக் கொண்டாட்டங்களும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் விழாவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. இதன் மூலம் கருணாவுடன் செயற்பட்டு வந்த பல இளைஞர்கள் மீண்டும் தாயகம் திரும்பி புலிகளுடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்திருக்கின்றார்கள். இப்போது ஸ்ரான்லி மற்றும் மணிவண்ணன் ஆகியோரும் மட்டக்களப்பு திரும்பி விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படத் தொடங்கியிருக்கின்றார்கள்.

இருந்த போதிலும், குருவி எனப்படுபவர் மட்டும் நாடு திரும்பவோ, புலிகளுடன் மீண்டும் இணைந்து செயற்படவோ விருப்பம் தெரிவிக்கவில்லை. ஆனால், இவரது கொலையில் விடுதலைப் புலிகள் எவ்வகையிலும் சம்பந்தப்படவில்லை என கட்டாரிலிருந்து திரும்பிய இளைஞர் ஒருவர் தெரிவிக்கின்றார். இவரது கொலை மர்மமாகவே இடம்பெற்றது. இது எவ்வாறு நடைபெற்றது என்றோ இதற்கு யார் பொறுப்பு என்றோ திட்டவட்டமாகத் தெரியவில்லை. இந்த நிலையில் புலிகள் தான் இதனைச் செய்திருக்கலாம் என சிங்கள ஊடகங்கள் வழமைபோல் கதைகளைப் பரப்பத் தொடங்கியிருக்கின்றன. இந்தக் கொலைக்கு யார் பொறுப்பு என்பதை அறிவதற்காக கட்டார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். அந்த நிலையில் இது தொடர்பாக கருத்துகளை வெளிப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது!

http://www.thinakural.com/New%20web%20site.../Article-15.htm
<b> . .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by ஊமை - 02-26-2006, 03:07 PM
[No subject] - by வினித் - 02-26-2006, 05:06 PM
[No subject] - by kirubans - 03-05-2006, 02:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)