02-05-2004, 03:22 PM
mohamed Wrote:சில விடயங்களை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்த்தால் அது மிகவும் அபத்தமானதாகவே இருக்கும்.
தேசம் பத்திரிகை தந்த அந்தப்படங்கள் இரண்டும் ஒரு பயிற்சிப்பட்டறை படங்கள் என்ற அறிவித்தே போடப்பட்டன. இவை திரையிடப் போவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டும் இருந்தது. கடைசி நேரத்தில் போட வேண்டாம் என்று நீங்கள் வாசுவுக்கு அனுப்பிய மடலை அவர் மன்றத்திற்கு உடனடியாக அனுப்பி வைத்த போதும் தேசம் சஞ்சிகையின் உறுதிமொழியை அடுத்தே இவை திரையிடப்பட்டன. நமது பிரச்சனைகளை நாம் திPர்த்துக் கொள்ளுவேம் என்ற உறுதி மொழியுடன் அவர் தான் அனுசரணை வழங்கியதுடன் அந்த பட்டறைக்கு காரணமாக இருந்தவன் என்று வாதிட்ட பின்னரே ஈழம் நண்பர்கள் அதை போட்டனர். இறுதி நேர மாற்றம் நிச்சயம் நிகழ்ச்சியை குழப்பும். அத்துடன் விளம்பரம் செய்த படங்களை போடாது மக்களை ஏமாற்றவும் முடியாது. திரையிடப்பட்ட குறும் திரைப்படத்தில் யாரும் மாற்றம் செய்ய வில்லை. ஆனால் தான் பணம் செலவு செய்து லண்டனில் நடத்திய அந்த அந்த பயிற்சிப் பட்டறை படங்கள் மற்றவர்களுக்கும் ஒரு பயிற்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தது சில வேளை தேசம் சஞ்சிகையின் முட்டாளதானமான முடிவாக இருக்கலாம். ஆனால் பல இளைஞர்களின் கடும் உழைப்பில் ஒழங்கு செய்த அந்த நிகழ்வு குழும்புவதை தேசம் விரும்பவி;லலை. என்ன பிரச்சனை வந்தாலும் தான் பொறப்பேற்பதாக அவர் உறுதி செய்தததை அடுத்தே அவை திரையிடப்பட்டன.
மட்டை, எதிர் பார்ப்பு ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்பட்ட போது அது தேசத்தின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டது என்றே அங்கு அறிவிக்கப்பட்டது அவர்கள் தயாரித்ததாகவோ அல்லது அவர்கள் அயக்கியதாகவே அறிவிக்கப்படவில்லை. இந்த படங்கள் போடப்பட்ட பின் அதில் பங்கு பற்றிய அனைவரையும் மக்கள் அடையாளம் கண்டு கொண்டதுடன் அவர்கள் அனைவரும் நன்றி கூறப்பட்டார்கள். மாறாக இலை மறை காயாக இருந்த பல கலைஞர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தியது. <span style='color:red'>தேசம் சஞ்சிகை அங்கே இந்த படங்களுக்காக கௌரவிக்கப்படவில்லை. மாறாக இந்த படைப்புகளை ஊக்குவிக்க அவர் செய்யும் சேவைக்காகவே கௌரவிக்கப்பட்டார்.
மட்டை மற்றும் எதிர்பார்ப்புகள்
கலைஞர்கள்
சிலோன் சத்யராஜ் ( சாஜகான்)
மூ.நித்தியானந்தன்
மீனா நித்தியானந்தன்
கே.சுதாகர்
கிருஸ்ணராஜ்
எஸ்.கே.மைக்கேல்
அகில்
எஸ்.வீ.ஜெயராஜ்
[size=18]இக் குறும்படங்களின் உரிமையாளர்களாக கருதப்படும் அனைவரும்
லண்டனைச் (London) சேர்ந்தவர்கள்.(இருவரைத் தவிர)
இவர்கள் யாரையும் அழைத்து கௌரவிக்காமல் ஆதரவு தந்தவரை கௌரவித்தது ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்?</span>
[size=15]இப் பயிற்சிப் பட்டறைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் (ஒளிப்பதிவு கருவி முதல் தொகுப்புக்கான கணணி வரை சுவிசிலிருந்து எனது பணத்தில் கொண்டு வந்து ஒரு சதமேனும் வாங்காமல் 3-4 மாத காலமாக பயிற்சி பட்டறைக்கான பாடத் திட்டத்தை தயாரித்து செய்த நானே அப் படங்ளுக்கான உரிமை கொண்டாட முடியாது. காரணம் அதை உருவாக்கிய கலைஞர்களது வியர்வை அங்கே சிந்தியிருக்கிறது. அவர்கள் அனைவரும் (என்னையும் கே.செந்தில்குமரனையும் தவிர அனைவரும் லண்டனில் வாழ்பவர்கள்............
[size=24]அவர்களுக்கு கொடுக்காத கௌரவத்தை மரியாதையை ஆதரவளித்தவர் வாங்கியதும் தவறு, அவருக்கு கொடுத்ததும் தவறு..........
அத்தனை கலைஞகளும் நான்தான் அப் படங்களைக் கொடுத்ததாக எண்ணியிருக்கிறார்கள். இப்படியான மூன்றாம் தர வேலைகள் செய்து எனக்கு பழக்கமில்லை.
[size=24]புத்தகம் எழுதியவனை விட்டு விட்டு பத்தகம் வெளியிட்டவனுக்கு பரிசு கொடுத்தது போன்ற செயலே நீங்கள் செய்தது.
தவிரவும் நீங்கள் முன் வைக்கும் வினா சிறு பிள்ளைத் தனமானது.
[quote=mohamed] ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு பண்ணியவர்கள் கடைசி நேரத்தில் அதை போட வேண்டாம் தடுத்தால் நிகழ்சியை ஒழுங்கு பண்ணியவர்களின் நிலைமையை யாராவது சிந்தித்தார்களா? பல மாதகாலமாக தயார்பண்ணிய நிகழ்ச்சியை இறுதி நேர்தில் மாற்றம் செய்ய முடியுமா?
நல்லாயிருக்கு கதை. நீங்கள் விம்பரம் செய்யுமுன் யாருடைய படம் என்று தெரிந்து இருக்க வேண்டும். ஆகக் குறைந்தது படத்தை வாங்கு முன் அதன் விபரங்களை கேட்டு வாங்கியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு நல்ல நீதி, மனுநீதிச் சோழன் கதை வேற,
ஒருவன் குற்றவாளியாக கருதப்பட்டு தூக்கு மரத்தில் தூக்கும் இறுதி நொடியில் அவன் நிரபராதி என்று தெரிந்தாலும் தண்டனையை நிறுத்துவதே நீதி.
உங்கள் நீதியோ அவன் நிரபராதியாக இருந்தாலும் தூக்கு என்பதாக இருக்கிறது. சுப்பர்????????????????
AJeevan

