03-04-2006, 11:57 PM
Selvamuthu Wrote:ரமா
களத்திலே உங்கள் கதைக்குக் கருத்தெழுதுபவர்களில் பலர் இன்னமும் திருமணமாகாதவர்கள் என்றுதான் நினைக்கிறேன்.
அண்ணன் அடித்துவிட்டான், அண்ணி அதட்டுகிறாள் என்பதற்காக அத்தனை நெருங்கிய உறவுகளையும் து}க்கியெறிந்துவிட்டு காதலனோடு வீட்டைவிட்டு ஓடிப்போவது புத்திசாலித்தனமல்ல. திருமணம் முடிந்து குடும்பம், பிள்ளைகள் என்று வரும்போது நிச்சயம் நெருங்கிய உறவுகளின் அன்பும், அரவணைப்பும் அவசியம். உங்களுக்காக இல்லாவிட்டலும் உங்களின் வருங்காலச் சந்ததியினருக்கு இவை அவசியம். இதனை யாரும் அனுபவித்துத்தான் அறிந்துகொள்ளவேண்டும் என்பதல்ல. அடுத்தவர்களைப் பார்த்தும் தெரிந்துகொள்ளலாம்.
இது கற்பனைக்கதையாக இருந்தாலென்ன, நாளாந்தம் நடக்கும் கதையாக இருந்தாலென்ன எதனையும் ஆலோசித்து முடிவெடுப்பதுதான் நல்லது.
வித்தியா கூறியதுபோல் இன்னும் 3 வருடங்களுக்குள் அவளின் வாழ்வில் ஒரு திருப்பம் வரத்தான் போகிறது. [b]அவள் வசிப்பது தாயகம் என்றால் நிலமை வேறாக இருக்கலாம். ஆனால் அவள் புலம்பெயர்ந்த நாட்டில் வசிப்பதால்.
"அன்பால் எவரையும் வெல்லலாம்" இதுவே எனது கருத்து.
நன்றி
இன்னும் அண்ணா அண்ணி என்று வாழப்போவது ஒரு சிறிய காலம். அதற்குள் தன் வாழ்நாளை சிறைப்படுத்தி பல சந்தர்ப்பங்களை இழக்கவேண்டி ஏற்படலாம். அவை அவர்கள் திருந்தியோ அல்லது மனம்மாறியோ வரும் போது காலம் கடந்திருக்கும். அதன் பின் அவள் வாழ்வு சீரழியும்போது இவர்கள் வந்து நிற்பார்களா அல்லது தமது குழந்தை அவர்களின் வாழ்க்கை என்று இவளை ஒதுக்குவார்களா? இவள் அவர்களிற்கு ஒரு பாரம் என்றே தள்ளிவைப்பார்கள். அதன் பின் படும் வேதனைகள்??????
தாயகத்திலோ புலம்பெயர்ந்து வாழ்ந்தாலோ தன் வாழ்வு பற்றி தீர்மானிக்க வேண்டிய நியாயமான உரிமை அது ஆணோ பெண்ணோ அனைவருக்கும் இருக்க வேண்டும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

