02-05-2004, 02:01 PM
Karavai Paranee Wrote:நான் கருணாநிதியின் பல மேடைப்பேச்சுக்களை செவியுற்றிருக்கின்றேன். பல செவ்விகளை வாசிததிருக்கின்றேன். அனாவசியமான முறையில் அவர் எங்குமே எப்போதும் ஆங்கில வார்த்தைகள் பாவித்ததில்லை. அப்படி பாவிப்பாரானால் அதற்கான தமிழ் விளக்கத்தை கட்டாயம் சொல்லிக்கொள்வார். அதுதான் தாய்மொழிமீது உள்ள பற்று
[b]உலகறிந்த ஒரு தமிழ்பற்றாளர் ஒரு தமிழ் இலக்கியவாதியை பார்த்து அவன் என்ற உங்கள் ஒருமை சற்று வேதனைக்குரியது. நீங்கள் தமிழிற்கு மதிப்பு அளிக்காவிட்டாலும் அவர் வயதிற்கு மதிப்பளியுங்கள்.
BBC Wrote:Karavai Paranee Wrote:உதாரணத்திற்கு ஒரு விடயத்திற்கு வருவோம்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆங்கிலப்புலமை உடையவர் அவர் எத்தகைய பேட்டிகளாகட்டும் கூட்டங்களாகட்டும் ஆங்கிலத்தில் பேசியது இல்லை என சொல்லலாம்.
இது உண்மை இல்ல பொஸ். கருணாநிதி தமிழ் பத்திரிகைக்கு பேட்டி குடுக்கும் போது கூட ரொம்ப இங்கிலிஸ் வார்த்தைய யூஸ் பண்ணுவான். அதுக்கு ஆதாரமா அவரோட பத்திரிகை பேட்டிகளை காட்டமுடியும். ஏன்னா அது அவரோட தமிழ் அவர அறியாம ஆங்கிலம் பேச்சு நடையில கலந்திட்டுது. கொழும்பு தமிழும் அப்பிடி தான். ஆனா அது நல்ல தமிழ்ன்னு நா சொல்லல
Karavai Paranee Wrote:சிங்களவன் ஒரு தேசத்திற்கு போனால் அந்த நாட்டில் உள்ள சிஙகளவனுடன் கதைக்கும்போது தன் தாய்மொழியில்தான் கதைப்பான். என்ன படித்திருந்தாலும் அவன் தன்தாய்மொழியைவிட வேறு மொழி பாவிக்க மாட்டான். அதே இடத்தில் ஒரு தமிழன் இருப்பானானல் அவன் அங்கு தான் இருக்கும் நாட்டின் மொழியை பாவிக்க முயலுவான். இதை யாராலும் மறுக்கமுடியாது.
உண்மை. தமிழ்ங்க தாய் மொழி தெரிஞ்சிருந்தாலும் அதுல இன்னொரு தமிழன் கிட்ட பேசுறது கிடையாது. அது தப்பு தான். நானா இருந்தாலும் சரி தப்பு தான் பொஸ்
நா வேணுமின்னு அப்பிடி சொல்லல. என் தமிழ் அப்பிடி. அது தப்புதான் மன்னிச்சுக்குங்க

