03-04-2006, 09:03 PM
காட்சி அறிமுகம்
<b>மன்னர் ஆழ்ந்த சிந்தனையில் (குறட்டை விட்டு தூக்கத்தில்) இருக்கிறார். ஆராய்ச்சி மணி அலறுகிறது.. திடுக்கிட்டு எழுகிறார்.
சேவகன் ஓடிவருகிறார், தகவல் கொடுக்கிறார். நீதித்துறை சார்ந்த அனைவரும் நீதி மன்றில் ஆஜராகிறார். இன்று வழக்கோடு வந்தவர் சின்னப்பு ஒரு பெரிய பொட்டலத்தை இருவரின் துணையுடன் காவிக்கொண்டு வந்து கஸ்டப்பட்டு இறக்குகிறார்கள்.</b>
சின்னப்பு : மன்னா எனக்கு நீதி வேண்டும்.. எனக்கு நீதி வேண்டும்...
மன்னர் : மந்திரி இவருக்கு என்ன நடந்தது.. குடிமகனாய் வந்திருக்கிறாரா இல்லை..
மந்திரி : ஏன் மன்னா அப்படிக்கேட்கிறீர்கள்?
மன்னர் : யோவ் மந்திரி அந்தாள் நி்க்கிற நிலையைப் பொறுத்துத்தானே வழக்கை விசாரிக்கலாம்.
மந்திரி : என்ன நினைச்சீங்க சின்னப்புவைப்பற்றி.. அவர் எப்பவும் குடிச்சமகன் தான்.. நீங்க நினைச்சபடி விசாரிச்சு தீர்ப்பை கூறலாம்.
மன்னர் : சின்னப்பு என்ன அது பொட்டலம் என்ன நடந்தது விவரமாய் கூறுங்கள்.
சின்னப்பு : மன்னா என்னை கொல்ல இந்த நாட்டில் யாரோ சதிபண்ணுகிறார்கள். அதுவும் என் மனைவி சின்னாச்சி இல்லாத நேரம் இந்த மரத்தை விழுத்தப்பார்க்கிறார்கள். சின்னாச்சி நின்றால் ஒரு தம்பி நெருங்க முடியுமா..?? அதை நான் அறிந்து விட்டேன் உங்கள் நாட்டு புலநாய்கள் இன்னும் அறியவில்லை.. அதனால் தான் இங்கு வந்தேன்.
மன்னர் : என்ன கொலைத்திட்டமா? சூத்திரதாரி யார் என்று கூறுங்கள் உடனே கைது செய்கிறேன்.
நித்திலா : மன்னா இதை ஏற்க முடியாது மப்பு அப்பு மப்பில என்னவோ உளறுறார் நீங்கள் கைது என்கிறீர்கள்.. சின்னப்பு நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாராம் வைத்திருக்கிறீர்கள். ?
சின்னப்பு: ஓய் லோயரம்மா.. சின்னாச்சிட புருசனை கொல்லப்பாக்கிறாங்கள் என்றன் ஆதாரம் கேக்கிறீர். இரண்டு நாட்கள் முன்னர் என் வீட்டிற்கு தபாலில் வந்த ஆந்ராக்ஸ் பவுடர். இது பின்லாடனின் சதி என்று சந்தேகிக்கிறேன்.
நித்திலா : ஏன் பின்லாடனை இதுக்கை இழுக்கிறியள்.
மன்னர் : ஓய் மந்திரி என்ன கம்முண்ணு இருக்கிறீர்.. நம்ம நாடு அமெரிக்கா மாதிரியும் இவர் யோர்ஜ் புஸ் மாதிரியும் இவருக்கு பின்லாடன் ஆந்திராக்ஸ் அனுப்பின மாதிரியும் கதைக்குது இந்தாள் நீர் என்ன குறட்டையே விடுறீர்.
மந்திரி : இல்லை மன்னா சிந்திக்கிறேன்.. யார் இதை செய்திருப்பார்கள் ( நான் அலட்ட இவை பொட்டலத்தை திறக்க சொல்வினம் திறந்து நான் மேல போகவே.. என் கவிதாவிற்கு யார் பதில் சொல்றது. மனசுக்குள்).
நித்திலா : ஏன் சின்னப்பு இந்தப்பெரிய பொட்டலத்திற்க முழுதும் ஆந்திராக்ஸ் பவுடரா இருக்கிறது??
சின்னப்பு: (தொடங்கீட்டாய்யா வக்கீல் குணத்தைக்காட்ட).. இல்லை லாயரம்மா.. அந்தப்பவுடர் இங்கே இருக்கிறது.. என்வலப்புடன் (ஒரு சரையை தூக்கி நீட்டுகிறார்.)
நித்திலா : அப்படியே வைச்சிருங்கள்.. மந்திரி அதை வாங்கி பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(சத்தம் போடாமல் நிக்கிறன்ல அப்புறம் என்ன.. மாட்டி விடிறா.. தனக்குள் புறுபுறுத்தபடி வாங்கிப்பார்க்கிறார்.. பார்த்து விட்டு சிரிக்கிறார்.)
சின்னப்பு : ஓய் கவிதன் என்ன மேன் சிரிப்பு..??
மந்திரி சின்னப்பு.. இந்த கடிதம் சின்னாச்சியிடம் இருந்து அல்லவா வந்திருக்கிறது.. நீர் பின்லாடன் அனுப்பியதாய் சொன்னீர்.
சின்னப்பு: சின்னாச்சியின் பெயரில் வேறை யாரோ அனுப்பியிருக்கிறார்கள்.
மன்னர் : கொஞ்சம் பொறுங்கள்.. இந்த பெரிய பொட்டலத்தில் என்ன இருக்கிறது.. இதை ஏன் கொண்டு வந்தீர்..??
சின்னப்பு: இது என் கணணி.. இதனூடாக வைரஸ் பரவச்செய்கிறார்கள்..
மந்திரி யாருக்கு??
சின்னப்பு: என்ன கேள்வி உரிமையாளர் எனக்குத்தான்
மன்னர் : கிளிஞ்சுது போ.. பிறகு
சின்னப்பு: ஆம் மன்னா.. என் கணணியை வைரஸ் தாக்கியுள்ளது இயக்க முடியவில்லை.. கிளவுஸ் போட்டுக்கொண்டு தான் தூக்கி வந்தேன். அது என்ன வைரஸ் என்று தெரியாது.. அந்தக்கிருமி என்மேல் தொற்றிவிட்டால்.. அனைவரும் என் நடத்தையை சந்தேகிப்பார்கள். பின்னர் என் பதவி போய்விடும்.
நித்திலா என்ன பதவி சின்னப்பு
சின்னப்பு: சின்னாச்சியின் கணவன் என்ற பதவி தான்.
அருவி : சின்னப்பு அது சரி கணணியினூடாக என்ன கிருமி பருவுது உங்கள தாக்க..??
சின்னப்பு : பல கிருமி பரவுதாம்.. மின்னஞ்சல் ஊடக வேறை அனுப்பிறாங்களாம்.. அதுதான் அந்த எயிட்ஸ் கிருமி பரவினாலும் என்று பாதுகாப்புக்கு உசாராய் இருக்கிறேன். தம்பி அருவி முந்தி ஒருக்கால்.. கொழும்பில ஓடிற பஸ்களில் உந்த கிருமி பரவுது என்டு சனம் பஸ்ஸில ஏறாமல் நடந்து திரிஞ்சது தெரியுமோ..?? எங்கள் நாட்டில் இந்த கிருமி உள்ளிட விட்டுவிட்டு நித்திரை கொண்ட மன்னர்.. மற்றும் அவருடைய ஊழியர்கள் அனைவரும் என் கணணியை காப்பாற்றித்தரவேணும். இல்லாட்டால் குடிமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இது கட்டளை அல்ல அல்ல அல்ல எச்சரிக்கை எச்சரிக்கை கை கை கை ......
(அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.)
மன்னர் : ஓய் மந்திரி இந்த ஆள் என்னைய்யா.. இனிதலையிடி வந்தாலும் மணி அடிச்சு ஆராயும் போல கிடக்கு.. எனக்கு தலையிடி வரப்போது
மந்திரி (சிறிய ஆராய்ச்சியின் பின்னர்) சின்னப்பு உங்களுக்கு வந்த பொட்டலாம் ஆந்திராக்ஸ் பவுடர் கிடையாது... கொழும்பு கதிர்காமம் கோவில்போன சின்னாச்சி உங்களுக்கு திருநீறு அனுப்பியிருக்கிறார். அவ்வளவும் தான்யா.. இதனுடன் வந்த கடிதத்தை ஏன் படிக்கவில்லை நீர்.
சின்னப்பு : அந்த எழுத்து சின்னாச்சியின் எழுத்தில்லை.. என்னை ஏமாற்றாதீர்கள்.
(இடையில் முகம்ஸ் ஓடிவருகிறார்.)
முகம்ஸ்: சின்னப்பு என்னப்பா இது .. என்ன நடக்குது.. உனக்கு பைத்தியமே.. இங்க பார்.. பொன்னம்மாக்கும் சின்னாச்சி பவுடர்.. சே திருநீறு அனுப்ப்யிருக்கிறா.. கையில வேலையா இருந்ததால கூட இருந்த பிள்ளையைக்கொண்டு கடிதம் எழுதியிருக்கிறா. நீ அதைப்போய் ஆர்ப்பாட்டம் பண்ணீட்டியே. நீ இங்க ஆர்ப்பாட்டம் பண்ண... பொன்ஸ் சின்னாச்சியை அடிச்சு கேட்டிட்டுத்தான் என்னை அனுப்பியிருக்கிறா.. பேசாமல் வா.. அடிச்சுக்கலைக்கப்போறாங்கள். அங்கின போனை அடிச்சு என்ன ஏது என்று விசாரிக்காமல் இங்கின வந்து மணியை அடிச்சு மானத்தை வாங்கிறியே..
சின்னப்பு : சே நான் ஒரு விசரன்.. சின்னாச்சி யோசிக்கும் என்டு போட்டு கேக்கேல்லை.... கொஞ்சம் வெள்ளன சொல்லியிருக்க்கூடாதே.. இப்ப வாறன்.. பொறு சமாளிப்பம். இந்த கணணியில திட்டமிட்டு கிருமி அனுப்பினதால.. யாழில எழுத முடியாமல் கஸ்டப்பட்டு முகக்குறி போட்டன் அங்க ஒருத்தன் எனக்கு படிக்கத்தெரியாது என்றிட்டான்...அதுக்கு என்ன சொல்றியள்..யாரோ திட்டமிட்டு என்ர நற்பெயரை குலைக்க செய்த வேலை தானே இது..
(கவிதன் அருவி இருவரும் சென்று கணணியை பரிசோதிக்கிறார்கள்.)
அருவி : சின்னப்பு.. உங்கட வயது கணணியை வைச்சுக்கொண்டு மன்னரில கோவிக்கிறியள்.. புதுசா ஒன்றை மாத்திறது தானே..??
சின்னப்பு : ஓய் அருவி என்ன நக்கலா.?? பழைய கணணி என்றா மாற்றணுமா..?? அப்படி என்றா.. நானும் பழசு தானே.. என்ர சின்னாச்சி கேட்டிருந்தால் அடிவாங்கியிருப்பீர். ஓல்ட் இஸ் கோல்ட்.. எனக்கு எல்லாம் ஒன்று தான் புதுசு புதுசா மாத்திப்பழக்கமில்லை.
அருவி : இஞ்ச பாறறா இவற்ற குசும்ப.. சே உண்மையிலையே ஆந்திராக்ஸ் அனுப்பியிருக்கணும் விட்டிட்டாங்கள்.
மந்திரி .. சினனப்பு இந்தாங்க.. இந்த மென்பொருளைப்போட்டு கிருமிகளை அழியுங்கோ. மந்திரி ஒரு சீடீயை கொடுக்கிறார்.
மன்னர் : இபப உங்கள் பிரச்சனை தீர்ந்ததா சின்னப்பு..??
சின்னப்பு: (அசடு வழிய) ஒரு வழியா முடிஞ்சுது அப்பு.. எதுக்கும் எல்லாம் முடிசசிட்டு வந்து அடிக்கிறனே..
மன்னர் : மறுபடியுமா..?? (இந்த மனிசன் விடமாட்டுதுபோல கிடக்கே)
சின்னப்பு: இல்லை மன்னரே.. தொல்லை பேசி அடிச்சு தகவல் சொல்றன்..
(அவை கலைகிறது முகம்ஸ்சும் சின்னாவும் பேசிக்கொள்கிறார்கள்.)
முகம்ஸ்: ஏன் சின்னப்பு எங்க போய் உந்த கிருமியளை வாங்கினாய்.
சின்னப்பு : உன்ர கேள்விலை கொள்ளியை வைக்க.. நான் எங்க வாங்கினன்.. கணணில வந்து சேந்திட்டுது.. என்னை மாதிரி ஜென்டில் அப்புக்களைத்தேடி கிருமி வருது நான் என்ன செய்ய.. நான் இருக்கிற ரென்சன்ல கேள்வி கேக்கிறார்.. பாரன்.. சரி சரி
வரேக்க வீராப்பாய் இதை தூக்கிக்கொண்டு வந்திட்டன் .. ஒரு கை பிடி... போய்ச்சேருவம்.. இனி நிண்டா கடிச்சு திண்டிடுவாங்கள்..
இருவரும் பார்சலுடன் நடையைக்கட்டுகிறார்கள்.

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>