03-04-2006, 03:44 PM
DV THAMILAN Wrote:எனது நண்பனுக்கு சிறு உதவி வேண்டும். நான் முயற்சிசெய்து பார்த்தேன் கண்டுபிடுக்கவில்லை. MSN Messenger சேகரிக்கும் அசையும் படங்கள் எங்கே சேமிக்கபடுகிறது என்று தெரியவேண்டும். நாங்கள் கணனி மாறும் போது நாங்கள் சேகரித்த அசையும் படங்கள் தெரிவதில்லை.
வணக்கம்...
நீங்கள் windows XP இயங்குதளத்தை பயன்படுத்துபவராக இருந்தால்:
முதலில் உங்கள் Ordneroptionen(Folder options) என்பதில் சென்று அங்கு Ansicht (View) இல மறைக்கப்பட்டிருக்கிற Folder (Ordner) களையும் காண்பிக்குமாறு செய்யுங்கள்.
அதன் பின் பின்வரும் முகவரிக்கு சென்று பாருங்கள்.
ஆங்கிலம்:
Quote:C:\Document and Settings\Username(அதாவது உங்கள் கணினிப் பெயர்)\Applicationfiles\Microsoft\MSN Messenger
யேர்மன்:
Quote:C:\Dokumente und Einstellungen\Benutzername(அதாவது உங்கள் கணினிப் பெயர்)\Anwendungsdaten\Microsoft\MSN Messenger
இங்கு உங்களுடைய Smilies, Emoticons, Animoticons, Sondsclips எல்லாம் இருக்கும். தேவையானவற்றை இறுவெட்டில் பதிவுசெய்து எடுத்து புதியதாக எம்எஸ்என் பதியும் போது அதே இடத்தில இவற்றை இணைத்துவிட்டால் சரி.
இல்லாவிட்டால் இன்னொரு வழி இருக்கிறது: கணினி வன்தட்டை முழுமையாக அழிப்பதற்கு முதல் உங்கள் smilies களை உங்கள் நண்பரிடம் அனுப்பிவிட்டு, புதிதாக பதிந்த பின் அவரை உங்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> (நகைச்சுவைக்காக மட்டுமே).நன்றி

