Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இரண்டு குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்
#2
தனது இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் பெண்மீது கனடா காவல்துறையினர் வழக்குப்பதிவு
ஜ சனிக்கிழமைஇ 4 மார்ச் 2006 ஸ ஜ மௌலானா ஸ
நேற்று முந்நாள் வியாழக்கிழமை கனடாவின் ரொறன்ரோ மார்க்கம் பகுதியில், தமிழ் பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக கனடா காவல்துறையினரால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழன் இரவு 7.00 மணியளவில் காவல்துறையினரின் அவசர தொலைபேசிக்கு கிடைக்கப் பெற்ற அழைப்பையடுத்து மக்கோவன் மற்றும் 14வது வீதிப் பகுதியில் உள்ள சோபியா வீதியில் உள்ள வீடொன்றின்றிற்கு காவல்துறையினர் சென்றபோது அந்த வீட்டின் குளியலறைத் தொட்டிக்குள் இரண்டு அகவையுடைய குழந்தையும், மூன்று மாதங்கள் நிரம்பிய குழந்தையும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், குழந்தைகளின் தாயார் கையின் மணிக்கட்டில் வெட்டுக்காயத்துடன் உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 30 அகவையுடைய மேற்படி பெண் தற்போது தேறிவருவதாகவும், தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவரிற்கு சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு குழந்தைகளும் குளியல்தொட்டிக்குள் அமிழ்த்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளபோதும், அதனைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை. சம்பவம் நடைபெற்றவேளை குழந்தைகளின் தந்தை வீட்டில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரொறன்ரோவில் சில ஆண்டுகளிற்கு முன்னரும், இதேபோன்று தமிழ் பெண்ணொருவர் தனது மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்தவேளை காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


http://www.nitharsanam.com/?art=15662
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 03-03-2006, 10:16 PM
[No subject] - by Mathan - 03-06-2006, 10:24 AM
[No subject] - by Birundan - 03-06-2006, 08:47 PM
[No subject] - by ThamilMahan - 03-06-2006, 09:36 PM
[No subject] - by Jude - 03-07-2006, 05:43 AM
[No subject] - by Danklas - 03-07-2006, 08:06 AM
[No subject] - by iniyaval - 03-09-2006, 09:07 PM
[No subject] - by ப்ரியசகி - 03-10-2006, 01:04 PM
[No subject] - by Luckyluke - 03-10-2006, 01:45 PM
[No subject] - by Rasikai - 03-12-2006, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 03-12-2006, 01:45 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)