Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் விடுதலைப் புலிகள் சந்திப்பு
#1
<b>நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் விடுதலைப் புலிகள் சந்திப்பு

<img src='http://img446.imageshack.us/img446/179/j15md.jpg' border='0' alt='user posted image'>

[வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2006, 23:53 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜெனீவா பேச்சுவார்த்தைக் குழுவினர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ய+ணாஸ் ஸ்தோரவை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
<img src='http://img446.imageshack.us/img446/4188/j23sz.jpg' border='0' alt='user posted image'>

ஜெனீவா இணக்கப்பாடுகள் குறித்து சிறிலங்கா அரசாங்கத் தரப்பு முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் தருவதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ய+ணாஸ் ஸ்தோரவிடம் விடுதலைப் புலிகளின் குழுவினர் எடுத்துக் கூறினர்.
நோர்வே நேரம் பிற்பகல் 2 மணிக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சிறப்புத் தளபதி கேணல் ஜெயம், சமாதானச் செயலகத்தைச் சேர்ந்த இளந்திரையன், புலித்தேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


சமாதான முயற்சிகளில் சிரத்தையுடன் செயற்பட்டுவரும் நோர்வேயின் புதிய அரசாங்கத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவரினதும் மக்களினதும் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்த சுப.தமிழ்ச்செல்வன், விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் ய+ணாஸ் ஸ்தோரவுக்கு விளக்கினார்.

ஜெனீவாவில் காணப்பட்ட இணக்கப்பாடுகளை துரித கதியில் நடைமுறைப்படுத்துவது பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்திற்கு அடிப்படையானது என்றும் அவை அடுத்தகட்டப் பேச்சுக்களுக்கு முன்னர் அமுலாக்கம் பெறுவது அவசியம் என்றும் நோர்வே வெளியுறவு அமைச்சரிடம் தமிழ்ச்செல்வன் வலியுறுத்தினார்.


மேலும் 25 ஆண்டுகால கொடிய யுத்தமும் ஆழிப்பேரலையின் பேரழிவும் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய அவலங்களினால் தமிழ் மக்கள் விரக்தியடைந்துள்ளனர் என்றும் அண்மைக்காலமாக சிறிலங்கா அரச படைகள் அப்பாவிப் பொதுமக்கள் மீது மேற்கொண்டுவரும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த நிலைமைகள் தொடர்பாகவும் நோர்வே அமைச்சருக்கு பேச்சுவார்த்ததைக் குழுவினர் விளக்கினர்.
ஜெனீவா இணக்கப்பாடுகளின் அமுலாக்கம் அவசியமானது என்பதை நோர்வே அரசாங்கம் ஏற்பதாகவும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.</b>



ஆதாரம் புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் விடுதலைப் புலிகள் சந்திப்பு - by வினித் - 03-03-2006, 08:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)