03-03-2006, 12:21 PM
rajathiraja Wrote:சிவில் அணு உலைகளை தான் சர்வதேச ஆணையம் பார்வையிட இந்தியா அனுமதி தந்துள்ளது. கல்பாக்கம் போன்ற ராணுவ உலைகளை பார்வையிட அனுமதி இல்லை. இடது சாரி கட்சிகளின் தரகர் அரசியலை கொண்டு இந்த விழ்யத்தை அலச வேண்டாம்
அணு ஆயுத உலைகளின் பட்டியலை சமூகநலன் கருதியவை இராணுவ நலன் கருதியவை எனப்பிரித்து வெளியிட வேண்டுமென கோரியிருக்கின்றது. இந்த அளவில் இந்தியாவும் ஒத்துக் கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் புஸ்ஸும் வாஷிங்டனில் ஒரு கூட்டறிக்கையையும் வெலியிட்டிருந்தார்கள். ஆனால் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு அதனையும் தாண்டி இந்தியாவின் இராணுவ நலன் சார்ந்த கல்பாக்கம் அதிவேக ஈனுலை அணுத்திட்டத்தையும் பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் மைசூரிலுள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தையும் சமூக நலன் கருதியபட்டியலில் அதாவது சர்வதேச அணுசக்தி கன்காணிப்பு முகவர் அமைப்பின் கண்காணிப்பின் கீழ் வரக்கூடிய வ்அகையில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனை கோரி நிற்கின்றது.
இந்நிபந்தனக்கு இந்தியா அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து உடன் படுமாயின் இந்தியாவின் வல்லாதிக்கக் கனவிற்கு அடிக்கப் படும் சாவு மணியாகவே இது இருக்கும். இந்தியாவின் அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ஒருவரின் கூற்றைப் போல " எமது இடையறாத உழைப்பின் வெற்றியை பகிரங்கப் படுத்தக் கேட்பது நீதியற்றதும்.
இது நடைபெறக்கூடாது என்பதுதானே எமது அவா.
.
.
.

