Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் மக்களின் அறிவையும் மனதையும் கொல்லும் கலாச்சார சீரழிவு
#1
<b>கலாச்சாரமற்ற இனம் ஒரு மந்த புத்தியுள்ள இனம். அதேபோன்று கலாச்சாரமற்ற படை ஒருமந்தபுத்தியுள்ள படையேயாகும். ஒரு இனத்தின் தனித்துவம் அதன் கலாச்சாரத்தனித்தன்மையின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. இதன் காரணமாகவே, ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் அதன் கலாச்சாரத்தை அழித்துவிட்டால் போதுமானது என்பதை ஆக்கிரமிப்பாளர்கள் தமது கோட்பாடகவே கொண்டுள்ளனர்.

அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் எந்த ஒரு இனமும் ஆக்கிரமிப்பாளர்களால் அறிவையும் மனதையம் வெல்லும் (Winning Hearts And Minds) நடவடிக்கை என்ற பெயரில் ஒருவிதமான உளவியல் நடவடிக்கைக்கு திட்டமிட்டவகையில் உள்ளாக்கப்படுவது வழக்கம்.

இது அந்த இனத்தின் இயல்பை, கலாச்சாரத்தனித்துவத்தை பண்பாட்டுச்சிறப்பை, பாரம்பரியச் செழுமையை மெல்லமெல்ல ஊடுருவி, அவற்றை நிர்மூலமாக்கும் ஒரு தொலைநோக்குச் செயற்பாட்டை கொண்டதாகும். ஆக்கிரமிப்புக்குள்ளாகும் மக்கள் அவலங்களுக்குள்ளாகி அந்தரப்பட்டு பீதியுடன் இருக்கும் நிலையில் அவர்களின் அந்த நேர பலவீனங்களைப்பயன்படுத்தி அவர்களுள், அவர்களின் அன்றாட வாழ்வுள் ஊடுருவும் இந்த |கலாச்சார| அழிப்பு நடவடிக்கையாளர்கள் அவர்களின் இனத்தனித்துவத்தை இலக்கு வைத்தே செயற்படுவார்கள்.

போர்த்துக்கேய காலம் முதல்கொண்டு ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எனத்தொடர்ந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் இதே யுத்தியையே கையாண்டு எமது இனத்தனித்துவத்தை சிதைத்து எமக்குள் தமது இன - மத - கலாச்சார விதைகளை தூவிட்டே சென்றுள்ளனர். அவை எமக்குள் ஆழவேரூன்றி விருட்சமாக இல்லாவிட்டாலும், மரமாகவேணும் வளர்ந்தே உள்ளது.

மேற்கத்திய ஆதிக்கசக்திகளின் வெளியேற்றத்தின் பின், உள்ளுர் மேலாதிக்க பேரினவாதிகளும் இந்திய வல்லாதிக்க சக்தியும் இதே யுத்தியையே அவரவர் அபிலாசைகளின் நோக்க இலக்குக்களுக்கேற்ப கையாண்டனர். இந்தியப்படையின் வெளியேற்றத்தின் பின்னர் அதனால் ஏற்பட்ட கலாச்சார பண்பாட்டு சீரழிவில் இருந்து நாம் மீண்டு நமது அடையாளங்களை உறுதிசெய்ய படுகாலம் எடுக்கவே செய்தது.

எனினும் அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்களாகவே இன்னமும், அவர்களின் எடுபிடிகளாகச் செயற்பட்ட சமூக - தேசவிரோத சக்திகள் தமிழ்க்குழுக்கள் என்ற பெயரில் இந்திய,சிங்கள அரசுகளுக்கு முகவர்களாகவும், துணைப்படையாகவும் இயங்கி எமது இன கலாச்சார தனித்துவத்தை தொடர்ந்தும் சீரழித்து வருகின்றனர் என்பது தெரிந்த விடயமேயாகும்.

இந்த சமூக விரோத சக்திகளின் அனுசரனையுடன் தான் ஆக்கிரமிப்பாளர்கள் எமது கலாச்சார அடையாளங்களைச் சிதைப்பதற்கான ஊடுருவல்களை மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும். மதுபாவனை, போதைப்பொருள் பரம்பல், ஆபாசச்சினிமாப் படங்களின் வருகை போன்றவை யாழ்குடா ஆக்கிரமிப்பின் பின் இங்கு அதிகரிக்கத் தொடங்கின. இது ஒரு திட்டமிட்ட உளவியல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.

ஒரு ஏழழாண்டு காலப்பகுதிகுள் அது ஒரு கொடிய விஷக்காய்ச்சல் போன்றே நீக்க முடியாத அளவுக்கு பரவிவிட்டுள்ளமையின் பிரதிபலிப்பை நாம் தெளிவாகவே உணரக்கூடியதாக உள்ளது. அன்றாடம் ஊடகங்களினூடாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சி தருவனவாக மட்டுமல்ல அவமானம் தருவனவாகவும் உள்ளன.

இந்த கலாச்சார சீரழிவு ஊடுருவல்களின் பாதிப்புகள் மிக ஆழவேரூன்றி அகலக் கிளை பரப்பியுள்ளமையே அன்றாட நிழக்வுகள் உணர்த்துவதாகவும் உள்ளன. போதைவஸ்த்துப்பாவனை இளம் சமூகத்தவரிடையே பெருமளவில் பரவி விட்டுள்ளது.

பெண்கள் மத்தியிலும் மது பாவனை அதிகரித்துள்ளது. குடும்ப உறவுகள் சீர்கெட்டு விவகாரத்து போன்றவை தீவிரமாகியுள்ளது. பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் வல்லுறவுகள் பரவலாக நடந்து வருகின்றன. குற்றச் செயல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நடைபெற்று வருகின்றன.. இளையோர் மூத்தோரை மதிக்கும் பண்பாடு அற்றுவிட்டது. சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பு சக்திகளின் அனுசரனையுடனும் அங்கீகாரத்துடனும் குழுக்களாக ஆயுதங்களுடன் இயங்கி வருகின்றமையானது சாதாரண மக்களின் பொது வாழ்விற்கு அச்சுறுத்தலாகியுள்ளது.

மது வியாபார நிலையங்களும், மூன்றாம் தர திரைப்படங்களை திரையிடும், மினிசினிமாக்களும், சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையாளர்களும் பெருகிப்பரந்துள்ளார்கள். இது ஆபத்தான, ஆரோக்கியமற்ற ஒருநிலையாகும். எமது இனத்தனித்துவம், கலாச்சாரச் சீரழிவின் அடிப்படையில் இழக்கப்பட்டு வருகிறது என்பது மறுக்கப்படமுடியாத ஒன்றாகவே உள்ளது.

யாழ் குடா நிலைமைதான் ஆக்கிரமிப்பாளர்களால் இவ்வாறு சீரழிந்துள்ளது என்றால் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழ் மக்களின் பண்பாட்டை சீரழிக்கும் வகையில் சிங்களபட முதலாளிகளும் தமிழ் மக்களை வக்கிரமனமுள்ளவர்களாக மாற்றியேனும் பணம் தேடநினைக்கும் தமிழ்த் திரையரங்கு முதலாளிகளும் இறக்குமதி செய்து திரையிடும் படங்கள் இந்திய-தமிழக நச்சுக் கலாச்சார ஆபாசக்கலை வளர்ச்சியின் கீழ்த்தரமான சிந்தனையை இங்கு பரப்புபவையாகவேயுள்ளன. இங்கும் பாதிக்கப்படுபவர்கள் தமிழ் மக்களே.

இதனை சிங்கள அரசும் மௌனமாக அங்கீகரித்தேயுள்ளது. பத்திரிகைகளில் வெளியாகும் திரைப்பட வெளியீடுகள் பற்றி விளப்பரங்களைப்பார்த்தால் நமது இனம் எதிர்கொண்டு வரும் சீரழிவைப்புரிந்து கொள்ள முடியும். இத்தகைய திரைப்படங்கள் குறித்து கண்டித்து கட்டுரைகள் வெளியிடும் கொழும்ப தமிழ் பத்திரிகைகள் கூட, இப்படங்கள் குறித்த விளம்பரங்களை பெருமையுடன் பச்சை அசிங்கத்தனமான ஆபாச வார்த்தைகளுடன் வெளியிடுவதைப் பார்க்கும் போதுதான் அந்தப் பத்திரிகையிகளின் சமூகப் பொறுப்புக் குறித்த சந்தேகமே எழுகிறது.

இதனைவிடவும் இவர்கள் ஒரு விபச்சார விடுதியையே நடத்தலாம். அண்மையில் தமிழீழ திரைப்படப்பிரிவு விடுத்துள்ள வேண்டுகோளுடன் கூடிய அறிக்கையில் 'தமிழ்ப் பாண்பாட்டைத்திட்டமிட்டு சீரழிக்க முயலும் தீயசக்திகளுக்கு துணை போகாதீர்கள்" என்று கோரியுள்ளது.

தமிழினத்தின் தனித்துவ கலாச்சாரத்தை பேணிப்பாதுகாக்கும் வகையில் தமிழ்ப் பண்பாட்டை வளர்த்தெடுக்கும் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து அக்கறையுடன் பொறுப்பார்வத்துடன் செயற்படவேண்டிய காலகட்ட மிதுவாகும். தமிழினம் கலாச்சரமுள்ள ஒரு படையையும் தலைமைத்துவத்தையும் கொண்டுள்ள மையமானது சர்வதேசம் அறிந்த உண்மையாகும்.

இந்தநிலையில் கலாச்சார சீரழிவுகளுக்கு நாம் ஆளாகி ஒரு மந்த புத்தியுள்ள இனமாக எம்மை இனக் காட்டிக்கொள்ளலாமா?

ஆக்கிரமிப்புச்சக்திகளினதும் அதன் அடிவருடிகளான சமூக - தேசவிரோத சக்திகளினதும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு அதாவது தமிழ்மக்களின் அறிவையும் மனதையும் கொல்லும் உளவியல் நடவடிக்கைகளுக்கு (Killing Hearts And Minds) நாம் துணை போகலாமா?

எமது கலாச்சார தனித்துவ அடையாளங்களை நாமிழப் போமேயானால் நம்மை நாமே இழந்தவர்களாகிவிடுவோம்.

நன்றி: தூரனின் பார்வை ஈழநாதம்</b>
Reply


Messages In This Thread
தமிழ் மக்களின் அறிவைய - by கெளஷிகன் - 02-05-2004, 09:25 AM
[No subject] - by Mathivathanan - 02-05-2004, 09:40 AM
[No subject] - by adipadda_tamilan - 02-06-2004, 04:22 AM
[No subject] - by Mathivathanan - 02-06-2004, 08:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)