03-02-2006, 05:47 PM
இதில் நாம் முக்கியமாக நோக்கவேண்டிய அமிசம் யாதெனில், சாதியமைப்புக்கெதிராகத் தொடங்கிய போராட்டம் அடிப்படைச் சமூக-பொருளாதார அமைப்பு மாறாததனாலும், மாற்றம் ஏற்பட்டச் சிற்சில துறைகளிலுங்கூட நிலவிய 'உறவுகள்' காரணமாகவும் சாதியமைப்பு மீள் வலியுறுத்தப்படுகிறது.
இது தொலைநோக்கில் ஒட்டுமொத்தச் சனநாயகமயப்பாட்டைச் சிக்கற்படுத்துவதாக இருக்கும். ஆனால், அதே, வேளையில் சனநாயகமயப்பாட்டின் தாக்கத்தினாலேதான் இந்நிலை ஏற்படுகின்றதென்ற உண்மையையும் மறந்துவிடுதல் கூடாது.
தலித்திய எழுச்சி இந்தச் சமூகச் சிக்கற்பாடுகளின் வெளிப்பாடாக அமைகின்றது. அது பற்றிச் சற்று விரிவாகப் பின்னர் நோக்குவோம்.
9
திராவிட இயக்க வரலாறு வழிவந்த சமூக அனுபவங்கள் பற்றிப் பேசும் இந்நிலையில், திராவிட இயக்கம் அது 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதிய துறையில் ஏற்படுத்திய மாற்றங்களை நோக்குதல் வேண்டும். இது மிக முக்கியமான ஓர் அமிசமாகும். ஏனெனில் 1850, 1900,1930,1950களில் 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதப்பட்டனவற்றுக்கும், பின்னர் வரும் காலகட்டங்களிலே 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதப்படுவனவற்றுக்குமிடையிலே பார்வைப்பரப்பு வேறுபாடு உண்டு.
தமிழ்ப் பண்பாடு சம்பந்தமாகத் திராவிட இயக்கத்தின் பிரதான தாக்கம், இக்கருத்துநிலை காரணமாக, தமிழ்ப் பண்பாடு என்று கொள்ளப்படும் ஒரு 'பொதுமைப்பரப்பினை' சமயச் சார்பற்றதாக்கியமையே. (செக்கியூலர்-secular என்னும் தொடரை நாம் இன்றுங்கூட சமய நீக்கம், சமயச் சார்பின்மை என எதிர்நிலையில் மொழிபெயர்க்கின்றோமேயன்றி, அதனை ஒரு 'உடனிலைப்'பாடான -positive எண்ணக் கருவாக எழுத முடியாதுள்ளது.) சைவத் தமிழ், வைஷ்ணவத் தமிழ், கிறிஸ்தவத் தமிழ், இஸ்லாமியத் தமிழ்ப் பாரம்பரியங்கள் பற்றிய ஆய்வுகள் இக்காலகட்டத்திலே செய்யப்பட்டு, அவையாவற்றையும் தமிழின் பொதுப்பாரியத்தினுள்ளே கொண்டுவரும் ஒரு புலமைப் போக்கு இன்று வலுவுடையதாகவிருப்பினும், இவையாவற்றுக்கும் அப்பாலான, சமயச் சார்பற்ற ஒரு 'தமிழ்ப் பண்பாட்டு' இருக்கை ஒன்று உள்ளது என்ற ஒரு பார்வைப் பரப்பு இன்று உள்ளது. இதன் உருவாக்கத்திலே திராவிடக் கருத்து நிலைக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு.
'தமிழ்ப் பண்பாடு' எனும் பொழுது மதப் பாரம்பரியங்களுக்கு அழுத்தம் கொடுக்காது, பிற மொழிச் செல்வாக்குக்கள் குறைந்தவை/அற்றவை என்று கருதப்டும் இலக்கியங்களை முதன்மைப்படுத்தும் ஒரு செல்நெறியும் தோன்றிற்று. இதன் காரணமாகச் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியன தமிழ்ப் பண்பாட்டின் கருவூலங்களாக எடுத்துரைக்கப்பட்டன.
இவ்வேளையில், அனைத்திந்திய, உலக மட்டத்தில் தமிழ்/தமிழ்ப் பண்பாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புக்கள் என்று கருதப்படுகின்ற பக்தி இலக்கியம், நடராஜர் சிலை போன்றவற்றை இக்கருத்துநிலை முதன்மைப்படுத்தாது விட்டமையையும் குறிப்பிடல் வேண்டும்.
திராவிடக் கருத்துநிலையின் தொழிற்பாடு காரணமாக முற்றிலும் அதன் தொடர்பியல் தேவைகளுக்காக, தமிழின் மொழிப் பயன்பாட்டில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. தனித்தமிழியக்கம் திராவிடக் கருத்துநிலை வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தை உணர்த்தி நிற்பதாகும். ஆனால், பெரியார், அண்ணாதுரை கருத்தாடல்களில் இந்த மொழிப் பிரயோகம் மாற்றங்களைப் பெற்றது. பெரியாரின் பயன்பாட்டில் பேச்சு நிலை வழக்கு (spoken dialict) முதன்மைப்பட அண்ணாதுரையின் பயன்பாட்டில் (பின்னர் கருணாநிதியிலும்) தமிழின் விதி முறைப் பிரயோகத்திற் (formal use) பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு குறிப்பிட்ட மொழிநடை (அடுக்குத் தமிழ்) அரசியல் சமூகத் தொடர்பாடலைப் பெரிதும் வலுப்படுத்துவதாக இருந்தது. மேலும், திராவிட இயக்கத்தினர் பத்திரிகைகளையும் தமது தொடர்பாடற் சாதனமாகக் கொள்ளத் தொடங்கியிருந்தனர். இவர்களது வாசக வட்டத்தின் தன்மை, பார்வைப் பரப்புக் காரணமாகத் தமிழின் பத்திரிக்கை எழுத்துத் துறையில் ஒரு புதிய 'மரபு' (idiom) தோன்றிற்று எனலாம். திராவிட இயக்கத்தின் செல்வாக்குச் சினிமாத் துறையையும் பாதித்தது. அந்தப் பாதிப்புக் காரணமாக, இந்தப் புதிய 'நடை' மிக்க பரவலினைப் பெற்றது.
தமிழ்ப் பண்பாட்டுத் துறையில் திராவிட இயக்கத்தின் தொழிற்பாடுகளை மிக உன்னிப்பாக ஆராயும்பொழுது, தமிழ்ப் பண்பாடு இவர்களால் அரசியல்மயப்படுத்தப்பட்ட ஓர் எண்ணக் கருவாகிற்று என்றும் துணிந்து கூறலாம். தமிழ் நாட்டில் ஏற்கனவே நிலவிய 'தமிழர்' என்ற சொல்லின் ஒரு பயன்பாடு பிராமணர்களல்லாத தமிழர்களையும் குறிப்பது. தமிழகத்தில் 'தமிழர்' பற்றிய குறிப்பீட்டுக்குத் 'தமிழியன்' (Tamilian) என்ற ஆங்கிலப் பிரயோகத்தையும் அவதானித்தல் வேண்டும். தமிழரைத் 'தமிழ்ஸ்' (Tamils) என்னாமல் (இலங்கையிலுள்ளது போல்), 'தமிழியன்' எனும் பொழுது, தொனிப்பொருளாக வேறுபாடு வெளிப்படுத்தப்படுகின்றது.
* * * Travida 1 - ன் தொடர்ச்சி * * *
இந்த அரசியல்மயப்பாடு காரணமாக, தமிழ்ப் பண்பாட்டின் குறியீடுகளிலும் வேறுபாடு ஏற்படத் தொடங்கிற்று. தைப்பொங்கல், தமிழர் திருநாள் ஆகிற்று; திருக்குறள், 'உலகத்துக்கு அறிவு வழங்கிய தமிழ் மகன் திருவள்ளுவனாரின் நூல்' (சக்திப் பதிப்பக மலிவுப்பதிப்பு முன் அட்டையில்) ஆயிற்று; திருமணங்கள் பாரம்பரிய வடமொழி வரும் சடங்குகளின்றி நடைபெறத் தொடங்கின (žர்திருத்தக் கலியாணம்); தமிழ்ச் சினிமாவிற் சில குடும்பநிலைப் பண்புகள், தமிழ்ப் பண்புகளாகப் போற்றப்பட்டன. தமிழனின் மானம், தமிழச்சியின் கற்பு என்பன உருவுடைப் பொருள்கள் (reification) ஆகின அரசியல் தொடர்பாடலில் இப்பிரயோகங்கள் வலிமை மிக்க கூற்றுக்களாகின.
தமிழ்த் தேசியப் பிரக்ஞை உருவாக்கத்தில் இந்தக் குறியீடுகள் மிக முக்கிய இடம்பெறத் தொடங்கின.
10
திராவிட இயக்கம்/கருத்து நிலை தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய மிகப் பிரதானமாக 'தாக்கங்களில்' ஒன்று மதம் பற்றிய அதன் நோக்கு ஆகும்.
இவ்வியக்கம்/கருத்துநிலையின் உடனுறை நோக்கமான பிராமணிய எதிர்ப்புக் காரணமாக, திராவிட இயக்கம் அதன் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் 'வைதிக' (வேத வழி வருகின்ற) இந்து மதச் சடங்குகளை எதிர்த்தது. சைவம் ஆகமங்களை ஏற்றுக்கொண்டது. ஆனால் பெரியாரின் சுயமரியாதை இயக்கம், இந்து மதத்தை அதன் சகல நிலைகளிலும் நிராகரித்தது. இவர்கள் தங்கள் உந்துதற் கோட்பாடுகள் எனக் கொண்டிருந்த 'பகுத்தறிவுவாதம்', 'நாத்திகவாதம்' என்பனவும் இவர்களை அந்த நிலைக்குத் தள்ளின.
அந்தக் கண்ணோட்டத்தில் இந்து மதம் என்பது சமூகக் கட்டுப்பாட்டுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு 'ஆரிய'/பிராமணியச் சூழ்ச்சி என்றே நோக்கப்பட்டது. கிறிஸ்தவம், இஸ்லாம் பற்றி இப்பார்வை முன்வைக்கப்படவில்லை.
இந்த நோக்குக் காரணமாக, மதத்தின் சமூக வகிபாகத்தையே (Social role of religion) மறுதலிக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டது எனலாம். மதத்தின் மெய்யியல் தளத்தைக் கேள்விக்குள்ளாக்கி, அதன் சமூக-அரசியல் தொழிற்பாடுகளை வன்மையாகக் கண்டித்த கார்ல் மார்க்சும் எங்கெல்சும், மதத்தின் சமூக வகிபாகத்தை நிராகரிக்கவில்லை.* மார்க்ஸ் மதத்தை விவரிக்கும்பொழுது அது 'ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக' அமைவதையும், யதார்த்த வாழ்வில் மறுதலிக்கப்பட்ட விடயங்கள் மறுமையில் தரப்படும் என்ற ஒரு 'போதை' நிலையினைத் தருவதையும் குறிப்பிட்டுள்ளார்.
மதத்தை, குறிப்பாகத் தமிழ்நாட்டுச்சைவம், வைணவத்தைச் சமூக நிறுவனமாக நிராகரிக்கும் இப்போக்குத் தமிழகத்துப் பொதுவுடைமை இயக்கத்திலும் உண்டு. பொதுவுடைமை இயக்க--பகுத்தறிவு இயக்க வளர்ச்சி வரலாற்றின்
-----
* மார்க்ஸ்-எங்கெல்ஸ், On Religion, மொஸ்கோ, 1956.
...
ஆரம்ப நிலையில் சிங்காரவேலர், ஈவெராவுக்கிருந்த உறவு மிக முக்கியமானதாகும்.
சமனற்ற வளர்ச்சியையும் அதிகாரப் படிநிலைச் சமூக அமைப்பையும் (hierarchial society) கொண்ட ஒரு சமூகத்தில், மதம் மக்கள் மனதைச் சமூக இருக்கைக்குப் பதனப்படுத்தும் (Social conditioning) ஒரு வழிமுறையாக அமைகிறது. அந்தப் பதனப்பாடு ஒழிக்கப்படவேண்டுமெனில் உற்பத்தி முறைமையின் சமூக உறவுகள் மாற்றப்படவேண்டும். அத்துடன் இத்தகைய நிலையில் சில கருத்து நிலை/கண்ணோட்டங்கள் மேலாண்மையுடையனவாகவிருக்கும். இவை மரபு என்று போற்றப்படுவனவாகவும் அமைந்துவிடலாம். அத்தகையனவற்றை நிராகரிக்கும்பொழுது, சமூக இருக்கையைத் தொடர்ந்து பேணுவதற்கான இன்னொரு வன்மையான நோக்குமுறை வேண்டும்.
'திராவிட', 'சுயமரியாதை'க் கருத்துநிலையானது பகுத்தறிவு வாதம், நாத்திகத்தைத் தொகுநிலை அர்த்தமாகக் கொள்ளும் தன்மை இருந்தது. ஆனால் அண்ணாதுரையோ, திமுக தோற்றத்துடன் திருமூலர் திருமந்திரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு வரியான 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்பதை ஒரு கோஷமாக்கினார். இது மதத்தை ஏற்பதாயிற்று. குறிப்பாகக் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களிடையே திராவிடக் கருத்து நிலை பற்றிய பகுத்தறிவு நோக்கு அச்சத்தை நீக்கிற்று.
இந்தக் கோஷம் திமுகவின் மதநோக்கிற் சில முரண்பாடுகளை ஏற்படுத்திற்று
இந்த உண்மையை அறுபதுகளின் பிற்கூற்றிலும் அதன் பின்னரும் ஏற்படும் 'மத உணர்வு' (religionity) மீட்பிற் காணலாம். காஞ்சி காமகோடி பீடத்தை முதன்மைப்படுத்தி அறுபதுகளில் நடந்த மத-சடங்காசார மீட்டெடுப்பு இயக்கம், படிப்படியாகப் பிராமணரல்லாத மட்டங்களுக்கும் செல்ல, அந்நிலைகளில் முருக, மாரியம்மன் வணக்கங்கள் மிக முக்கியமாகின. திராவிடக் கருத்துநிலையைப் பரப்பப் பயன்படுத்தப்பட்ட அதே சினிமா ஊடகம் இதற்கும் பயன்படுத்தப்பட்டது. மேலும் எண்பதுகளில், குறிப்பாக நகர்ப்புறத்து ஏழைகள் மத்தியில் சபரிமலை வழிபாடு பிரபலம் பெற்றது. இப்பொழுது திராவிட முன்னேற்றக் கழக அங்கத்தினர்களிடையே காணப்படும் மதவழிபாட்டு நடைமுறைகள் அவர்களின் தலைமையினரிடையே விமர்சிக்கப்பட்டுள்ளது.*
----
* இந்த மாற்றங்கள் பற்றிய குறிப்புக்களுடன் வெறிவந்த 'இந்தியா ருடே' மார்ச் 1997 இதழைப் பார்க்க.
திராவிடக் கட்சிகள் மாநில ஆட்சியை ஏற்றுக்கொண்டபொழுது, அவர்களுடைய கருத்துநிலை எவ்வாறிருப்பினும், கோயில்களையும் மற்றைய மதச்சார் நிறுவனங்களையும் நிர்வகிக்கவேண்டிய ஒரு தேவை ஏற்பட்டது என்பதையும் இங்குக் குறிப்பிடுதல் வேண்டும். இது இந்த விடயங்களில் 'தலையீடு' செய்யவேண்டிய ஒரு நிலைமையினை ஏற்படுத்திற்று
இந்துமத மீட்டெடுப்பு நடவடிக்கைகளின் பொழுது, பிராமணரல்லாத குன்றக்குடி அடிகளார் முன்னின்று நடத்திய சமூக-மத-பண்பாட்டு நடவடிக்கைகள் பற்றி இங்குக் குறிப்பிடல் அவசியமாகின்றது. அவருடைய முயற்சிகளை (திராவிட இயக்கத்தினர்) மறுதலிப்பதில் ஒரு தயக்கம் காணப்பட்ட தென்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். குன்றக்குடி அடிகளாரின் தமிழ் நிலைப்பட்ட நடவடிக்கைகளும் முக்கியமானவையாகும். அவருடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய கருத்துநிலை முக்கியமற்றவரெனினும், பிராமணரல்லாத நிலையில் மதப் பிரசாரகராகவிருந்த கிருபானந்த வாரியாரையும் இங்குக் குறிப்பிடல் வேண்டும். இவருக்குக் கௌரவ இலக்கிய முனைவர் (DLitt) பட்டம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டது.
மதம் என்னும் சமூக-பண்பாட்டு நிறுவனத்தை மறுதலிப்பது என்பது இந்தியா போன்ற பாரம்பரியச் சமூகம் ஒன்றிற் (traditional society) சுலபமாகச் செய்துவிடக்கூடிய விடயமன்று.
இக்கட்டத்தில், இந்தியச் சமூக அமைப்பில், மேனிலை அசைவியக்கம் (Upward social mobility) பற்றி எம்.என். சிறிநிவாஸ் கூறியுள்ள ஒரு பொதுவிதியின் செயற்பாட்டையும் நாம் இங்கு ஒளிவு மறைவின்றிக் குறித்துக் கொள்ளல் வேண்டும்.
அச்செல்நெறியை சிறிநிவாஸ் 'சமஸ்கிருதமயவாக்கம்' (Sanskritisation) என்பர். இங்கு 'சமஸ்கிருதம்' என்பது ஒரு மொழிநிலைக் குறிப்பல்ல. அதாவது அடிநிலைச் சமூகத்தினர் மேனிலை எய்தும்பொழுது, உயர்நிலைச் சமூகத்தினரின் பண்பாட்டுப் போக்குகளைக் கையேற்றுக்கொள்ளல் இந்தியச் சமூகவியலின் பொதுவிதி என்பர். இது பெரும்பாலும் பிராமணியச் சடங்குகளைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால், எல்லா வேளைகளிலும் அல்ல. ஏதோ ஒரு வகையில் ஒரு 'மதநூற் பாரம்பரியத்துக்குச் செல்லல்' என்பதைக் குறிக்கும்.*
-----
* பார்க்க: M.N. Srinivas. Social Change in India.
...
இந்த சமஸ்கிருதமயவாக்கம் பல வடிவங்களில் பிராமணரல்லாதாரைச் சூழ்ந்துள்ளது. தமிழ் மரபின் தெய்வங்கள், இன்று பெருந்தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன.
தலித் மக்களின் வளர்ச்சியின்பொழுதும் இத்தகைய ஒரு நிலை ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் இப்பொழுதே காணப்படுகின்றன.
11
திராவிட இயக்க வரலாற்றில், அதன் கருத்துநிலைப் போக்கின் ஒரு முக்கிய பெறுபேறாக அமைந்தது தமிழ்ப் பிரக்ஞை, தமிழ்த் தேசிய உணர்வு ஆகும். தமிழ் மக்கள் தங்கள் இன உணர்வு பற்றிய அரசியல் பிரக்ஞை கொள்வதில் திராவிட இயக்கத்தின் பங்கு கணிசமானதாகும். இத்துறையில் ம.பொ. சிவஞான கிராமணியாரின் தமிழரசுக் கட்சியும் ஓரளவு தொழிற்பட்டதுண்மையெனினும், தமிழ் மக்கள் தாங்கள் ஓர் அரசியற்குழுமம் என்ற உணர்வைப் பெறுவதில் இவ்வியக்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
திராவிட இயக்கத்தின் அரசியற் பயன்பாடு பற்றி ஆராய்த என்.ராம், இந்தக் கருத்து நிலை, தமிழ்த்தேசிய இன உணர்வு (nationality conciousness) உருவாக்கத்தில் முக்கிய இடம் பெறுகின்றது என்று கூறியுள்ளார் (ராம் 1978:79).
இலங்கையில் தமிழ்த் தேசிய உணர்வு உருவாக்கத்திலும் எடுத்துரைப்பிலும் திராவிட இயக்கத்தின் பெரியாரின் செல்வாக்கு மிகக் கணிசமானதாகும். இலங்கையில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கு மிகவும் வரையறுக்கப்பட்ட ஒரு வரவேற்பே இருந்தது. ஆனால் இருந்தது என்பது உண்மை. 1920,30 களில் 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது. உதாரணமாக, கரவெட்டி என்னும் கிராமத்தில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார். இத்தகைய ஒரு குழுமம் கிழக்கிலங்கையிலுமிருந்தது. பிற்காலத்தில் தமிழரசுக் கட்சியின் பத்திரிக்கையின் ஆசிரியராக விளங்கிய எஸ்.டி. சிவநாயகம் மட்டக்களப்பில் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பினார். அவர் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்களாக செ. இராசதுரை (பின்னர் பாராளுமன்ற அங்கத்தினர்/அமைச்சர்), எஸ்.இ. கமலநாதன் ஆகியோர் விளங்கினர். அரசியல் நிலைப்பட்ட தமிழின உணர்வு வளர்ச்சியில் 1949 இல் தோற்றுவிக்கப்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கிய ஆர்வம் காட்டிற்று. இந்தக் கட்சியினர் தங்கள் கட்சிப் பிரசாரங்களில் அண்ணாதுரை, திமுகவின் கருத்துப் பரப்புகைக்குப் பயன்படுத்திய சொற்பொழிவு முறைமையைப் பயன்படுத்தினர். இவர்களும் பாசறை, தளபதி போன்ற பதங்களைப் பயன்படுத்தினர்.
இத்தகைய பின்பற்றுகைகளுக்கு மேலே சென்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், திராவிட இயக்கத்தினருடன் நேரடித் தொடர்புகளும் ஏற்படுத்தினர். தமிழரசுக் கட்சித் தலைவர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் அ. அமிர்தலிங்கமும், பெரியாரையும் அண்ணாதுரை அவர்களையும் சந்தித்தனர் (தமிழரசுக் கட்சி வெள்ளிவிழா மலர் 1974).
இலங்கையில் வாழ்ந்து வரும் இந்திய வழிசாவழித் தமிழரிடையே, குறிப்பாக 1950 களில் திராவிட இயக்கம் முக்கியமான அரசியற் செல்வாக்குக் கொண்டிருந்தது. இச்செல்வாக்கு இலங்கையின் மலையகத்தில் (Hill Country of Sri Lanka) உள்ள தோட்டத் தொழிலாளரிடையே பரவத் தொடங்கியதும் அக்கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. இலங்கைத் திராவிட இயக்கத்தின் வரலாற்றில் இளஞ்செழியனுக்குள்ள இடம் முக்கியமானதாகும்.
இந்த வரலாற்றுண்மையை அண்மையில் வெளிவந்த பெ.முத்துலிங்கத்தின் 'எழுதாத வரலாறு' (கொழும்பு 1997) என்னும் நூல் வெளிக்கொணர்ந்துள்ளது.
12
திராவிட இயக்க/கருத்துநிலைத் தொழிற்பாடுகளின் அரசியல், சமூகப் பலாபலன்கள் பற்றி மீள்நோக்கச் செய்யும் பொழுது, இக்கருத்துநிலையானது, குறிப்பாக மாநிய ஆட்சிக் கருத்துநிலையாக மாறிய நிலையில், (அதாவது பாராளுமன்ற ஆட்சிமுறை பங்குகொள்ளலை ஏற்றுக்கொண்ட பின்னர்) இந்தக் கருத்துநிலைக்கு ஆதரவு வழங்காத, இதனைக் குரோத உணர்வுடன் நோக்கிய, கருத்துநிலையாளர்களைப் பெரும்பாலும் கொண்டிருந்த ஓர் உத்தியோகத்தர் குழாத்தினராலேயே (bureaucracy) நிர்வகிக்கப்பட்டு வந்தது என்ற உண்மையையும் பதிவு செய்தல் அவசியம். அனைத்திந்திய ஒருமைப்பாடு, பிராமண உத்தியோக மேலாண்மை, சமஸ்கிருத நெறிப்படுகை ஆகியனவற்றை எதிர்த்த திராவிட இயக்கம், மாநில ஆட்சியை ஏற்றுக்கொண்டதும் இந்த மூன்று கட்டுக்கோப்புக்களுள்ளும் நின்று இயங்கவேண்டிய தேவை ஏற்பட்டது.
இதனால், இந்தக் கருத்துநிலை வழிவரும் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
தேர்தல் அரசியலில் இறங்கியபொழுது ஏற்பட்ட நிலைப் பெயர்வுகளுடன் இதுவும் சேர, இந்தக் கருத்து நிலையின் வலிமை பெரிதும் பாதிக்கப்பட்டதெனலாம்.
மாநில நிர்வாகத்தைத் திராவிடக் கட்சிகள் ஏற்றுக்கொண்டபொழுது, தவிர்க்க முடியாத வகையிற் சில பிராமண உத்தியோகத்தர்கள் முதன்மை எய்தினர். திமுகவின் முதல் ஆட்சிக் காலத்தில் வி.பி.ராமன் என்ற அட்வகற் ஜெனரல் முதன்மை பெற்றதை ஒரு முக்கிய உதாரணமாகக் காட்டுவர்.
13
திராவிட இயக்கம்/கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றிச் சிந்திக்கும்பொழுது, முக்கியப் பிரச்சினை மையங்களில் ஒன்றாக அமைவது 'தலித்' பிரச்சினையாகும்.
எண்பதுகளின் பிற்கூற்று முதல் இது படிப்படியாக முக்கியத்துவம் பெறத் தெடங்கி, தொண்ணூறுகளில் தமிழ் நாட்டின் மிக முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்றாக மேற்கிளப்பியுள்ளது.
தலித் இயக்கத்தின் இன்றைய எழுச்சியையும் அதன் தன்மைகளையும் மதிப்பிடுவதற்கு 1980 இல் வெளியிடப்பட்ட மண்டல கமிஷனின் அறிக்கையில் வரும் சில குறிப்புக்கள் பெரிதும் உதவுகின்றன. மற்றைய பின்தங்கிய சமூகத்தினரின் பிரச்சினைகளில் வடக்கு-தெற்கினை ஒப்புநோக்க முனைந்த பொழுது (தொகுதி 1, அத்தியாயம் 8) தமிழ்நாட்டின் சிறப்பு அம்சம் ஒன்று பற்றி ஆராய்கிறது:
8,13 உண்மையான நடைமுறையில் ஒதுக்கீட்டின் நன்மைகள், பின்தங்கிய சமூகங்களிடையேயுள்ள அவர்களுள் முன்னேறியவர்களான சாதிகளுக்கே சென்றுள்ளன. தமிழ்நாடு பின்தங்கிய வகுப்பினர் ஆணைக்குழு இது பற்றிச் சிறப்புக் கவனம் எடுத்தது (1970).........
இதிலுள்ள பிரதான வினா இதுதான். பின் தங்கிய வகுப்பினரிடையே 88.7% வீதமுள்ள பலங்குறைந்தனவும், சிறியனவுமான பின்தங்கிய சாதிகள், ஒதுக்கீட்டின் நன்மைகள் கையளவு குறுகிய ஒரு குழுவினரிடையே போவதை ஏன் எதிர்க்கவில்லை? கர்நாடகத்தில் தேவராஜ் அர்ஸ் இந்த எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி, இந்தச் சாதிகளிடையே தனக்கென ஓர் அரசியல் தளத்தை உருவாக்கிக் கொண்டார். ஆனால் தமிழ்நாட்டில், திராவிடக் கழகம் காரணமாக அத்தகைய நிலைமை ஏற்படவில்லை. தமிழ்ப் பண்பாட்டு மீட்பு தமிழ்நாட்டினை இறுகப் பற்றியிருக்கும் வரை, உண்மையான ஒரு பின்தங்கிய வகுப்பினர் இயக்கம் அங்கு தோன்றாது.
மற்றைய மாநிலங்களில் நடந்தேறியது போல, தமிழ் நாட்டில், ஹரிஜனங்களுக்கும் மற்றைய பின்தங்கிய வகுப்பினருக்குமிடையேயுள்ள மோதுகை, பிராமணர்-பிராமணரல்லாதார் பிளவை மறைத்துவிடாது. இங்கு ஹரிஜனங்கள் சுயமரியாதை இயக்கத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.*
1980 இல் வெளியிடப் பெற்ற இக்கருத்து ஒரு பத்தாண்டுக் கால முடிவில் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது.
எண்பதுகளில் படிப்படியாக முளைவிடத் தொடங்கிய தலித் இயக்கம் (ராஜசேகர் ஷெட்டி எண்பதுகளின் தொடக்கத்தில்--1981, 82--வெளிவந்த தனது நூல்களை 'தலித் வெளியீடுகள்' என்ற நிறுவனம் மூலமே கொண்டு வந்தார்) அம்பேத்கர் நூற்றாண்டு விழா ஆண்டு மதல் (1989) மிகப்பெரிதாகப் பரவி, தொண்ணூறுகளில், தமிழ்நாட்டில், பிராமண-பிராமணரல்லாதார் எதிர்ப்புணர்வு அளவுக்கு முக்கியத்துவமுடைய ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இப்பொழுது தென் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் சாதிக் கலவரங்கள் (தேவேந்திரகுல வேளாளருக்கும் தேவர்களுக்குமிடையே நடப்பது) இந்த உண்மையை வலியுறுத்துகின்றன.
தமிழ்நாடு பின்தங்கிய வகுப்புக்கள் ஆணைக்குழு கூறியுள்ள முறையில், திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு மீட்புப் பற்றிக் கொண்ட நடவடிக்கைகள்,
------
* Report of the Backward Classes Commission (Mandal Commission) First Part (Vol I & II, Government of India, New Delhi, 1980, P.32.
....
பிராமணரல்லாத மக்களிடையே ஒரு பொதுமைப்பாட்டை ஏற்படுத்தினவா என்பது இப்பொழுது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
திராவிட இயக்கம் தான் மேற்கொண்ட 'பிராமணரல்லாத சமூகங்களின் சனநாயகவாக்கம்' என்ற நோக்கின் தர்க்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்திருந்தால், அது ஒடுக்கப்பட்ட தமிழ்க் குழுமங்களிடத்துச் சென்றிருந்தல் வேண்டும். ஆனால், அந்த நடைமுறை பூரணப்படவில்லை என்பதை இன்றைய நிலையிலிருந்து மீளநோக்கும் பொழுது ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வரலாற்றுப் பணி நிறைவேற்றப்படாது கிடக்கின்றது.
திராவிட இயக்க வரலாற்றின் சமூகப் பின்புலத்தை நோக்கும்பொழுது, திராவிட இயக்கம் என்பது பிராமணரல்லாத சமூகங்களினது அவற்றின் அதிகாரப் படிநிலை வைப்பு முறையை (hierarchical order) மீறாது அமைந்த படிப்படியான அரசியல் சமூகச் செயற்பாடு வீச்சுகளுக்கு உதவி அவற்றை அவற்றின் மேல்நிலை அசைவியக்கத்துக்கு (upward social mobility) உதவியுள்ளது என்பது நன்கு புலனாகின்றது. இந்த மேல்நிலை அசைவியக்கத்துக்கான செயற்பாட்டு வீச்சு அதிகரித்தபொழுது, மேற்கிளம்பும் சாதியினருக்கு நேரடியாக மேலேயுள்ள சாதியினர் அதனை எதிர்ப்பது ஒரு வரலாற்றுண்மையாகும். எடுத்துக்காட்டாக நாடார்கள் மேனிலையாக்கம்; இலங்கையில் மாவிட்டபுரத்தில் நடந்த போராட்டம் (1968).
திராவிட இயக்கச் செல்வாக்கால் ஏற்பட்ட இந்த மேனிலையாக்கம் தமிழ்நாட்டின் இடைநிலைச் சாதிகளோடு நின்றுவிட்டது போலத் தெரிகிறது. பெரியார் பற்றிய மீள்வாசிப்பிற்கூட, பெரியார் தாழ்த்தப்பட்டவர்களை இயக்கமாக்குவதிலும் போராடச் செய்வதிலும் போதிய முனைப்புக் காட்டவில்லை என்றும் பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஓரளவு நியாயமானது இதுவே எனத் தோன்றுகின்றது என்றும் குறைந்த பட்சம் 1954க்குப் பிறகாவது அவர் தாழ்த்தப்பட்டவர் எழுச்சியில் கவனத்தைக் குவித்திருக்கலாமே என்று தோன்றுவது இயல்பு என்றும் (ராஜன் குறை, பெரியாரியம், நிறப்பிரிகைக் கட்டுரைகள், கோவை, 1995, ப.25) கூறப்படுவதை மனங்கொள்வது அவசியமாகின்றது. தனது கட்டுரையில் இந்த மனப்பதிவுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவையல்ல என்று ராஜன் குறை வாதிடுவதை இங்குக் குறிப்பிடல் வேண்டும். ஆனால் ஒரு மேலோட்டமான மனப்பதிவில் இக்கருத்து ஆழமான இடம் பெறுகின்றது என்பதை மறுக்க முடியாது. இதே கட்டுரைத் தொகுதியில் வரும் கேசவன் கட்டுரையினையும் நோக்குக.
இவ்வாறு நோக்கும்பொழுது தலித் இயக்கம் என்பது, அனைத்திந்திய இயக்கமொன்றினது தமிழ்நாடு நிலைப்பட்ட விஸ்தரிப்பு என்பதனை ஒத்துக்கொள்ளவே வேண்டியுள்ளது. 'தலித்' என்ற சொற் பயன்பாட்டினையும் நோக்கல் வேண்டும். இது ஒரு மராட்டியச் சொல். 'தமிழர்' என்ற கருதுகோள் பற்றிய தலித் கண்ணோட்டங்கள் சில (அவர்களிற் சிலர் அதனை மறதலிக்கின்றனர்) இதனைக் காட்டி நிற்கின்றன. தலித் முன்னேற்றத்தினை ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசியத்தின் ஓரங்கமாக்கல் வேண்டுமென்ற அரசியல் நிலைப்பாடுகளின் முக்கியத்துவத்தையும் நாம் இங்கு உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
பார்ப்பனீயத்தை மறுதலித்துத் தோன்றிய திராவிட இயக்கம், திராவிடப் பண்பாடு அதன் கருத்து முன் வைப்புக்களில், 'ஆரிய' நாகரிகச் சாதனைகள் என்று கொள்ளப்படுவனவற்றுக்கு மாறாகத் திராவிட/தமிழ்ச் சாதனைகளை (இலக்கியம் முதலான) முன்வைப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் அந்த வட்டத்துக்குக் கீழே சென்று, தமிழ் நாட்டின் ஒட்டு மொத்தமான சனநாயகமயவாக்கத்துக்கான கருத்துநிலைக் கூர்மையை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. சனநாயக மயப்பாட்டு வழி வரும் ஒருமைப்பாட்டைக் குறியீடு செய்யும் வகையில் அரசியல், சமூகச் சின்னங்கள் அமைவது அவசியம். இது சமூக சனமயவாக்கத்தின் தவிர்க்கப்பட முடியாத நியதியாகும்.
14
திராவிடக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி நோக்கும் இம்முயற்சியில், முக்கிய இடம் பெறவேண்டியது, கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவரும் 'பெரியார் மீள்கண்டுபிடிப்பு'ச் செயற்பாடு ஆகும்.
ஆனைமுத்துத் தொடங்கிய மார்க்žய-பெரியாரியக் கட்சியின் தொழிற்பாடுகள், வட இந்தியாவில், குறிப்பாக மத்திய இந்தியாவிற் சாதி எதிர்ப்புக் கிளர்ச்சிகளின்பொழுது பெரியாரின் சேவை முக்கியத்துவம் கணிக்கப்பட்டவை போன்றவை எண்பதுகளிலே நடைபெற்றுக்கொண்டிருந்தவெனினும், 1990 களின் தொடக்கக் காலம் முதல், தமிழ்நாட்டின் இளம் புலமையாளர் மத்தியிலே, பெரியாரின் கொள்கைகளை மீள்கண்டுபிடிப்பதற்கும், அவற்றினைச் சமகாலத் தமிழ் நாட்டின் சமூக-அரசியற் போக்குக்களை விளக்குவதற்குப் பயன்படுத்துவதற்குமான ஒரு முயற்சி காணப்படுகின்றது. நிறப்பிரிகைக் குழுவினர் என்று இனங்காணப்படும் அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ. வேல்சாமி (பெரியாரியம், நிறப் பிரிகை, கோவை, 1994) ஆகியோரைக் குறிப்பிடும் அதே வேளையில், பெரியார் பற்றி அண்மையில் ஒரு விரிவான நூல் எழுதியுள்ள எஸ்.வி.ராஜதுரை, வி.கீதா (பெரியார், சென்னை 1996) போன்றோரையும் குறிப்பிடல் வேண்டும். இவர்கள் மாத்திரமல்லாமல் கோவை ஞானி போன்றவர்களும் (தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள், கோவை, 1994) பெரியார் பற்றிய மீளாய்வினை வற்புறுத்தியுள்ளனர். தமிழ் நாட்டின் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு பெரியார் பற்றிய மீள்வாசிப்பு, மீள்கண்டுபிடிப்பு அவசியம் என்பதை ஒத்துக் கொள்கின்றன (ப. மாணிக்கம், ரா. நல்லகண்ணு ஆகியோருடன் நேரடி உரையாடல்).
பெரியாரியக் கண்டுபிடிப்பை முதன்மைப்படுத்துகின்ற அதே வேளையில், பெரியார் மீது அரசியற் பழி சுமத்தும் ஒரு சிந்தனைப் போக்கும் இல்லாமலில்லை என்பதைக் குணாவின் 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' (1995) என்கின்ற நூல் காட்டுகின்றது.
பெரியாரை ஒரு முக்கிய எதிர்க்கலாசாரச் சக்தியாக மீள் கண்டுபிடிப்புச் செய்யும் முயற்சி அரசியல் சமூக முக்கியத்துவமுடையதாகம்.