03-02-2006, 11:57 AM
shanmuhi Wrote:சென்ற கிழமை கணனியை (window xp) ரி இன்சொல்ட் செய்த பிறகு நேற்றிலிருந்து எந்தப்பக்கத்துக்கு போனாலும் இப்படி வருகிறது.
<img src='http://img219.imageshack.us/img219/9035/fehler2hu9sz.jpg' border='0' alt='user posted image'>
அத்தோடு nachrichten dienst என்று விளம்பரம் வேறு வருகிறது.
<b>இதற்கு என்ன செய்யலாம். தெரிந்தவர்கள் வழி மொழிவார்களா???</b>
வணக்கம் சண்முகி அக்கா...
"server is ausgelastet" என்று வருவதற்கு காரணங்கள் பல உண்டு. நான்அறிந்த வரையில் இணைய இணைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையாகத்தான் இருக்கவேண்டும்.
Nachrichtendienste (message service) என்பது உங்கள் windows இயங்குதளத்தில் உள்ள ஒரு சேவை. இது கணினிகளுக்கிடையில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. இந்த சேவை திறந்தநிலையில் இருப்பதால் - உங்கள் கணினியின் IP முகவரியைத் தெரிந்துகொள்கிற வேறு கணினிகள் - விளம்பரங்களை அனுப்புகின்றன. இதனை நீங்கள் நிறுத்திவைக்கலாம்.
1. Start (Start)> Ausfuehren (Run) என்பதை அழுத்துங்கள்
2. அதில் services.msc என்கிற கட்டளையை இட்டு OK என்பதை அழுத்துங்கள்.
3. இப்போது உங்கள் இயங்குதளம் வழங்கும் சேவைகள் பட்டியலிடப்பட்ட ஒரு சாளரம் திறக்கும்.
4. அதில் பாருங்கள் Nachrichtendienst (Message service) என்கிற சேவையும் இருக்கும்.
5. அதில் வலது பக்க Mouse button அழுத்தி Eigenschaften (Properties) என்பதை தெரிவு செய்யுங்கள்
6. இப்போது இன்னொரு சாளரம் திறக்கும்.
7. அதில் பாருங்கள் Starttyp என்று ஒன்று இருக்கும். அதனருகில் தெரிவு செய்வதற்கான பெட்டியொன்று இருக்கும். அதில் Deaktiviert என்பதை தெரிவு செய்யுங்கள்.
இனி இந்த Nachrichtendienst பிரச்சனை வராது.

