Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணையத்தில் கடன்அட்டைத் திருட்டு!!
#7
Quote:துரை என்பவர் 'ஒன்லைன்' வசதியைப் பாவித்து, மென்வலையூடாக தனது வங்கியில் தொடர்பை மேற்கொள்கிறார். முதற்தடவை துரை தனது கணக்கை 'ஒன்லைன்'ல் ஆரம்பிக்கும்போது தனது பிரத்தியேக தகவல்கள் அனைத்தையும், வங்கிக் கடனட்டை இலக்கம், முடியும் காலம் போன்ற அனைத்தையும் 'ஒன்லைன்' பத்திரத்தில் நிரப்புகிறார். இவை அனைத்தும் தங்களுக்குக் கிடைத்து, எல்லாம் சரியாக இருப்பதாக அந்த வங்கியிலிருந்து, துரையின் ஈமெயில் முகவரிக்கு ஒரு பதிலும் வருகிறது. வங்கி அனுப்பிய பதிலைப் பார்த்து, துரை திருப்தியடைகிறார். அன்றிலிருந்து துரை தனது வங்கியுடன் அவ்வப்போது 'ஒன்லைன்' தொடர்பில், பணப்பரிமாற்றம் உட்பட, ஏனைய நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துவது மற்றும் இதர அனைத்து வங்கி முகாமைத்துவ அலுவல்களையும் மேற்கொள்கிறார்.

இந்த விடயங்களில் எந்தத் தவறும் இல்லை. எந்தப் பாதிப்பும் இதுவரை துரைக்கு ஏற்படவில்லை. துரை மேற்கொண்ட இந்த 'ஒன்லைன்' தொடர்புகளிலும், தகவல் பரிமாற்றத்திலும் ஆபத்து எதுவும் இல்லை. அனைத்தும் சரியாகவும் பாதுகாப்பாகவுமே செய்யப்பட்டுள்ளன.

எல்லாம் இலகுவாக வெற்றியாக பாதுகாப்பாக நடைபெறுவதையிட்டு துரை மகிழ்ச்சியுடன் இருக்கிறார். வழமைபோன்று துரை தனது ஈமெயில்களைப் பார்வையிடுகிறார். வங்கியிலிருந்து ஒரு ஈமெயில் வந்திருக்கிறது. ஏனைய ஈமெயில்களைப் போன்று இந்த ஈமெயிலையும் திறக்கிறார் துரை. வங்கியிலிருந்து வந்துள்ள இந்த ஈமெயிலில், நட்புடன் கூடிய ஒரு அவசர அழைப்பு. என்ன அது? நண்பர் துரை அவர்களே, தங்களது பிரத்தியேக தகவல்களை நாம் மீள உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம். இன்னும் 5 நாட்களுக்குள் தங்கள் தகவல்களை கீழுள்ள கட்டங்களில் நிறைத்து ஈமெயில் பண்ணவும். 5 நாட்களுக்குள் ஈமெயில் மூலம் பதில் தரத் தவறினால், தங்கள் 'ஒன்லைன்' வங்கிச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். இவ்வாறு அந்த ஈமெயிலில் கோரப்பட்டிருக்கும்.

மிக இலகுவாக 'ஒன்லைன்' சேவையைப் பாவித்துக்கொண்டிக்கும் துரைக்கு, இந்த இடைநிறுத்தம் பெரும் சிரமமான ஒன்றாக அமைந்துவிடலாம் என்பதால், துரை உடனடியாகவே அந்த ஈமெயில் மூலம் அனைத்து விபரங்களையும் பதில் ஈமெயிலாக அனுப்புகிறார்.


நான்குவாரங்களுக்கு முன் இது போன்ற ஈமெயில் எனது வாடிக்கை வங்கியின் பெயரில்(Citi Bank)எனக்கும் வந்தது. இப்படி வங்கி கடனட்டைக்கு நடப்பது போல் இணையத்தின் ஊடாக நாளாந்த பணபரிமாற்றங்களுக்காக தரப்பட்டு இருக்கும் TAN எனப்படும் இலக்கங்களில் 10 இலக்கத்தை என்னிடம் கோரியிருந்தார்கள்.நான் வங்கியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை கேட்டபோது தங்களுக்கும் அந்த ஈமெயிலுக்கும் தொடர்பு இல்லை என்றும் அதற்கு பதில் அளிக்கவேண்டாம் என்றார்கள். இப்படியான ஈமெயில் வந்தால் உடன் உங்கள் வங்கியுடன் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்வதே நல்லது.
" "
Reply


Messages In This Thread
[No subject] - by அருவி - 02-28-2006, 11:12 PM
[No subject] - by Vasampu - 02-28-2006, 11:12 PM
[No subject] - by AJeevan - 02-28-2006, 11:35 PM
[No subject] - by KULAKADDAN - 03-01-2006, 08:54 PM
[No subject] - by வினித் - 03-01-2006, 09:30 PM
[No subject] - by sri - 03-02-2006, 09:37 AM
[No subject] - by AJeevan - 03-02-2006, 10:11 AM
[No subject] - by Jenany - 03-02-2006, 03:51 PM
[No subject] - by ப்ரியசகி - 03-02-2006, 07:55 PM
[No subject] - by samsan - 03-03-2006, 01:39 AM
[No subject] - by iniyaval - 03-03-2006, 04:52 PM
[No subject] - by RaMa - 03-04-2006, 06:01 AM
[No subject] - by வர்ணன் - 03-04-2006, 07:34 AM
[No subject] - by Rasikai - 03-06-2006, 04:58 PM
[No subject] - by Niththila - 03-06-2006, 05:09 PM
[No subject] - by stalin - 03-06-2006, 08:36 PM
[No subject] - by வர்ணன் - 03-08-2006, 05:26 AM
[No subject] - by Niththila - 03-08-2006, 03:33 PM
[No subject] - by Danklas - 03-08-2006, 06:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)