03-02-2006, 09:24 AM
RaMa Wrote:சிநேகிதி இன்று தான் உங்கள் கதை படித்தேன். அழகாக பழைய ஞாபங்களை எல்லாம் வரவழைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
பழைய ஞாபங்கள் எல்லாம் வருகின்றன.
நாமும் அப்பாவுடன் முற்றத்தில் இருந்து வானத்தை பார்த்து கதைப்போம்.
அப்பா அங்கை பார் அது இது என்று சொல்ல சும்மா சும்மா ஒம் ஒம் என்று சொல்லுவோம்.
ஆமாம் வெள்ளி ஒன்றை உதிர்ந்து விழுவதை கண்டால் உடனே பால் உள்ள மரங்களை நினைக்க வேண்டும் என்று சொல்வார்கள். உங்களுக்கு அப்படி எதாவது அனுபவம் உண்டா?
ஆமாம் ரமா
அப்போது "பாலுள்ள மரத்திலே பட்டு விழு" என்று சொல்லவேண்டும் என்று அம்மா அன்று சொல்லித்தந்தது இன்று உங்கள் வரிகளைப் பார்த்ததும்தான் நினைவுக்கு வந்தது. ஏனென்று தெரியாமல் அப்படிப் பலமுறை சொல்லியிருக்கின்றேன்.
அதிகாலையில் எழுந்து விடிவெள்ளியைப் பார்ப்பதும் ஆனந்தத்தை தரும்.
இனிக்கும் நினைவலைகளைத் தட்டியெழுப்பிய அனைவருக்கும் என் நன்றிகள்

