03-01-2006, 02:32 PM
வலைப்பதிவுகள் பற்றி தெரிந்திருப்பீர்கள். நந்தன் என்பவருடைய வலைப்பதிவில் தமிழக இளைய சமுதாயப்பார்வையில் தமிழீழம் என்ற தலைப்பில் அவர் சில கருத்துக்களை எழுதியுள்ளார். சில விடயங்களை தெளிவாய்ச் சுட்டிக்காட்டினாலும் ஆயுதப்போராட்டம் குறித்தும், அதன் தேவை குறித்தும் மாறுபாடான கருத்துக்களை கொண்டிருக்கின்றார். (இறுதியில் இவை தனது அறியாமையின் கேள்விகள் என்பதனையும் ஏற்றுக்கொள்கிறார்) இந்த அவரது பதிவு தமிழகத்தை சேர்ந்த ஒரு இளைய சமுதாயப் பிரஜை தமிழீழம் பற்றி கொண்டிருக்கும் எண்ணங்களை எடுத்து சொல்கிறது. இந்தப் பதிவுக்கு வந்த எதிர்வினைகளையும் இணைக்கின்றேன்..
தமிழக இளைய சமுதாயத்தின் பார்வையில் தமிழீழம்.
"எழுந்திருடா ராஜீவ்காந்திய சுட்டுடாங்களாம்" என என் அம்மா எழுப்பிய ஒரு வெயிற்கால விடியல் தான் எனக்கு இலங்கை தமிழ் பிரச்சனை பற்றிய
முதல் ஞாபகம்.
என்னைப்போல பலர், குறிப்பாய் 1980களிலோ அதற்கு பிறகோ பிறந்தவர்களிடம் கேட்டு பாருங்கள், எங்களின் அறியாமை தெரியவரும். இஸ்ரேல் பாலஸ்தீனம் பற்றி அறிந்த அளவுகூட இலங்கை பிரச்சனை குறித்து அறிந்திருக்க மாட்டோம். ஏன்?
1. என்னதான் காரணம் சொன்னாலும் ராஜீவின் கோர கொலை புலிகளின் மிகப்பெரிய அரசியல் தவறு. அந்த கொடூரமும், அது தமிழ் மன்னில்
நடந்ததும் எங்கள் மனதில் அகல முடியாத ஒரு பதிவு.
2. இதையே காரணம் காட்டி, IPKF மூலம் கையை சுட்டுக்கொண்ட இந்திய அரசு இந்த பிரச்சனையை கைக்கழுவியது. இலங்கை செய்திகள்
இருட்டடிப்பு செய்ய பட்டன, அல்லது திரித்து கூறப்பட்டன.
15 வருட மூளைச்சலவை - பயன் இப்போது பார்கிறோம்.
இது எல்லாருக்கும் தெரிந்ததுதான், ஆனால் இதன் நீண்ட கால விளைவுகள் மிகவும் கலவரப்படுத்துபவை. இதோ இன்னுமொரு பேச்சு வார்த்தை, JVP எதிர்ப்பு என முடிவில்லாமல் தொடரும் இந்த பிரச்சனை இப்போதைய
தலைவர்களின் கையால் தீர்க்கபடும் என்பதற்கு ஒரு நல்ல நம்பிக்கையில்லை. இந்தியாவோ (அ) உலக நாடுகளின் உதவியோ இல்லாமல் இப்பிரச்சனை தீர்வது மிகவும் கடினம்.
அப்படியிருக்க, முடிவெடுக்க வேண்டிய அடுத்த தலைமுறை Decission Makers அறியாமல் இருப்பது நல்லதா? நாங்கள் பாதிக்க படாதவர்கள்,
உங்களுக்கு உதவ நாங்கள் தமிழர்கள் என்ற அடையாளம் மட்டும் போதாது அதுவும் அந்த அடையாளமே இப்போது அழிக்கபட்டு வரும்
இவ்வேளையில். உங்களின் வலி உணர்ந்தால் மட்டுமே எங்களின் சிந்தனை மாறும். எப்படி ?
உங்களை பற்றிய உண்மைகளை நிறைய ஆவணப்படுத்துங்கள். இனைய உலகின் இந்நேரத்தில் இந்திய அரசின் "மீடியா" ஒரு சிறு துளி. அதை
தாண்டி நீங்கள் கேட்க பட வேண்டும். குறும் படங்கள், வலைப்பதிவுகள், இனைய இதழ்கள், ஒரு சில தமிழ்/இந்திய இதழ்கள் (உண்மை சொல்பவை)
என எல்லாவற்றிலும் எழுதுங்கள். கவனம் - உண்மையை மட்டுமே எழுதுங்கள்...தவறுகள் உங்களுடையதாய் இருந்தாலும் 'அது ஒரு துன்பியல்' என நழுவாதீர். தன் தவறை மறைக்காதவன் வார்த்தைகளில் உண்மை அதிகமாய் இருக்கும் என்பது ஊர் அறியும்
அனைவரும் யுத்ததை வெறுக்கிறார்கள். அயுதம் தாங்கி நீங்கள் என்ன தான் உரக்க உண்மை பேசினாலும் ஆயுதத்தின் சத்தம் அதை கேட்கவிடாது. அதற்காக அடிப்பதை வாங்குங்கள் என கூற வில்லை. ஆரம்பிக்காதீர். குறைந்தபட்ச, எதிர் தாக்குதல் மட்டும் போதுமே. அவற்றையும் உலகம்
அறியவிடுங்கள். இண்டர்னேஷனல் மீடியாவிற்கு உங்கள் பிரதேசங்களை திரந்து விடுங்கள்.
யுத்தம் மக்களை புலம் பெயர்த்து விடுகிறது. எல்லாரும் போனபின் யாருக்காக சண்டை? மனிதர்கள் இல்லாத ஈடுகாட்டிற்கு தமிழீழம் என பெயர் வைத்து என்ன லாபம்? ஆய்த போராட்டதை விடுத்து மக்களின் போராட்டமாக இது மாற வேண்டியதை உணரவில்லையா நீங்கள்?
You should now have a two pronged approach. Short term one - to protect yourself incase of military oppression, Long term one to mould international opinion. இரண்டவதால் மட்டுமே தீர்வு ஏற்படும். முதலாவது ஒரு Stop gap மட்டுமே.
இவை என்னுடைய, மற்றும் என் நன்பர்களின் எண்ணங்கள்...Given the fact they are from a varying background, I am convinced that this would be the
general opinion in a large sample size also.
கன்னத்தில் முத்தமிட்டால் என ஒரு படம் வந்தது...சென்னையில் மிகவும் 'happening' தியேட்டரில் இரண்டுமுறை அதை பார்த்தபோது ஒரு
ஆச்சரியமான விஷயத்தை கவனித்தேன். படம் முடிந்தபின்னும் அந்த பாதிப்பில் நிறைய இளைஞர்கள் சிலையாய் சமைந்திருந்தனர். குறிப்பாய் சில பெண்கள் அழுவதை கூட என் நன்பன் எனக்கு காட்டினான். நம்புங்கள், கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை பயன் படுத்தாமல் இருப்பது உங்களுக்கே நஷ்டம்.
நாளை நல்லதாய் இருக்கட்டும்!

, ...