02-28-2006, 08:53 PM
நர்மதா Wrote:மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)
ஆறு ஓடும் போது அரிக்கப்படும் மணல் ஏதும் தடங்கல் ஏற்படும் போது தேங்கி ஆற்றில் சில இடங்களில் திட்டு போல தோன்றும் . உண்மையில் அது உறுதியற்ற குவியல்/குதிர் . அதை நம்பி, அதாவது ஆற்றின் இடையே திட்டுக்கள் இருக்கிறது என அதை நம்பி காலை வைக்க முடியாது அது ஒருவரை தங்கும் தன்மையற்றது. அதில் நம்பி காலை வைத்தால் அவர் ஆற்றுடன் அடித்துசெல்லப்பட கூடிய சாத்தியம் உண்டு. அதையே அவ்வாறு
மண் குதிர் ஐ நம்பி ஆற்றில் இறங்காதே என்பர்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

