02-27-2006, 11:22 PM
வணக்கம் உறவுகளே மீண்டும் நிண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி
சில காலங்களிற்கு முன்பு யெர்மனியிலிருந்து சாந்தி ரமேஸ் என்பவர் தினக்குரலுக்கு புலத்தில் பட்டங்கள் படும்பாடு என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.அந்த கட்டுரையின் யதார்த்தம் இருந்தபடியால் நானும் அதை யாழ்களத்தில் இதே பகுதியில் இணைத்து எனது கருத்தையும் இணைத்திருந்தேன்.
பலரும் படித்திருப்பீர்கள். பொதுவாக பட்டங்களிற்காக அலைபவர்களை பற்றி விளாசி வீசியெறிந்த அந்த தொப்பியை யெர்மனியில் இருக்கும் பல பட்டங்கள் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் இருவர் தங்கள் தலையி்ல் தூக்கிபோட்டுகொண்டு குட்டிகரணம் அடித்து கொண்டிருக்கிறார்கள்.
அது ஒருபக்கமிருக்கட்டும் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் தாங்கள் புலத்தில் கொட்டும் பனியிலும் கடும் குளிரிலும் தமிழிற்காகவும் தேசத்திற்காகவும் எவ்வளவோ சிரமப்பட்டு எழுதுபவர்களாம் அதற்கு தாங்கள் பட்டங்கள் வாங்குவதில் என்ன தவறு என்கிறார்.
பட்டங்கள் வாங்குவது தவறு அல்ல அதை தவறான பாதையில் பெறுவதே தவறு அதைவிட அந்த பட்டங்களை பெறுவதற்கு அவர்கள் தருகிற விளக்கங்கள் எனக்கு விழங்காமல் இருக்கிறது. கொட்டும் பனியில் கஸ்ரபட்டு எழுதினமாம். ஏன் கொட்டும் பனியில் நின்று எழுத வேண்டும் வீட்டில் நன்றாக கதைவை பூட்டிவிட்டு சூடுஏற சூடாக்கியை போட்டுவிட்டு அப்பிடியும் குளிர்ந்தால் பட்டங்கள் வாங்கும் போது போர்த்திய பட்டாடைகள் சிலவற்றை எடுத்து போர்த்திகொண்டு படுத்திருந்து வடிவா எழுதலாமே?
தங்களிற்கு தாங்களே பட்டங்கள் குடுப்பதும் ஆளுக்கொரு பட்டாடை வாங்கி போத்து படமெடுத்து கொள்வதும் அதைவிட ஒவ்வொரு மேடையிலும் ஏதோ பழைய அரசர் காலத்தில் அரசர் வரும்போது கட்டியம் கூறுவது போல ராசாதி ராச ராச மாத்தாண்ட ராச கம்பீர என்பது போல நீளமாக அவர்களது பட்டங்களை சொல்லி அழைப்பதும் அந்த நபர் மேடையில் வந்ததும் மேடையில் அதுவரை அவரது பட்டங்களை மூச்சு விடாமல் சொல்லி களைத்துபோய் மூச்செடுத்து கொண்டிருப்பவருக்கு நன்றி சொல்வதும் என்ன வேடிக்கை.
சரி அதை விடுவோம் இதிலே அரங்கங்களிற்கு தலைமை தாங்க வரும் சில கவி ராயர்களோ தாங்களே ஒருகவிதையை எழுதி அதை தங்களது உறவினர் ஒருவரிடம் கொடுத்து படிக்கசொல்லி அதற்கு முதல் பரிசு குடுக்கும் பரிசு கேடுகளும் இந்த மேதாவிகளால் அரங்கேற்றபடுகின்றன.
அவற்றை யாராவது சுட்டி காட்ட வெளிக்கிட்டால் உடனே தங்கள் பதவி பட்ட ஆசைகளை பொன்னாடைகளால் போர்த்தி பழக்கபட்டவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள தமிழர் தேசியத்தால் தங்களை போர்த்திக்கொள் தொடங்குகின்றனர். பசுத்தோல் போர்த்த புலி என்று கேள்வி பட்டிருப்பீர்கள் இவர்களோ புலித்தோல் போர்த்த நரிகள்

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/