02-27-2006, 10:10 PM
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. வழக்கு!
[திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2006, 19:16 ஈழம்] [ச.விமலராஜா]
<b>இலங்கையில் அமுலில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் செல்லாது என்று கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்ட இந்த ஒப்பந்தம் சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு எதிரானது என்றும் அம்மனுவில் ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்டோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகத்தின் ஊடாக இந்த வழக்கின் தாக்கீதை அனுப்பி வைக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை மார்ச் 29 ஆம் நாள் நடைபெற உள்ளது</b>
நன்றி:புதினம்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>