02-26-2006, 11:52 PM
இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?
* இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டர் இழுதில் சோலை என்பவர் எழுதிய கட்டுரை
* அமெரிக்கா அமைக்கும் ஆயுத வலைப்பின்னல் இந்தியாவுக்கும் ஆபத்தானதாகலாம்
மீண்டும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக, ஊமை மனிதர்களாக இராமேஸ்வரம் வரத் தொடங்கிவிட்டனர். இப்போது ஈழம் அமைதியாகத்தானே இருக்கிறது? ஏன் புலம் பெயர்ந்து வருகிறீர்கள்? என்று இங்குள்ளவர்கள் விசாரிக்கிறார்கள்.
`இப்போது போர் மூளவில்லைத்தான். ஆனால், போர்ச் சூழலை சிங்கள இராணுவம் வெகு வேகமாக உருவாக்கி வருகிறது. ஆங்காங்கே தமிழ் இளைஞர்களை சிங்கள இராணுவம் பிடித்துச் செல்கிறது. பலர் வீடு திரும்புவதேயில்லை. பாடசாலைகளை மூடுகிறார்கள். மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் எப்போதுமே ஆபத்தில்தான் இருக்கிறார்கள். பிள்ளைகளையாவது படிக்க வைக்க வேண்டும் என்றுதான் இரவோடு இரவாக இங்கு வருகிறோம்' என்று அவர்கள் சோகத்தைப் பிழிகிறார்கள்.
இன்னொரு பக்கம் ஈழப் போராளிகளுக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் பாடுபடுகிற பலர், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலைகார முகமூடி மனிதர்கள் யார் என்பது சிங்கள இராணுவத்துக்குத் தெரியும். அவர்கள் எந்தக் கூண்டிற்குள் இருந்து திறந்து விடப்படுகிறார்கள் என்பது ஈழத்து மக்களுக்குத் தெரியும்.
ஈழப் போராளிகளுக்கு எதிராக ஏற்கனவே இலங்கை அரசும் இராணுவமும் சில குழுக்களை உருவாக்கின. இப்போது இன்னொரு குழுவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட குழுக்கள் முடமாகிவிட்டன. புதிய குழு மட்டும் தீட்டிய மரத்தையே பதம் பார்க்கத் துடிக்கிறது.
அந்தக் குழு எங்கிருந்து செயற்படுகிறது என்று கேட்டால், `அப்படி ஒரு குழு இருக்கிறதா?' என்று இலங்கை அரசு திரும்பக் கேட்கிறது. `இரைபோடும் மனிதனுக்குப் பருந்தை அடையாளம் தெரியவில்லை' என்று சொன்னால் யார் நம்புவார்கள்?
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் `கருணா குழு எங்கிருக்கிறது?' என்று இலங்கை அரசைக் கேட்டார். சாமி சத்தியமாய் தங்களுக்குத் தெரியாது என்று புத்தர்மீது அரசு சத்தியம் செய்தது.
ஆனால், கிழக்கு மாகாணத்துக்கு அவர் சென்றார். `கருணா குழு எங்கிருக்கிறது?' என்று இலங்கை இராணுவத்தைக் கேட்டார். சரியான பாதையை இராணுவம் தெளிவாக அடையாளம் காட்டியது. அங்கே எப்படிப் போகவேண்டும் என்றும் கூறியது.
ஆயுதம் ஏந்திய சிறிய சிறிய குழுக்களைக் கலைக்க வேண்டும் என்பது போர் நிறுத்த உடன்பாட்டின் ஓர் அம்சமாகும். ஆனால், அப்படி எந்தக் குழுவையும் இலங்கை அரசோ, இராணுவமோ கலைக்கவில்லை. அதற்கு மாறாக, நொண்டிகளுக்குத் தீனி போட்டு வளர்க்கின்றன. இதயத்தை இழந்துவிட்ட இன்னொரு தமிழனே, ஈழத் தமிழனைப் படுகொலை செய்ய வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். வாடகை மனிதர்களுக்கு வீரம் என்பது எள் முனை அளவும் இருக்காது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. சர்வ ஆயுதங்களையும் தரித்த இலங்கை இராணுவம் சாதிக்க முடியாததை இந்தச் சப்பாணிகளா சாதிக்க முடியும்?
இலங்கை இராணுவம் தர்மக்கோடுகளை தார்பூசி அழித்துவிட்டது. போர் நிறுத்த உடன்பாட்டை மதிப்பதே இல்லை. சப்பாத்துக் கால்களால் மிதிக்கிறது. இதனை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறிவிட்டனர்.
அந்த அரசு என்ன செய்கிறது? பாராளுமன்றத்தை ஈழப் போராளிகள் தாக்குகிறார்கள் என்று கூட்டத்தையே தள்ளி வைத்துவிட்டது. பரிதாபம், கண்ணாடியில் தெரிகிற தங்கள் உருவங்களைப் பார்த்தே கிலி கொள்கிறார்கள்.
வட, கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் வன்முறைகளை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அங்கே போர் நிறுத்த உடன்பாட்டைச் சீர்குலைக்கின்ற சக்திகளை அடக்க வேண்டும். இல்லையெனில், மீண்டும் போர் மூள்வதைத் தடுக்க முடியாது என்று கண்காணிப்புக் குழுப் பேச்சாளர் எச்சரித்திருக்கிறார்.
இன்றைக்கு இலங்கை எரிமலையின் முகட்டில் அமர்ந்திருப்பதற்கு இலங்கை இராணுவமும் அந்த இராணுவம் தயார்படுத்தும் சிற்சில குழுக்களும்தான் காரணம் என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கூறுகிறது.
இன்றுவரை, ஈழப் போராளிகளை அந்தக் குழு குற்றம் சாட்டவில்லை. தங்கள்மீது பழி படிந்துவிடக் கூடாது என்பதற்காக, துரோகிகளின் தாக்குதலையும் போராளிகள் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையைப் போர் விளிம்பில் நிறுத்தியவர்களை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று இராணுவமும் பொலிஸும் கூறுகிறது. அவர்களே வளர்த்த நாகபாம்புகளை அவர்களுக்கே அடையாளம் தெரியவில்லை என்பதனை உலகம் நம்பத் தயாராக இல்லை.
ஒருபக்கம், `பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று இலங்கை அரசு கூறுகிறது. இன்னொரு பக்கம், `போர் நிறுத்த உடன்பாடு மனநிறைவு அளிக்கவில்லை' என்று சிங்கள இனவாத அமைச்சர்கள் கூறுகிறார்கள். இவர்கள் சமரசத்திற்கும் தயாராக இல்லை. இவர்களுடைய இராணுவம் போருக்கும் தயாராகவில்லை. தனித்தனியாக இயங்கும் சில தமிழ்க் குழுக்களை ஏவிவிட்டே ஈழப் போராளிகளை அழித்துவிடலாம் என்று தவறாகக் கணக்குப் போடுகிறார்கள்.
போர்நிறுத்த உடன்பாட்டுக்குப் பின்னர் தொடர்ந்து ஈழ மக்களும் போராளிகளும் தான் தாக்கப்படுகிறார்கள். கடற்பரப்பில் தங்கள் சக்தி என்ன? வான்வெளியில் தங்கள் வல்லமை என்ன? என்பதனை போராளிகள் மெய்ப்பித்த பின்னர், உடன்பாட்டை ஈழம் ஏற்றுக்கொண்டது. தோல்வி முனையில் நின்று உடன்பாட்டுக்குத் தலை அசைக்கவில்லை.
இராணுவமும் அதன் பொம்மைக் குழுக்களும், அவ்வப்போது சீண்டுவதைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கவனத்துக்கு ஈழப் போராளிகள் கொண்டு வருகிறார்கள். அதனை அந்தக் குழு இலங்கை அரசிடம் கேட்கிறது. அந்த அரசோ எரிச்சல் கொள்கிறது. இப்போது நோர்வே மீதே நம்பிக்கை இல்லை. `போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தேவையில்லை' என்று சிங்கள இனவாதிகள் சீறுகிறார்கள்.
அதே சமயத்தில், நோர்வே மீதோ போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் மீதோ இன்றுவரை இலங்கை அரசு நேரடியாக குற்றம்சாட்டவில்லை. அந்தக் குழு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று இரு தரப்பும் தெரிவித்தால்தான் அந்தக் குழு வெளியேறும். இலங்கை இராணுவத்தின் குட்டிச்சாத்தான் வேலைகளை அந்தக் குழு மூலம்தான் ஈழப் போராளிகள் அம்பலத்துக்குக் கொண்டு வருகிறார்கள்.
இன்றுவரை ஈழப் போராளிகளை போர் நிறுத்தக் குழு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை. ஆனால், இலங்கை இனப்பிரச்சினைக்கு ஈழப் போராளிகள்தான் காரணமென எச்சரிக்கை விடுகிறார் சர்வதேச சட்டாம்பிள்ளை. சர்வதேச கசாப்புக் கடைக்காரர் சைவம் பேசுகிறார்.
ஈழத்து மக்களையும் போராளிகளையும் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் இப்படிக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார். அது அவருடைய வேலை அல்ல. ஆனாலும், தமது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த தமது தூதுவர்களையே அமெரிக்கா ஏவிவிடுகிறது.
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதுவர். மத்திய அரசையே எச்சரிக்கிறார். எந்தப் பிரச்சினையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறார். இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவரோ ஈழத்து மக்களின் உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார். நரிகள் நாட்டாண்மை செய்கின்றன.
திருகோணமலையில் தமது இராணுவத் தளத்தை அமைக்கத் தொடர்ந்து அமெரிக்கா முயற்சித்து வருகிறது. அதற்கு எதிராக இருப்பவர்கள் ஈழப் போராளிகள்தான்.
எனவே, சிங்கள இனவாதத்துக்கு ஆதரவாக, ஈழமக்களுக்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுக்கிறது. ஈழப் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா, சிங்கள இராணுவத்துக்கு ஆயுதங்களை அள்ளித் தருகிறது. முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர, நேபாளத்தில் போராடும் மக்களுக்கு எதிராக தமது ஆயுதக் கிடங்கை மன்னருக்காகத் திறந்துவிடுகிறது. இன்றுவரை, இராணுவத்தின் கோரக் கால்களில் விழிபிதுங்கி நிற்கும் மியான்மார் (பர்மா) மக்களுக்கு எதிராக இராணுவத்துக்கு துப்பாக்கிகளைத் தூக்கித் தருகிறது.
அமெரிக்கா நம்மைச் சுற்றி அமைக்கும் இந்த ஆயுத வலைப் பின்னல், ஓர் நாள் இந்தியாவை அச்சுறுத்துவதற்குப் பயன்படும்.
இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?

, ...