02-26-2006, 01:33 PM
கள உறவுகளே.. புலிகளின் அரசியல் ஆலோசகர் ஜெனிவா பேச்சுவார்த்தைகளின் பின்னர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியிலிருந்து ஒரு பகுதியினை கீழே இடுகிறேன். புலிகள் எந்த அளவிற்கு இந்தியாவுடனான உறவை விரும்புகிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி..
இந்தியா எமது தாயகப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள மிகப் பெரிய வல்லரசு. தமிழர் தாயகத்தில் அமைதியும் ஆனந்தமான சுூழ்நிலையும் நிலவினால் தான் இந்தியாவின் ஸ்திரமான நிலைக்கு அது ஏதுவாக அமையும்.
இந்தியா எமது பிரச்சினையில் நீண்ட காலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. சில கால கட்டத்தில் மிகவும் தீவிரமான அக்கறையை காட்டியது. அவர்கள் இராஜதந்திர, அரசியல் ரீதியாகவும் இராணுவ அழுத்தங்கள் மூலமாகவும் அக்கறை காட்டினார்கள். இப்பொழுதும் அவர்கள் அக்கறையோடு தான் செயற்பட்டு வருகின்றனர்.
இந்திய அரசைப் பொறுத்தவரை நோர்வே ஊடாக எமக்கு தரப்படும் தகவல்களைப் பொறுத்தவரை இந்தியா எமக்கு சொல்லியுள்ளது என்னவென்றால், நீங்கள் தொடர்ந்தும் இச் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அரசியல் ரீதியாக ஒரு தீர்வைப் பெற முயற்சி செய்யுங்கள். தமிழ் மக்களுக்கு நாங்கள் உதவியாய் இருப்போம். தமிழர்களின் அபிலாசைகளை ஆதரிப்போம். தமிழர் தாயகத்தில் ஒரு பிரதேச சுயாட்சி ஏற்படுவதை இந்தியா விரும்புகிறது.
இதேவேளை, இந்தியாவின் பங்களிப்பை நாமும் விரும்புகிறோம். ஆனால், இந்தியாவின் இந்த பங்களிப்பு தமிழ் மக்களுக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்கக்கூடிய ஒரு பங்களிப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.
இந்திய அரசுடன் எமக்கு மறைமுகமான தொடர்புகள் இருக்கிறது என்பதை மட்டும் தான் இப்போதைக்கு சொல்லமுடியும் எனவும் பாலசிங்கம் தெரிவித்தார்.
ஆகவே.. ம்... நான் என்ன சொல்வது..?

, ...