02-26-2006, 06:30 AM
tamilini Wrote:Quote:ஒரு கொடுமை தெரியுமா? சத்தம் போடாமல் முகத்தார், சின்னப்பு, உம்மை, மற்றும் என்னை எல்லாம் அரண்மனைக்குள் இழுத்து அறிமுகப்படுத்துவதன் மூலம் ; றோயல்பமிலியை தகர்த்து, ஆண்டிக் கூட்டம் பழைய செல்வாக்கைப் பெறப் பார்க்கின்றது!!
இஞ்ச பாருஞ்க.. தம்பியாற்ற பிதற்றலை.. றோயல் பாமிலி என்றிட்டு.. சின்னாச்சிட்டையும் பொன்ஸ்சிட்டையும் அடிவாங்கிக்கொண்டிருந்த ஆக்கள் கதைக்கினம்.. ம் ம்
எப்ப பார்த்தாலும் அடிவாங்கினவை, என்று என்று எல்லாம் பிதற்றாதையுங்கோ!! அடி வாங்குவதற்கே ஒரு வீரம் வேண்டும் தெரியுமா? இன்றைக்கும் இந்த வயதிலும் எல்லோரிடமும் சின்னப்பு போய் வாங்கிக் கட்டுகின்றார் என்றால் அது சின்னாச்சியிடம் வாங்கிய அடி கொடுத்த பயிற்சி தான். அப்படித் தான் முகத்தாருக்கும்!!
சும்மா தான் கேட்கின்றேன். உங்களால் ஒரு அடியை வாங்கிவிட்டு கண்ணீர், கோபம் ஒண்டும் வராமல் நிலையாக சிரித்துக் கொண்டு நிற்க இயலுமா? ஆனால் தினமும் செஞ்சரி தாண்டுகின்ற நிலையிலும் அந்த சின்னப்பு, முகத்தார் புன்னகைக்கின்றார்கள் என்றால் அது தான் அவர்களின் உறுதி!!
றோயல் பமிலிக்கு சின்னப்பு, முகத்தார் தான் எப்பவும் பலம் என இச்சந்தர்ப்பத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்
[size=14] ' '


