02-26-2006, 05:24 AM
Quote:ம்.. இரண்டு வகையானோர் எமது போராட்டம் குறித்து தவறான புரிந்துணர்வும் விளக்கமின்றியும் அதனால் தவறான அபிப்பிராயமும் கொண்டு இருக்கின்றனர்.
ஒரு வகையானோர் ஏற்கனவே மனதளவில் புலியெதிர்ப்பை ஏற்படுத்திவிட்டு பின்னர் கதைப்பவர்கள். மற்றொருவகையினர் உண்மையிலேயே தெளிவில்லாமல், (உண்மையில் ஒரு பிறநாட்டைச் சேர்ந்தவரிடம் இயல்பில் அந்த தெளிவை நாம் எதிர்பார்க்க முடியாது.)தமது சந்தேகங்களை முன் வைப்பவர்கள். இரண்டாம் வகையினருக்கு தெளிவு படுத்த வேண்டியது நமது பொறுப்பே. அவர்களது ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஆணித்தரமாக ஆதார புூர்வமாக பதில்களை சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் அவர் எந்தப் பிரிவிஇ சேர்ந்தவர் என்று தெரிந்து விடும். அவர் முதலாமவர் எனில் பேசிப் பயனில்லை. இரண்டாமவர் எனில் சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டும். இங்கே லக்கி லுக் மற்றும் ராஜா ஆகியோர் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களாக இருக்க கூடும் என நான் இந்தக் கணம் வரை நம்புகிறேன். அதனால்த்தான் பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருக்கிறேன்.
கிட்டத்தட்ட எல்லோரும் ஒரு நேர்கோட்டிற்கு வந்து விட்டார்கள் என்று நினைகின்றேன்.
தமிழீழ தமிழர்கள் தமிழீழத்தின் மேலுள்ள அதீத பற்றும் இந்திய தமிழர்கள் இந்தியாவின் மேலுள்ள அதீதபற்றும் ஈழ-இந்திய தமிழர்களின் புரிந்துணர்வின்மையுமே பிரச்சினைகள் என்று நினக்கின்றேன். காவடியின் முயற்சி வெற்றி பெற வேண்டும். தனித்தனியாக இல்லாமல் அடுத்த சுற்றூ பேச்சில் மூன்று தரப்பும் கூட்டறிக்கை விடுமாறு கேட்டு கொள்கிறேன். [இடையில் ஒட்டுக்குழுக்களால் பிரச்சினை வராமல் இருந்தால் சரி.]
<b>குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.</b>
.

