02-25-2006, 06:15 PM
ஊமை தான் முன்பு தன்னைப்பற்றி இங்கு எழுதியவற்றை கீழே தந்திருக்கிறேன். இவர் முன்பு கூறியிருந்தார் தான் ஓர் வறிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் பதினைந்து வயதில் யேர்மனிக்கு வந்ததாகவும். தற்போது கூறுகிறார் தான் ஸ்பொன்சரில் யேர்மனிக்கு வந்ததாக. எனக்கு வறிய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் யேர்மனிக்கு ஸ்பொன்சரில் வந்ததை நம்ப முடியவில்லை. அப்படி இவர் ஸ்பொன்சரில் வந்திருந்தால் இவரை இவருடைய பெற்றோர் அல்லது சகோதரர்கள் மாத்திரமே ஸ்பொன்சர் செய்திருக்க முடியும். அப்படியாயின் இவர் வறிய குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது. அல்லாதுவிடின் இவர் திருமணம் மூலம் வந்திருக்கலாம். ஆனால் அது பதினைந்து வயதில் சாத்தியப்பட்டிருக்காது. இவர் தான் மாத்திரம் தான் யேர்மனியில் இருப்பதாகவும் கூறியிருக்கிறர். அப்படியாயின் யார் இவரை ஸ்பொன்சர் செய்திருப்பார்கள். அத்துடன் இவர் தனக்கு வதிவிட உரிமை பற்றி கவலையில்லை என்றும் கூறியிருக்கிறார். ஏனென்றால் இவருக்கு யேர்மனிய தேசிய இன உரிமை கிடைத்துவிட்டது என்று. இவருக்கு வதிவிட உரிமை இல்லாததால் தான் இவர் அதைப்பற்றி கவலைப்பட்டு இங்கு எழுதியிருப்பார். பின்னர் இவர் எப்படி யேர்மனிக்கு ஸ்பொன்சரில் வந்திருப்பார்.
இவர் கூறியதை கீழுள்ள இணைப்பில் சென்று பார்க்கலாம்....
இவர் கூறியதை கீழுள்ள இணைப்பில் சென்று பார்க்கலாம்....
ஊமை Wrote:Nitharsan Wrote:ஊமையவர்களே! நீங்கள் உங்களை நீங்களே அகதி என்று கீழ்தரமாக எண்ணி கொண்டிருக்கிறீர்கள்.
<b>நிதர்சன் நான் அகதியாக வெளிநாடுவரவில்லை</b>. நான் ஸ்பொன்சரில வந்தேன். இலங்கையில் இருந்து வரும்போதே ஜேர்மனிக்குரிய வதிவிட அனுமதியுடன் தான் வந்தேன். நான் ஒன்றும் திருட்டுதனமாக எல்லைகளுக்கூடாகவோ அல்லது திருட்டுதனமாக விமான நிலையத்தில் கடவுச்சீட்டுக்களை கிழித்துவிட்டோ அகதி அந்தஸ்து கோரவில்லை. அதனால் என்னை அப்படி அகதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டாம்.
ஊமை Wrote:http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&&start=15Quote: உங்கள் நேர்மைக்கு தலைவணங்கிறன்.. ஆனாலும் இடிக்கிறதே.. உங்கடை சகோதரர்கள் தமிழீழ பணி செய்யினம்.. நீங்களோ தமிழீழம் கிடைச்சால் என்னைத் திருப்பி அனுப்பிப் போடுவான்.. எண்டு நினைக்கிறீங்கள்.. அப்ப எப்ப தமிழீழம் கிடைக்க வேணும் எண்டுறியள்..? உங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பிறகா? உழைக்க வந்தேனெண்டுறியள்.. ? அப்ப நீங்களாவது உழைச்சு முடிஞ்ச பிறகு தமிழீழம் போவீங்கள் தானே? மற்றாக்கள் போல விடுமுறைக்கு மட்டும் போகாமல்..?
ம்... புலிகள் தமிழீழத்தை பிரகடனம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி வரும் போதெல்லாம் உங்கை எத்தினை பேருக்கு மனசு திடுக்கு திடுக்கு எண்டு அடிச்சிருக்கும் எண்டு இப்ப விளங்குது...
[b][u]இவோன் எமது குடும்பம் மிகவும் வறிய குடும்பம். நான் ஒருவன் தான் வெளிநாட்டில் இருக்கிறேன். நான் எனது 15 வது வயதில் இங்கு வந்தேன் இங்கு வந்து 8 ம் வகுப்பில் இருந்து எனது கல்வியை இங்கு தொடர்ந்தேன் 3 வருடங்கள் தொடர்ந்து படித்தேன். மாலையில் உணவகத்தில் வேலை காலையில் பாடசாலை இப்படி எனது வாழ்க்கையை 3 வருடங்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஓட்டிப்பார்த்தேன் முடியவில்லை. எமது குடும்ப நிலைக்கு பெருந்தொகை பணம் தேவைப்பட்ட படியால் பாடசாலைக்கு முற்று புள்ளிவைத்துவிட்டு தொடர்ந்து வேலை செய்ய தொடங்கினேன். இன்று நான் எனக்கு இருந்த பொறுப்புக்கள் யாவற்றையும் தீர்த்துவிட்டேன். ஆனாலும் இன்றும் எனது குடும்பத்தவர்களை நான் தான் பார்த்துவருகிறேன்.
<span style='font-size:25pt;line-height:100%'>எனக்கு வதிவிட அனுமதி பற்றி கவலை இல்லை ஏனெனில் எனக்கு ஜேர்மனிய தேசிய இன உரிமை கிடைத்துவிட்டது</span>.
நான் 11 வருடங்கள் இங்கு வாழ்ந்து பழகிவிட்டேன். இங்கு பெறும் ஊதியம் போல் இலங்கையில் ஒரு போதுமே பெற முடியாது. இதனால் எனக்கு அங்கு சென்று வாழ விருப்பமில்லை. ஏனெனில் எமது ஏழ்மை நிலையை போக்கணும் என்றால் நான் இங்கு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அதனால் அங்கு சென்று வாழ்வது என்பது என்னால் முடியாத காரியம்.

