Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குதிரையை சாட்சியாக்கி திருமணம் செய்த ஜோடி
#1
கடவுளையோ, அக்னியையோ, பெரியவர்களையோ சாட்சியாக வைத்து திருமணம் செய்வது வழக்கம்.

ஆனால் வெளிநாட்டு காதல் ஜோடி ஒன்றுக்கு குதிரை சாட்சியாக வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்று நூதன ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையை செயல்படுத்தி காட்டி அவர்கள் அசத்தவும் செய்தனர்.

கேரளாவில் நடந்த இந்த நூதன திருமணம் பற்றிய விவரம் வருமாறு:-

கனடா நாட்டைச் சேர்ந்தவர் கால்நடை பெண் டாக்டர் கரோல் இவரது காதலர் டக்ளஸ். இவர்கள் கேரள மாநிலம் கோவளத்துக்கு சுற்றுலா வந்தனர். வந்த இடத்தில் இவர்களுக்கு திருமண ஆசை வந்தது.

இந்து முறைப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மேலும் தனக்கு பிடித்த மிருகமான குதிரை சாட்சியாக இருக்க வேண்டும் என கரோல் கூறினார்.

அவர்கள் விருப்பப்படி கோவளம் முள்ளூர் தோட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. குதிரை முன்பு நின்று கரோலின் கழுத்தில் டக்ளஸ் தாலி கட்டினார்.

பின்னர் அதே குதிரையில் ஏறி அந்த ஜோடி கோவிலை வலம் வந்தது. இந்த நூதன திருமணத்தை ஏராளமானோர் கூடி நின்று ரசித்தனர். கைதட்டி ஆரவாரம் செய்ததுடன் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். கரோல்-டக்ளஸ் தேனிலவு கேரளாவிலேயே நடக்கிறது.

நூதன திருமணம் முடிந்து கரோல் கூறியதாவது:-

எனக்கு குதிரை மீது அதிக பாசம் உண்டு. எனது வீட்டில் 3 குதிரைகளை வளர்த்து வருகிறேன். அதனால் குதிரையை சாட்சியாக வைத்து திருமணம் செய்ய ஆசைப்பட்டேன். அதன்படி திருமணம் செய்து கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Thanks:Malaimalar..........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
குதிரையை சாட்சியாக்கி திருமணம் செய்த ஜோடி - by SUNDHAL - 02-25-2006, 03:53 PM
[No subject] - by iniyaval - 02-25-2006, 07:11 PM
[No subject] - by sankeeth - 02-25-2006, 08:02 PM
[No subject] - by Rasikai - 02-25-2006, 08:32 PM
[No subject] - by RaMa - 02-26-2006, 05:56 AM
[No subject] - by தூயவன் - 02-26-2006, 07:00 AM
[No subject] - by SUNDHAL - 02-26-2006, 03:17 PM
[No subject] - by ப்ரியசகி - 02-26-2006, 06:00 PM
[No subject] - by அனிதா - 02-26-2006, 06:34 PM
[No subject] - by Shankarlaal - 02-26-2006, 06:43 PM
[No subject] - by Mathan - 02-26-2006, 08:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)